(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12. தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 5
சோதியென்னும் கரையற்ற வெள்ளம்தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்குமைந்து சோரும் கொடுமையிதென்னே! -- பாரதி
மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் ...