image-24372

வாழிய தமிழ்! – கவின்முருகு

வாழிய தமிழ் நல்லார் மடுத்த நற்றமிழே நாவில் சுவைக்கும் தீஞ்சுவையே எல்லா வளமும் நனிசிறக்க எல்லைப் பொதிகை இசைத்தமிழை கல்லா வொருவர் கயமையிலா காலத் தேயாம் நற்றமிழை பொல்லா மனதும் கற்றிடுமே போற்றி வாழ்த்தும் செந்தமிழே! கவிஞர் கு. நா. கவின்முருகு
image-24366

மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம்

மின்னூல் அறிமுகம் : கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் திரு. செயபாண்டியன் கோட்டாளம் அவர்கள் மிகவும் விரிவாகவும் ஆழங்குன்றாமலும் ஓர் அறிவியல் மின்னூல் படைத்துள்ளார். அதன் தலைப்பு: கோட்பாட்டு வேதியியலுக்கான அடிப்படைக் கணிதம் 316 பக்கம் கொண்ட விரிவான நூல். முழுக்கவும் படிக்காவிடினும் அதை இங்கும் அங்குமாகவாவது முழுதுமாகப் பாருங்கள். நான் பார்த்து மிகவும் வியந்தேன், மிகவும் நெகிழ்ந்தேன். வாழ்க ...
image-24340

இன்னமும் அந்த இரவு விடியவே இல்லை! பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! – பாகம் – 02

(பேரறிவாளன் குறிப்பேடு : தொடரும் வலி! – பாகம் 01 தொடர்ச்சி) 02 இன்னமும் அந்த இரவு விடியவே இல்லை! பேரறிவாளன் குறிப்பேடு - தொடரும் வலி!: பாகம் - 02   மறுபிறவியில் சிறிதும் நம்பிக்கையற்ற நான் எல்லா உயிர்களுக்கும் வாழ்வு ஒரு முறைதான் என்ற கொள்கையில் மிகுந்த நம்பிக்கை கொண்டவன். பேரறிவாளன் என்கிற மனிதன் பிறந்துவிட்டபின் அவன் ...
image-24364

பாலை நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

பாலை நிலத்தார் உணவு ஓய்மானாட்டுப் பாலைநில மக்களான வேட்டுவர், இனிய புளிங்கறி எனப்பட்ட சோற்றையும் ஆமாவின் சூட்டிறைச்சியையும் உண்டனர். (சி.ஆ.படை அடி:175-177). தொண்டைநாட்டுப் பாலைநில மக்கள் புல்லரிசியைச் சேர்த்து நில உரலில் குற்றிச் சமைத்த உணவை உப்புக் கண்டத்துடன் சேர்த்து உண்டார்கள். விருந்தினர்க்கு தேக்கு இலையில் உணவு படைத்தார்கள். (பெ.ஆ.படை அடி:95-100). மேட்டு நிலத்தில் விளைந்த ஈச்சங்கொட்டை ...
image-24361

நெய்தல் நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

நெய்தல் நிலத்தார் உணவு  ஒய்மானாட்டு நெய்தல் நிலத்தார் நுளைச்சி அரித்த கள்ளையும் உலர்ந்த குழல் மீனின் சூட்டிறைச்சியையும் உட்கொண்டனர். (சி.ஆ.படை அடி:156-163). தொண்டை நாட்டுப் பட்டினத்தில் (இக்கால மாமல்லபுரத்தில்) நெல்லை இடித்த மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியைச் சமைத்து உண்டனர். களிப்பு மிகுந்த ...
image-24357

மருத நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

மருத நிலத்தார் உணவு சோழ நாடு சோற்றுவளம் மிகுந்தது. நல்ல காய்கறிகள் மிக்கது. ஆதலின், சோணாட்டார் நல்ல அரிசிச் சோற்றையும் காய்கறிகளையும் நிரம்ப உண்டிருத்தல் வேண்டும். ஆயினும், சிலவே இந்நூலுள் குறிக்கப்பட்டுள்ளன. மருத நில மக்கள் கரும்பும் அவலும் குறிஞ்சி நிலத்தார்க்குக் கொடுத்து மான் தசையையும் கள்ளையும் பெற்றுக் கொண்டனர் என்பது பொருநராற்றுப்படையில் கூறப்பட்டுள்ளது. அடி:216-217. ஓய்மானாட்டு மருத ...
image-24343

சிறந்த வாழ்க்கை வாழுங்கள் ! – செல்வக்குமார் சங்கரநாராயணன்

சிறந்த வாழ்க்கை வாழுங்கள் !   சிறந்த வாழ்க்கை – சொல்லும் பொழுது எவ்வளவு அழகாக இருக்கிறது. நாக்கின் நுனி மேல் அண்ணத்தில் பட்டு ழகரத்தைச் சொல்லும்பொழுது அப்பப்பா அந்த தமிழ்ச் சுவைக்கு ஈடு இணை ஏதுமில்லை. நீங்களும் ஒரு முறை “சிறந்த வாழ்க்கை“ என்று சொல்லித்தான் பாருங்களேன், தற்காலிக இன்பத்தைத் தமிழால் துய்த்து மகிழலாம். ...
image-24354

முல்லை நிலத்தார் உணவு – மா.இராசமாணிக்கம்

முல்லை நிலத்தார் உணவு   தொண்டைநாட்டு முல்லை நிலத்தார் பாலையும் திணையரிசிச் சோற்றையும் உண்டனர். (பெ.ஆ.படை அடி:167-168). முல்லை நிலத்துச் சிற்றூர்களில் இருந்தவர் வரகரிசிச் சோறும் அவரைப்பருப்பும் கலந்து செய்த 'கும்மாயம்' எனப்பெயர் பெற்ற உணவை உண்டனர். (பெ.ஆ.படை அடி:192-195). நன்னனது மலைநாட்டு முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் ...
image-24347

குறிஞ்சி நிலத்தவர் உணவு – மா.இராசமாணிக்கம்

குறிஞ்சி நிலத்தவர் உணவு சோழநாட்டுக் குறிஞ்சி நிலமக்கள் தேனையும் கிழங்கையும் உண்டார்கள். பிற நிலத்தார்க்கும் விற்று மீன், நெய்யையும் நறவையும்(தேன்) வாங்கிச் சென்றார்கள் (பொ.ஆ.படை அடி:214-15). சிறப்பு நாள்களில் நெய் மிக்க உணவு உட்கொள்ளப்பட்டது. (குறிஞ்சிப்பாட்டு அடி: 304). நன்னனுக்குரிய சவ்வாது மலையில் அடிவாரத்தில் இருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்கள் திணைச்சோறும் நெய்யில் வெந்த இறைச்சியையும் உண்டார்கள். (மலைபடுகடாம் ...
image-24336

தமிழர் வருக! வருக!- இல.பிரகாசம்

தமிழர் வருக! வருக! தடந்தோள் களிரண்டும் புடைத்திட தமிழர் வருக! வருக! தமிழச்செங்கோல் உயாந்திட தமிழர் வருக வருக! தமிழர் நிலம் செழித்திட தமிழர் செவ்வேல் உயர்த்தி தடமதிர வருக வருக! தமிழ் பண்மொழி காத்திட தமிழர் புகழ்நிலை பெற்றிட தமிழர் வருக வருக! தமிழர் களிப்புற் றிருந்திட தமிழர் சமர்க்களம் வருக! தமிழர் தம்திறம் கொணர்ந்திட தமிழர் ஆர்ப்பரித்து வருக! தமிழ் வீரர்அணி யணியாய் தமிழுரம் கொண்டெழுந்து வருக! தமிழர் தம்மார்பில் வீரவடுக்களை தாங்கி அழியாப் புகழ்பெற்றிட திமிரும் அயலான்கொம் பினையடக்க திரண்ட ...
image-24332

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா நினைவூட்டு அழைப்பு

    வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப்பேரவை 2016 ஆண்டுவிழாவின் பகுதியாகத் ”தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா” விந்தம் தோட்ட (Wyndham Garden) விடுதியில் ஆனி 20,2047 /  சூலை 4- ஆம் நாள் திங்கள் கிழமை நடக்கவுள்ளது. சொற்பொழிவுகள், கவிதைகள், கலந்துரையாடல் ஆகியவை நடைபெறும். தனித்தமிழ் இயக்கம் ஏன் எழுந்தது? அப்போதிருந்த சூழல் என்ன? அவர்கள் செய்தது என்ன? அவ்வியக்கத்தினால் ஏற்பட்ட பலன் என்ன? தற்போதைய சூழலில் ...
image-24326

திருக்குறள் ஒப்புயவர்வற்ற நூல் – க.த.திருநாவுக்கரசு

திருக்குறள் ஒப்புயவர்வற்ற நூல்   திருக்குறள், மனிதன் ஒவ்வொருவனும் அடைய வேண்டிய குறிக்கோள் மட்டும் நன்மை பயப்பதாக இருந்தால் போதாது; அதை அடைவதற்கு அவன்மேற்கொள்ளும் செயல்முறைகளும் தூய்மையானவையாகவும் சிறந்தனவாகவும் இருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத்தும் ஒப்புயவர்வற்ற நூலாகும். திருக்குறள் மணி க.த.திருநாவுக்கரசு: ஒளிவிளக்கு: பக்கம்.15