image-23204

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை!   தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில்  கலைஞர் கருணாநிதியால்  கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக்  கூற முடியாதே! சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும்? 'தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. ...
image-23196

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!   மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால்,  பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது  தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள ...
image-23184

தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை – கவிஞர் திருமலைசோமு

  தேர்தல் தெய்வம் தந்த வரம்  வாக்குரிமை என் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படைத் தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்ற சாலையில் திடீர் பள்ளம் பொறுத்துக் கொண்டேன் நேற்றுவரை தடையின்றி வந்த குடிநீர், மின்சாரத்திலும் குறைபாடு... பொறுத்துக் கொண்டேன். உண்ணும் உணவுப் பொருட்களின் விலையோ உச்சத்தில் அமைதி காத்தேன்.. இதோ என் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் வரமாய் ஒரு வாசல் திறக்கிறது.... குரல் ஏதும் எழுப்ப முடியாமல் சாமானியனாய் இருக்கும் எனக்கு விரல் அசைவில் எனக்கான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தேர்தல் எனும் ...
image-23181

விரலில் வைக்கும் புள்ளியே விடிவெள்ளியாகும்! – உருத்ரா

விரலில் வைக்கும் புள்ளியே  விடிவெள்ளியாகும்! நாட்கள் நெருங்கி விட்டனவே. அறிவு மிகுந்தோர் சிந்தனை செய்வீர். உள்ளம் உடையார் வெள்ளமெனப் பெருகுவீர். உணர்வு கேட்கும் வெளிச்சம் காண‌ இருள் மறைப்புகள் விலக்குவீர் விலக்குவீர். பொருளாய் பணமாய்ப் பாதை தடுக்கும் பாதகம் மறுப்பீர். தாயின் மணிக்கொடி பேய்களின் கையிலா? மக்கள் தத்துவம் மறைந்து போக தனிமனிதப் புள்ளிகள் நம்முள் பூதமாய் இங்கு நிழல்கள் காட்டும். பொது சமுதாயப் புனிதம் காக்க‌ கோவிலும் வேண்டா கடவுளும் வேண்டா! சாதியும் வேண்டா சதிகளும் ...
image-23177

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

ஏமாந்து போகாதே என்னன்புத் தமிழா! மோதியுமிழ் என்றுரைத்த பாரதியின் பாட்டினையும், சாதியில்லை என்றுரைத்த பெரியாரின் கூற்றினையும், காதினிலே வாங்காமல் கண் மூடிக் கிடப்பதனால், நீதிநெறி தவறாத தலைவர்கள் இல்லாமல், நாதியற்று நெஞ்சுடைந்து நற்றமிழன் சாகின்றான்!   போதிமர நீழல்கள் பொய்யாகிக் கருகியதால், தீதிலுயர் ஊழல்கள் தொய்வின்றிப் பரவியதால், சாதனைகள் செய்வதாகச் சத்தியங்கள் செய்து, சூதாட்டக் களமாகத் தேர்தலினை மாற்றி, வேதனையில் தமிழர்களை வீழவைத்துத் தூகிலேற்றி, பாதியுயிர் பறித்தெடுத்துக் குற்றுயிராய் நிற்கவைத்தார்! மீதியுயிர் போகும்முன் மனந்தெளிந்து ...
image-23174

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்!     வாக்குவங்கி அரசியலில் தோற்குது தமிழ்நாடு, தூக்கிலிங்கு தமிழன் மானத்தை ஏற்றிய துயர்பாரு, வாட்டுமிந்த நரகத்திலே வாழ்வதும் பெரும்கேடு, காக்குமந்தக் கடவுளுக்கும் இலவசம் தரும் நாடு! வாக்களித்த பின்னர் பாவம் கடவளுக்கும்கூட, சீக்கிரத்தில் கிடைத்திடுமே சுடலையின் திருவோடு!   வேட்டியின்றி வருபவர்க்கே வாக்கென்று சொல்லிப்பார்! வெட்கமின்றி வெறுந்தொடையுடன், விரசமான இழிநடையுடன், வலம்வருவோர் எண்ணிக்கையோ தாண்டும் பலநூறு! வீட்டுக்குள்ளே சாக்கடையை ஓடவிட்டு அதிலே, வெற்றுடம்புடன் படுத்துறங்கி சுகங்கண்டதன் பலனாய், வான்புகழைக் கொண்டதமிழ் ...
image-23089

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு! – வைகோ அழைப்பு

திருச்சியில் 11.5. அன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு திருச்சிக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர்! வைகோ அழைப்பு  தே.மு.தி.க. - மக்கள்நலக் கூட்டணி - த.மா.கா. சார்பில் திருச்சிராப்பள்ளியில் சித்திரை 28, 2047 / மே 11, புதன்கிழமை யன்று மாற்று அரசியல் வெற்றி மாநாடு  நடைபெறுகிறது.   இம்மாநாட்டில் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.   இது தொடர்பாக, ...
image-23340

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 7. ஆசிரியரை யடைதல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 6 தொடர்ச்சி) 7 7.ஆசிரியரை யடைதல்   அறிவினைத் தருபவ ராமா சிரியர். அறிவினைத் தருகின்றவர் ஆசிரியர் ஆவார். இருபா லாருந் தருவதற் குரியவர். ஆண், பெண் இருவரும் ஆசிரியர் ஆவதற்குத் தகுதி உடையவர்கள் ஆவர். அறிவு வகையா னாசிரி யர்பலர். பல வகையான அறிவினை வழங்குவதற்கு ஏற்ப ஆசிரியர்களும் பல வகையாக உள்ளனர். எவர்க்கு மொழுக்க மின்றியமை யாதது. ஆசிரியர்களுக்கு ...
image-23152

உலகத் தொல்காப்பிய மன்றம், தொடர்பொழிவு- 6, புதுச்சேரி

  வைகாசி 10, 2047 -23.05.2015 திங்கள் கிழமை மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை   உலகத் தொல்காப்பிய மன்றத்தின் புதுச்சேரிக் கிளையின் சார்பில் 'தொல்காப்பியம் - மரபியல்' என்ற தலைப்பில் ஆறாம்பொழிவு நடைபெறுகின்றது. பேராசிரியர் இரா. ச. குழந்தைவேலனார் சிறப்புரையாற்றுகின்றார். அனைவரும் கலந்துகொண்டு தொல்காப்பிய இன்பம் பெற அன்புடன் அழைக்கின்றோம்!
image-23166

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23 இன் தொடர்ச்சி) 24 இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24 தமிழகக் குடியரசு   அமெரிக்க நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவர் நம் அண்ணாவைக் காண வரவில்லை. அவர்தம் அன்புச் செயல்களில் கலந்து கொள்ளவில்லை. காரணம் தமிழகம் தனிக்குடியரசாய் விளங்கி தனது அறிவு நிரம்பிய தலைவரை அனுப்பி ...
image-23148

உலகத் தொல்காப்பிய மன்றம், குளித்தலை, தொடக்க விழா

  தமிழ்ப்பேரவை, குளித்தலை திங்கள்நிகழ்வு 21 உலகத் தொல்காப்பிய மன்றம், கரூர் மாவட்டக் கிளை, தொடக்க விழா  வைகாசி 01, 2047 -  21.05.2016 சனிக் கிழமை மாலை 5.30 மணிக்குக் குளித்தலையில் அமைந்துள்ள கிராமியம் அரங்கில் (பேருந்து நிலையம் அருகில்) உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கரூர் மாவட்டக் கிளை தொடக்க விழா நடைபெற உள்ளது. முனைவர் கடவூர் மணிமாறன், பாட்டரசர் கி. ...