(குறிஞ்சி மலர் 74 தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்அத்தியாயம் 26 தொடர்ச்சி
அன்று மதுரைக்குத் திரும்புவதாக இருந்த அரவிந்தன், மீனாட்சிசுந்தரம், முருகானந்தம் மூவரும் குறிஞ்சிப் பூக்காட்சிகளைச் சுற்றிப் பார்த்து மகிழ வேண்டுமென்பதற்காகப் பயணத்தை ஒருநாள் தள்ளிப் போட்டிருந்தார்கள். அன்றைக்கு அரவிந்தனும் முருகானந்தமும் காலை பத்து மணிக்குப் புகைப்பட நிலையத்தில் போய்ப் படங்களை வாங்கிக் கொண்டு வந்தார்கள். அரவிந்தனையும் பூரணியையும் சேர்த்து நிறுத்தி ஸ்டூடியோக்காரர் எடுத்த ...