பங்குனி 08, 2050 வெள்ளி மார்ச்சு 22, 2019 மாலை 6.00
அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007
'வள்ளுவரின் ஆரியச் சிந்தனை ஓட்டம்' என்னும் திரிபு வாதத்திற்கு எதிர்ப்பு
தலைவர்: முனைவர் பொற்கோ
பெரியார் நூலக வாசகர் வட்டம்
(குறிப்பு : நிகழ்ச்சித் தலைப்பு வள்ளுவரின் வடமொழிச் சிந்தனை யோட்ட எதிர்ப்பு என உள்ளது. அப்படியானால் வள்ளுவருக்கு ...
திருக்குறள் சுட்டும் தீமைகள்
முன்னுரை
உலகப் பொதுமறையான திருக்குறள் ஏறத்தாழ 2000 வருடங்களுக்கு முன்பு தெய்வப் புலவரான திருவள்ளுவரால் எழுதப்பட்டது என்பது தமிழர்களான நமக்குத் தெரியும். அதே திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவ்வதிகாரங்களில் மொத்தம் 3 அதிகாரங்கள் தீமையான குற்றச் செயல்கள் ஒட்டி எழுதப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரையில் அந்த 3 அதிகாரங்களில் ...
இடைத்தேர்தல்களில் பதவி பறிக்கப்பட்டவர்களுக்கே வாக்களியுங்கள்!
இந்தியா மக்களாட்சி நாடு என்று சொல்லப்பட்டாலும் மத்திய மாநில அரசுகளே மக்கள் நாயகத்திற்கு எதிராகச் செயல்படுவதுதான் வழக்கமாக உள்ளது. தேர்தல் மூலம்தான் மக்கள் நாயகமே நிலை நாட்டப்படுகிறது. ஆனால் தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையமே மக்களாட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நடந்து கொள்வதில்லை. ஆளும் தலைமையின் தாளத்திற்கேற்ப ஆணையம் ஆடுவதால் மக்களாட்சியும் ...
இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்!
பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) - அவரின் பா.ச.க. கட்சியைத் - தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை. இந்தச் ...
இலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள்
தமிழ்ப்போராளி பேராசிரியர் இலக்குவனார் தமிழைக்காக்கவும் பரப்பவும் பல வகைகளில் போராடித் தம் வாழ்க்கையைச் செலவிட்டவர். அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டியும் தட்டிக் கேட்டும் செயல்பட்டதுடன் அரசிற்குத் தமிழ் வாழவும் தமிழர் வாழவும் மக்களாட்சி நிலைக்கவும் அறிவுரைகளை வழங்கியுள்ளார்; வேண்டுகோள்கள் விடுத்துள்ளார். தம் கட்டுரைகள், நூல்கள், சொற்பொழிவுகள் இதழ்கள் மூலம் அவ்வப்பொழுது தக்க ...
ஐ! ஐ! ஐ! தேர்தல் வந்தாயிற்று!
அறமும் பிறவும் இனிமேல் அழகாய்க் கழுவேறும் கொள்கையை விளக்க சிறு குறு கூட்டம் ஆர்ப்பரிக்கும் சகலமானவருக்கும் சாராய விருந்து நிறைவேறும் சாதியும் சடங்கும் சிறிது காலம் முன்னிலை பெறும் பெயர் சூட்டலும் பிள்ளை கொஞ்சலும் பித்தமாக்கும் காணும் போதெல்லாம் கனிவான விசாரிப்பு கடமையாகும் மாவட்டம் வட்டம் ஒன்றியங்களைச் சந்திப்பது இயல்பாகும் ...
கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது
பரமக்குடி அரசு கலைக்கல்லூரியும் ‘வளரி’ கவிதை இதழும் இணைந்து நடத்திய கவிப்பேராசான் மீரா விழாவில், தமிழில் குறும்பா(ஐக்கூ) கவிதைகள் குறித்த தொடர் செயல்பாடுகளுக்காகக் கவிஞர் மு.முருகேசுக்குக் கவிப்பேராசான் மீரா விருது வழங்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக மானாமதுரையிலிருந்து வெளிவரும் ‘வளரி’ கவிதை இதழ் சார்பில், தமிழ்ப் படைப்புவெளியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச்செய்துவரும் ...
உ.வே.சா. உலகத் தமிழர் விருது
சிங்கப்பூர் முசுதபா தமிழ் அறக்கட்டளை வழங்கும் உ.வே.சா. உலகத் தமிழர் விருதும், உரூ. ஓர் இலட்சம் பரிசுத் தொகையும் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.இம்முறை 'சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு' எனும் தலைப்பு வழங்கப்படுகிறது.இத்தலைப்பில் சிறந்த ஆய்வுரையை 150 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி பொதிக்கோப்பு(PDF) வடிவ ஆவணமாக suriyaudayam@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.அனுப்ப வேண்டிய ...
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி
நிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை
நூல் வெளியீடு: பழ.நெடுமாறன்
படத்திறப்பு: கி.வேங்கடராமன்
சிறப்புரை:
பெ.மணியரசன்
நாஞ்சில் நாடன்
ஏற்புரை: முனைவர் பி.(இ)யோகீசுவரன்
அழைக்கும் அரசி பதிப்பகம்
பங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 மாலை
5.30
திருமால் திருமண மண்டபம், அம்பத்தூர், சென்னை 53
நூல் வெளியீடும் விருது வழங்கலும்:
தோழர் இரா.நல்லகண்ணு
விருது பெறுநர்:
தொல்காப்பியர் விருது:
முனைவர் இரா.இராசேந்திரன் (தேவிரா)
திருவள்ளுவர் விருது:
முனைவர் இ.எலியாசு
இலக்குவனார் விருது:
முனைவர் க.மலர்விழி
கவிஞர் செம்பை சேவியர், ஒருங்கிணைப்பாளர்
புவலர் உ.தேவதாசு, செயலர்
இலக்குவனார் இலக்கியப் பேரவை
சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை:
3/3
பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் ...