(தமிழ்ச்சொல்லாக்கம் 106-110 தொடர்ச்சி)
(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)
111. Room – சிற்றில்
அறை - அடி, சொல், சிற்றில் (Room), திரை, பாறை, மறை, மலையுச்சி.
நூல் : தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 2
நூலாசிரியர் : பு: த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி ...