image-36860

எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்? – மறைமலை இலக்குவனார்

எங்கு மறைந்தீர்? ஏன் பிரிந்தீர்?   பைந்தமிழின் பலதுறையும் ஆய்ந்தறிந்த அறிஞரே! கண்ணீரைப் பெருக்கிக் கலங்கிக் கரைந்து சிந்தை எல்லாம் நைந்திடவே எம்மைநீர் பிரிந்ததுவும்  முறையா? சொல்லாண்டு பொருளாண்டு எழிலார்ந்த காப்பியத்தின் சுவையாண்டு  திறனாய்ந்து நூல்பலவும் தந்தீரே! பல்லாண்டு பல்லாண்டு பாடவொரு வழியின்றி நில்லாமை நெறியெமக்குச் சொல்லாமல் சொன்னீரே! நவையெதுவும் இரா மோகன் புகழ்கொண்ட பேராசான்   முகம்கண்டு மகிழ்ந்திடவே வழியினிமேல் இல்லையா? கூற்றுவன் தொல்லையா? நவையற்ற நறுந்தமிழால் நலம்விளைக்கப் பல்காலும் திறனாய்வுத் துறைமேவித் தரமான நூலியற்றி அறிவார்ந்த பொருள்பலவும் செறிவாகப் புலப்படுத்தும் அரியகலை கற்றவர்யார்? முறையான புலமையால் தெரியாத பொருள்யாவும் விரிவாக உரைப்பவர்யார்? அன்பான உரையாடல் அகங்கனிந்த நட்பாடல் பண்பார்ந்த உறவாடல் பரிவுமிகு கண்ணோட்டம் அத்தனையுமே ...
image-36857

முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்!

முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்! எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019)  காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை.  ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று ...
image-36851

வந்தவாசியில் முப்பெரு விழா

வந்தவாசியில் முப்பெரு விழா   வந்தவாசி அரசுக் கிளை  நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நேற்று (வைகாசி 27, 2050/  சூன் 10, 2049) முப்பெரு விழா நடைபெற்றது.         இவ்விழாவிற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் மு.முருகேசு தலைமையேற்றார். கிளை நல்நூலகர் பூ.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.        இராமலிங்கம் எரிநெய் நிலைய உரிமையாளர் இரா.சிவக்குமார், அரசுக் கிளை நூலகர் க.மோகன் ...
image-36847

கருத்துக் கதிர்கள் 09-11: இலக்குவனார் திருவள்ளுவன் [09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை. 10. இளைய உறுப்பினருக்கு அமைச்சர் பதவி தருவதில் தவறில்லை. 11. இராசன் செல்லப்பாவின் குரல் சரியே! ]

கருத்துக் கதிர்கள் 09-11  09. மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டுத் தமிழர்களின் பங்களிப்பு தேவை.  பா.ச.க.வின் கடந்த ஆட்சியிலும் அமைச்சரவையில் தமிழர்களுக்கு உரிய முதன்மை தரவில்லை. இப்பொழுது அடியோடு பங்களிப்பு தரவில்லை. பிற மாநிலத்தைச் சேர்ந்த தமிழர் இருவர் அமைச்சரவையில் இருப்பது மகிழ்ச்சிதான். எனினும் இவர்களைத் தமிழ்நாட்டின் சார்பாளர்களாகச் சிறிதும் கருத இயலாது.  இன்றைய நிதியமைச்சர் முன்பு பதவி உறுமொழியைக் கன்னடத்தில் எடுத்துவிட்டுத் தன்னைக் கன்னடப் பெண்ணாகத் தெரிவித்த ...
image-36843

தந்தை பெரியார் சிந்தனைகள்- 4. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 3 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் - 4 கடவுள் - பொது ஒவ்வொரு சமயமும் கடவுளைப் பற்றிக் கருதுகின்றது. எல்லாச் சமயங்களும் உருவழிப்பாட்டைச் சார்ந்தவையாயினும் இதில் சைவமும் வைணவமும் தனித்தன்மை வாய்ந்தவை. (1) சைவம்: சைவம் சிவபெருமானையும் சிவக்குமாரர்களையும் கடவுளர்களாகக் கொண்டது. இந்திரியங்களின் துணைக் கொண்டு அறியப்பெறுவது உலகம். இவ்வுலகை உள்ளபடி காண்பவன் கடவுளையே காண்கின்றான். ...
image-36611

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 141-150 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 151-160 (குறள்நெறி)  நம்பியவர் மனைவியை நாடாதே! பிறன்மனை புகுந்து  சிறியோன் ஆகாதே! பிறர் மனைவியை நாடாதே! பிறர் மனைவியை விரும்பாதே! அறவாழ்வு வேண்டுமெனில், பிறர்மனைவியை விரும்பாதிரு!   (அறத்தைத் தழுவப்,) பிறர் மனைவியைத் தழுவாதே!   பிறர் மனைவியை விரும்பா அறம் புரி! தோண்டுநரைத் தாங்கும் நிலம்போல் இகழ்வாரைத் தாங்கு! பிறர் தீங்கைப் பொறுத்தலினும் மற! அறிவின்றித் தீங்கிழைப்போரைப் பொறு!  (தொடரும்) இலக்குவனார் ...
image-36838

செம்மொழி என்னும் போதினிலே …! – முனைவர் ஒளவை நடராசன்

(சூன் 6 -  தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட  நாள்) “ஆங்கிலம் பேசும் அமெரிக்க நாட்டுப் பேராசிரியராகிய நான் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் வடமொழியில் பட்டம் பெற்றேன். இலத்தீன், கிரேக்க செம்மொழிகளை அறிந்து கற்றேன். கிழக்காசிய மொழிகள் துறையில் பணியாற்றியதால் இந்திய மொழிகள், பிற ஆசிய மொழிகளின் இலக்கியச் சிறப்புகளையும் அறிந்தேன். பன்மொழிப் புலமையின் பின்னணியில் செம்மொழி தகைமையைச் சீர்தூக்கும் ...
image-36833

இலக்கிய அமுதம் – பெரியசாமி தூரனின் எழுத்துகள்

வைகாசி 26, 2050 ஞாயிறு 09.06.2019 மாலை 5.30 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017  இலக்கிய அமுதம்  பெரியசாமி தூரனின் எழுத்துகள் சிறப்புரை : ச.கண்ணன் தலைமை : சு.சுந்தரராசன் அன்புடன் எதிர்நோக்கும் அ.இராமச்சந்திரன் தொடர்பிற்கு : 9442525191 ;  9791069435
image-36826

குறுந்தொகை: தொடர் சொற்பொழிவு தொடக்க விழா

ஆனி 01, 2050 ஞாயிறு 16.06.2019 மாலை 4.00 வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம் தலைநகர்த் தமிழ்ச் சங்க வளாகம் குறுந்தொகைத் தொடர் சொற்பொழிவு தொடக்க விழா தலைமை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி தொடக்கி வைப்பவர்: முனவர் ஆறு.அழகப்பன் தொடர் சொற்பொழிவாளர்: முனைவர் முகிலை இராசபாண்டியன்
image-36818

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்

தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை  “தமிழ் படித்தால் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக் கிடைக்குமா?” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் ...
image-36813

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் – முனைவர் மறைமலை இலக்குவனார்

புதிய கல்விக் கொள்கையும் இந்தித் திணிப்பும் இந்திய விண்வெளியியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கத்தூரிரங்கன் தலைமையிலான குழு ‘புதிய கல்விக்கொள்கை 2019’ என்னும் தலைப்பிலான கல்விக் கொள்கை வரைவு ஒன்றினை அண்மையில் பொறுப்பேற்றுள்ள மனிதவள மேம்பாட்டு மந்திரி இரமேசு பொக்ரியாவிடம் வழங்கியுள்ளது.  ‘வரைவு’ என்றால் நடைமுறைப்படுத்துவதற்கான பரிந்துரை என்று பொருள்.  இந்தக்குழு இதற்கு முந்தைய அமைச்சர் சவடேகரால் 24-6-2017-இல் ...
image-36808

தந்தை பெரியார் சிந்தனைகள்- 3. முனைவர் ந. சுப்பு(ரெட்டியார்)

(தந்தை பெரியார் சிந்தனைகள் 2 இன் தொடர்ச்சி) தந்தை பெரியார் சிந்தனைகள் 3 (ஆ) பிறிதொரு சமயம்: தந்தை பெரியாரிடம் “ஆத்திகர் ‘கடவுள் உண்டு’ என்கின்றார்கள். தாங்கள் ‘கடவுள் இல்லை’ என்கிறீர்கள். அவர்கள் ஏதோ ஒரு பொருளை நினைத்து உண்டு என்கிறார்கள். அவர்கள் பேச்சில் உண்டு என்பதன் எழுவாய் ‘கடவுள்’ நீங்கள் ‘இல்லை’ என்கிறீர்கள்? எந்தப் பொருளை நினைத்து ...