சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 9
சிவனும் தென்னையும்
நீண்டிருக்கும், நீர்தரும் நீள்முடி கொண்டிருக்கும்,
ஆண்டிக்கும் வாழ்வளிக்கும் ,அன்பிருக்கும்,-தோண்டிடத்தான்
வேரிருக்கும் ,தொல்லை வெளியேறும் நற்றென்னை
பாரில் சிவனுக்கு ஈடு.
பொருள் :- சிவன் - தென்னை.
1)இறைவன் புகழ் நீண்டது. அதற்கு எல்லை கிடையாது. தென்னையும் நீண்டு வளர்ந்திருக்கும்.
2) சிவனை வணங்கத் திரு நீர் எனச் சிறப்பிக்கத்தகும் கங்கை நீர் கிடைக்கும். தென்னை இளநீர் தரும்.
3 ) ...