image-44895

‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது

(புதிய புரட்சிக்கவிக்குச் சுரதாவின் அணிந்துரை தொடர்ச்சி) ‘புதிய புரட்சிக்கவி’க்குப் பழ.நெடுமாறன் அணிந்துரை: சுவையினுக்குச் சுவை கூட்டுகிறது பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ‘புரட்சிக்கவி’ என்னும் தலைப்பில் ஒரு குறுங்காப்பியத்தை 1937ஆம் ஆண்டில் இயற்றினார். ‘பில்கணியம்’ என்னும் வடமொழி நூலைத் தழுவி இந்நூல் எழுதப்பட்டது என அவரே குறிப்பிட்டுள்ளார்.           கி.பி. 10ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத்தேவர் ‘சீவகசிந்தாமணி காப்பியத்தைப் படைத்துத் தழுவல் இலக்கியம் ...
image-44735

தமிழ்நாடும் மொழியும் 10 – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 9 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் கடைச்சங்கக் காலம் தொடர்ச்சி பண்டைத்தமிழர் இயற்கைப் பொருள்களையே தெய்வங்களாக வழிபட்டனர். குறிஞ்சி நிலக் கடவுள் முருகன்; முல்லை நிலக் கடவுள் மாயோன்; மருதநிலக் கடவுள் இந்திரன்; நெய்தற் கடவுள் கடற்றெய்வம்; பாலை நிலக் கடவுள் கன்னி. குழலும், முழவும், யாழும், பறையும் கடவுள் வழிபாட்டின்கண் ஒலித்தன. உழவு, கைத்தொழில், வாணிகம் முதலிய தொழில்கள் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கின. ...
image-44611

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 481-485

(தமிழ்ச்சொல்லாக்கம்: 476-480 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 481-485 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் ...
image-44629

4. குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 – சி.பா.

(குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 3/5  தொடர்ச்சி) குழந்தை இலக்கியம் வளர்த்த கவிமணி 4/5 அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்குஇன்னார் இனியாரும் உண்டோ அம்மா?மாற்றம் உலகின் இயற்கையென-இங்குமாந்தரும் கண்டு தெளிந்திடவோ,போற்றும் இறைவன் இம் மாமதியம்-விண்ணில்பூத்து கிலவ விதித்தனனே! என்ற பாடல்களில் சிறந்த கருத்தும், கூனக் கிழவி நிலவினிலே-ராட்டில்கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே-காந்திமாமதி யோங்கி வளருதம்மா! என்ற பாடலில் ...
image-44876

வள்ளலார்    வழியே   வாழ்விற்கறம் ! – புலவர் பழ.தமிழாளன்

வள்ளலார்    வழியே   வாழ்விற்கறம் ! 1. அருட்பே   ரொளியே  இறையெனக்                          கொண்ட   அருளகத்தார் / உருவ  வழிபா  டொழித்தசீர்   ஒப்பில்                                              ஒளிமுகத்தர் / கருவில்  திருவினைக்  கையகம்                            பெற்ற  கலைநிறைஞர் / அருட்பா  படைத்தே  அதன்வழி  வாவென்                                   (று)   அழைத்தனரே ! / 2. சாதி     சமயச்   சழக்கை   ஒழித்துச்                                               சமமெனவே / ஓதியும்  மக்களை  ஒன்று  படுத்திய                                             ஒண்மையராம் / வேதியர்  கூற்றை  விலக்கியே  வாழ்ந்த                                         நல்    ...
image-44799

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 12

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 11 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 4. மொழி மாற்றங்கள் ஒரு சொல் ஒரு பொருளையே உணர்த்துவதுதான் முறை. ஒரு சொல் தோன்றுங்காலத்து ஒரு பொருளை உணர்த்தவே தோன்றியது. ஆனால் காலப்போக்கில் ஒரு சொல் பல பொருளை உணர்த்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. மாந்தரின் சோம்பரும், புதிய சொல் படைக்கும் ஆர்வமும் ஆற்றலும் இன்மையும், இந் நிலை ஏற்படக் ...
image-44863

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” – சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்!

“தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” சென்னையில் எழுச்சியுடன் நடந்த கருத்தரங்கம்! “தமிழே அருச்சனை மொழி! தமிழரே அருச்சகர்!” என்ற தலைப்பில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம், தெய்வத் தமிழ்ப் பேரவை ஆகியன சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் எழுச்சியுடன் நடைபெற்றது. அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதகங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அருச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது - தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அருச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில்  தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச், சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம்  அட்டோபர் 12 அன்று மாலை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்ற இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்குத், தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை தாங்கினார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் தோழர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்றார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், ஆவடிச் செயலாளர் தோழர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவைச் செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான ஐயா பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார்.  முன்னதாக, அனைத்துச் சாதியினரும் அருச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் வெளி வந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன் அவர்கள் எழுதியுள்ள “கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு - ஆதரிக்கும் திராவிட மாடல்” நூலின் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. ஐயா பெ. மணியரசன் நூலை வெளியிட, திருக்கயிலாய வாத்தியக் குழு திரு.கோசை நகரான், ஆசீவகம் சமய நடுவத்தலைமை நிலையச் செயலாளர் திருவாட்டி. கீதா, ம.பொ.சி. பெயரன் திரு. திருஞானம், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சீனிவாசன், த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்வில், தமிழ்த்தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் திரு. வியனரசு, தமிழ்த் தன்னுரிமை இயக்கத் தலைவர் திரு. இராமச்சந்திரன், தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், திரளான தமிழின உணர்வாளர்களும், ஆன்மிக மெய்யன்பர்களும் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்டராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் பாவலர் கவிபாசுகர், பொதுச்செயலாளர் பாவலர் முழுநிலவன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம் முதலான திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.  நிறைவில், த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் தோழர் செயப்பிரகாசு நன்றி கூறினார். ================================= தலைமைச் செயலகம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ================================= பேச: 9443918095, புலனம் : 9841949462 முகநூல் : www.fb.com/tamizhdesiyam ஊடகம் : www.kannottam.com இணையம் : www.tamizhdesiyam.com சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
image-44858

தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை- தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள்

தமிழ் நாட்டு அரசின் கல்விக் கொள்கை தாய்த்தமிழ்க் கல்விப் பணியின் பரிந்துரைகள். “அறிவுடையார் எல்லாம் உடையார்” என்பது ஐயன் திருவள்ளுவரின் கூற்று. ஒரு சமூகத்தின் அறிவுசார் வளர்ச்சியே அச்சமூகத்தின் வளமையின் அளவீடு. அறிவு பெறும் வாயில் கல்வி. “கல்வி சிறந்த தமிழ் நாடு” எனும் சிறப்புக்குரிய தமிழ் நாட்டுக்கென, தமிழ் நாட்டரசு, தனித்த ஒரு கல்விக் கொள்கையை. உருவாக்கி வெளியிடுவது ...
image-44851‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி' />

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி 17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன. ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் ...
image-44609

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 476-480

(தமிழ்ச்சொல்லாக்கம்: 472-475 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 476-480 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் ...
image-44825

ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–10

(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 9 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 10 நெய்தல்‌ நிலம்‌ தமிழ்‌ நாடு. நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில்‌ “சோழ நாட்டுக்‌ கடற்கரை, சோழ மண்டலக்கரை என  வழங்கிற்று. அஃது ஐரோப்பியர்‌ நாவில்‌ சிதைந்து கோரமண்டல்‌ கரையாயிற்று. பாண்டி நாட்டுக்‌ கடலில்‌ நினைப்பிற்‌ கெட்டாத. நெடுங்‌ காலமாக நல்‌ முத்து விளைந்தமையால்‌ . ...
image-44847தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும்  பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்' />

தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும்  பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! தி.மு.க.பொதுக்குழு கூடித், தலைவரையும் பிற பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது அல்லது நியமித்துள்ளது. திமுகக் கட்சித் தலைவராக முதலமைச்சர் மு.க.தாலின், திமுகப் பொதுச்செயலாளராகத் துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், திமுகத் துணைப் பொதுச்செயலாளர்களாகக் கனிமொழி, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, அந்தியூர் செல்வராசு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளராக ...