image-26605

எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! – நீரை. அத்திப்பூ

எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வங்கியில் கணக்கு வை தம்பீ வாழ்க்கையில் உனக்குப் பலம் தம்பீ எங்கிருந்தாலும் சேமிப்பாய் எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வீணாய்ச் செலவுகள் செய்யாதே வெற்றாய்ப் பொழுதைக் கழிக்காதே தானாய் வருமென நினைக்காதே தகுதி உயர்த்திட மறக்காதே! சிறுசிறு துளியே பெருவெள்ளம் சேர்த்துப் பார்த்தால் அது சொல்லும் வருமானத்தைப் பெருக்கிடுவாய் வாழ்வில் இமயப் புகழடைவாய்! இன்றே தொடங்கிடு சேமிப்பு இனிமை வாழ்வுடன் பூரிப்பு நன்றே நினைத்திடு வென்றிடுவாய் நாளைய தலைமை கொண்டிடுவாய்! - நீரை. அத்திப்பூ ஆசிரியர்: தகவல் முத்துகள் நீர்முளை ...
image-26599

கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் – உருவாக்கப்பட்டது

கீழடி அகழாய்வுப் பாதுகாப்பு இயக்கம் - உருவாக்கப்பட்டது   கீழடி அகழாய்வில் கிடைக்கப் பெற்ற தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க 5000த்திற்கும் அதிகமான தொல்லியல் பொருட்களைத் தமிழக மக்கள் எளிதில் கண்டுணரும் வண்ணம், கீழடித் தொல்லியல் பொருட்களைத் தமிழகத்தில் வைத்து பாதுகாக்கும் நோக்கோடு கடந்த புரட்டாசி 16, 2047 / 02.10.2016 அன்று பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து ...
image-26602

முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது

முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணனுக்கு விருது   அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்திற்கு அன்பு பாலம் இதழ் 63ஆம் ஆண்டு விழாவில் சிறந்த அமைப்புக்கான விருதினை  மூத்த வழக்கறிஞர் காந்தி புரட்டாசி 16, 2047 / 2.10.2016 அன்று பாலம். கல்யாணசுந்தரனார் முன்னிலையில் வழங்க எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் முனைவர். நல்லாமூர் கோ.பெரியண்ணன் பெற்றார்.   உடன் யோகா பரமசிவன், தஞ்சை எழிலன், பெ.கி.பிரபாகரன், தகடூர் ...
image-26608

கூப்பிடு கூப்பிடு வீரர்களை! – காசி ஆனந்தன்

கூப்பிடு கூப்பிடு வீரர்களை!   பாண்டிய மன்னவன் சோழன் பனிவரை பாய்ந்து கலக்கிய சேர மகன் ஈண்டு முளைத்த குலத்தில் எழுந்தனை! ஏடா தமிழா! எடடா படை! கூண்டுக் கிளிநிலை எத்தனை நாள்வரை? கூப்பிடு கூப்பிடு வீரர்களை! ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை? கோட்டுப் புலிக்குலம் வாழக் குகையுண்டு! குருவிக்குக் கூடு மரத்திலுண்டு! காட்டு வயற்புற நண்டுக்குப் பொந்துண்டு! கஞ்சல் எலிக்கோர் குழியுமுண்டு! கோட்டை அமைத்துக் கொடியொடு வாழ்ந்தவர் குலத்துக்கொரு ...
image-26568

இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி 01- 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

1-10 இலக்கியங்கள் கூறும் தமிழர்க்கான காவிரி  ‘இந்தியத்தால் இழந்த காவிரி’ என்னும் கட்டுரை மூலம் முன்னரே, நமக்கே உள்ள காவிரியை நாம்  இழந்து விட்டதைக் குறித்து உள்ளோம்.     நமக்கே உரிமையான காவிரி குறித்து இற்றைநாள் தமிழ் இலக்கியங்கள் வரை ஆயிரக்கணக்கான குறிப்புகளை நாம் காணலாம். எனினும் பழந்தமிழ் இலக்கியங்களில்  உள்ள நூற்றுக்கணக்கான குறிப்புகளை நாம் இத் தொடரில் பார்க்கலாம்.   ...
image-26585

கீழடி அகழாய்வு – கருத்துக்களம், சென்னை

புரட்டாசி 23, 2047 / அட்டோபர் 09, 2016  பிற்பகல் 3.00  பனுவல் புத்தக அரங்கம், திருவான்மியூர் தஞ்சை கோ.கண்ணன்   அறிவாயுதம்  
image-26579

வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா, உள்ளகரம்,சென்னை 91

  உலக மகா குரு திருவருளொளி வள்ளலாரின் 194ஆவது தோற்றநாள் விழா   இடம்  2, இந்து குடியிருப்பு 2ஆவது குறுக்குத்தெரு உள்ளகரம், சென்னை 91   புரட்டாசி 19, 2047 -அட்டோபர் 05, 2016 காலை 10.00  : அகவல் முற்றோதுதல்   11.30:   நன்னெறி உரை:   இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர், அகரமுதல பன்னாட்டு மின்னிதழ்   1.00 : சிறப்பு அன்னதானம்   மாலை 6.00 : வள்ளலாரை வாசித்தேன் வாழ்க்கையை யோசித்தேன் தலைப்பிலான கட்டுரைப்போட்டியில் பங்கேற்று வெற்றி ...
image-26572

முருங்கை மரத்து வேதாளம் ! – உருத்திரா இ பரமசிவன்

முருங்கை மரத்து வேதாளம் ! வாழ்க்கை வாழ்வதற்கே !   வாழ்க்கை என்பது முருங்கை மரத்து வேதாளம் என்று வெட்டி வெட்டி எறிந்தாலும் நம் தோள்மீது அது ஏறிக்கொண்டே தான் இருக்கும். வாழ்க்கையை வெறுப்பது என்பது தான் அந்த வேதாளம். வாழ்க்கையை நோக்கி வரவேற்பு புன்னகை ஒன்றை வீசு எல்லா வேதாளங்களும் அணுக முடியாமல் ஓடியே போய்விடும். இப்போது எல்லா வேதாளங்களும் உன் காலடியில். உருத்திரா இ பரமசிவன்
image-26565

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 – க.வி.விக்கினேசுவரன்

தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 1/3 ஆசானே தெய்வம்! எனதருமைத் தமிழ் பேசும் உடன்பிறப்புகளே! ‘எழுக தமிழ்’ப் பேரணியில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தமிழ் மக்களின் ஒருமித்த குரலாக எமது உரிமைக் கோரிக்கைகளை வெளிப்படுத்தவும் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராக எமது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கும் எமது அரசியல் சார்ந்த எதிர்பார்ப்புகளை உலகறிய விளம்புவதற்கும் இங்கே கூடியிருக்கின்ற எனதருமை ...
image-26557

நான்கு காசு சேர்ப்பதற்காம்! – கெர்சோம் செல்லையா

நான்கு காசு சேர்ப்பதற்காம்!   ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதைத்தான் விரும்பும் காட்சி என்றார். காட்டிக் கொடுப்பதைத் திறமை என்றார்; கயமை கொள்வதும் உரிமை என்றார். நாட்டில் நன்மை செய்வதெல்லாம், நான்கு காசு சேர்ப்பதற்காம்; ஊட்டிக் கொடுக்கும் இந்நஞ்சை, ஒழிக்கும் வழிதான் இறையரசாம்! - கெர்சோம் செல்லையா