image-29102

குதூகலித்தே ஆடுவாய் ! – கே. கமலசரசுவதி

குதூகலித்தே ஆடுவாய் ! குதித்தாடிக் குதித்தாடிக், குதூகலித்தே ஆடுவாய் ! குமிழ்ச் சிரிப்புக் காட்டியே, குறுநகையும் புரிவாய் ! குதித்தாடும் காலமிது, குறை எதுவும் வைக்காதே ! சிறை பூட்டும் காலமதில், கால் விலங்கும் பூட்டிடுவார். எதற்கென்றும் அஞ்சாதே ! எவரிடமும் கெஞ்சாதே ! குமிழ்ச் சிரிப்பை சதங்கையாக்கி, குதூகலமாய் நடனமிடு ! - கே. கமலசரசுவதி
image-29089

காவிரித் தாய் காப்பு முற்றுகை, தஞ்சாவூர்

காவிரித் தாய் காப்பு முற்றுகை இடம் : தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (வல்லம் சாலை) காலம் : தி.பி.2048 பங்குனி-15,  28.03.2017 செவ்வாய் காலை 10 மணி முதல் தமிழ்நாடு அரசே செயல்படு; இந்திய அரசைச் செயல்பட வை!   இந்திய அரசே! காவிரித்தீரப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை நீக்காதே! காவரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு! புதிய ஒற்றைத் தீர்ப்பாயத்திற்குக் காவிரி வழக்கை அனுப்பாதே! விளைநிலங்களில் எங்கேயும் எரிநெய்மம்(பெட்ரோலியம்), எரிவளி, நிலக்கரி எதுவும் எடுக்காதே! தமிழ்நாடு அரசே! மேற்கண்டகோரிக்கைகளைச் செயல்படுத்த இந்திய அரசை வலியுறுத்து; அரசியல் அழுத்தம் கொடு! காவிரிச்சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட பசுமை மண்டலமாக அறிவித்திடு! ஆறுகளைக்காலி செய்யும் மணல் விற்பனையை முற்றாக நிறுத்து! கட்டுமானப் பணிகளுக்கான மணல் எடுப்பது குறித்து, பரிந்துரை வழங்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திடு! உச்சவரம்பின்றி அனைத்து உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்!     தண்ணீரின்றிப் பயிர்அழிந்த நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ. 25,000  உதவித்தொகை  வழங்கு!  இதில் 5 காணிக்கு(ஏக்கருக்கு) மட்டும் என்ற வரம்பை நீக்கு!      தண்ணீரின்றிப் பயிர் செய்யாமல் தரிசாகப் போடப்பட்ட நிலங்களுக்கு காணிக்கு(ஏக்கருக்கு) உரூ.15,000 உதவித்தொகை வழங்கு! உழவுத்தொழிலாளர்குடும்பம் ஒன்றுக்கு ரூ.25,000 துயர் துடைப்பு நிதி வழங்கு! தண்ணீரின்றிப் பயிர் அழிந்ததைக் கண்டு பதைத்து நஞ்சருந்தியும், மாரடைப்பு ஏற்பட்டும் இறந்த உழவர் குடும்பத்திற்கு உரூ.15,00,000இழப்பீடு வழங்கு! காவிரித் தாய் காப்பு முற்றுகை மேற்கண்ட கோரிக்கைகளுக்காகக், கட்சி சார்பின்றிக் காவிரி உரிமை மீட்புக் குழு, 28.03.2017 முதல் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தொடர் முற்றுகைப்    போராட்டம் நடத்துகிறது. அனைவரும் வாருங்கள்! செய்தித் தொடர்பகம், காவிரி உரிமை மீட்புக் குழு இணையம்:www.kaveriurimai.com பேசி: 94432 ...

இலக்குவனார் இலக்கியப்பேரவையின் விழா, அம்பத்தூர்

மாசி 13, 2048 / ஞாயிறு / மார்ச்சு 26, 2047 மாலை 5.30 தமிழ்நடைப்பேரவையின் பதின்ம ஆண்டுவிழா பண்டாரகர் வ.சுப.மாணிக்கனாரின் நூற்றாண்டு நிறைவு விழா விருது வழங்கும் விழா தொல்காப்பியர் விருது : முனைவர் இரா.மதிவாணன் திருவள்ளுவர் விருது:     முனைவர் விவேகானந்த கோபால் இலக்குவனார் விருது:     மரு.தி.பழனிச்சாமி விருது வழங்குநர்:            முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் சிறப்புரை ...
image-29077

சுந்தரச் சிலேடைகள் 4. கோழியும் குழந்தையும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சிலேடை  அணி 4 கோழியும் குழந்தையும் உருளும், புரண்டோடும், உள்ளம் களிக்கத் தெருவோடிக் கூவிநிற்கும்  தேவைக்(கு)-இருளில் இரைதேடும், எல்லா இடமும் கழிக்கும் விரைகுழவி கோழியு  மொன்று . பொருள்-கோழி, குழந்தை கோழிபோலவே குழந்தையும் மண்ணில் உருண்டும் , புரண்டும் உடம்பை அழுக்காக்கும். தெருவினில் நின்று கூவும்.அதேபோலக் குழந்தையும் சிரிக்கும் உணவு  உண்ணக் காலநேரம் பார்க்காது.கண்ட இடங்களில் மலசலம் கழிக்கும். இவ்வாறாகக் கோழியும் , குழந்தையும் நடைமுறையில் ஒத்துப்போகின்றனர்.   கட்டிக்குளம்ஒ ...
image-29066

மறக்க முடியுமா? – பேராசிரியர் மா.இராசமாணிக்கனார் : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? பேராசிரியர் மா.இராசமாணிக்கனார்   நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் & தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர். மாசி 29, 1938 / 1907ஆம் ஆண்டு மார்ச்சு 12ஆம்  நாள் இவர் பிறந்தார். இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர் என்பதனால் அடிக்கடி பணி மாறுதல் பெற்றுச் சென்று கொண்டிருந்தார். அதனால் இராசமாணிக்கனாரின் தொடக்க நிலைப் படிப்பு ...
image-29073

வண்ணப் படம் – சந்தர் சுப்பிரமணியன்

வண்ணப் படம்   வண்ணம் தெளித்து வரைகின்றேன்! - நான் வரிசைப் பூக்கள் வரைகின்றேன்! கண்கள் கூட வரைகின்றேன்! - அதில் கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!   காட்டுப் புலிநான் வரைகின்றேன்! - அதன் கரத்தில் நகங்கள் வரைகின்றேன்! ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! - உடன் அருகம் புல்லும் வரைகின்றேன்!   கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! - ஒரு கோவில் கூட வரைகின்றேன்! வீட்டுச் சுவரில் மாட்டிவிட - நான் விரைவாய் வரைந்து தருகின்றேன்! - சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் ...
image-29064

கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) – சந்தர் சுப்பிரமணியன்

(கவிஞாயிறு தாராபாரதி 21 & 22 – தொடர்ச்சி) கவிஞாயிறு தாராபாரதி 23 (நிறைவு) வெறுங்கை என்பது மூடத்தனம் - உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்னும் இடித்துரை வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிஞர் தாராபாரதி. தமிழில் போற்றப்படவேண்டிய புலவர்களும் கவிஞர்களும் எண்ணிறந்தோர் உள்ளனர். அவர்களுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர் கவிஞர் தாராபாரதி. தன் நெருப்புச் சொற்களால் உயிர்ப்பு கொடுப்பவர் கவிஞர் தாராபாரதி.   ...
image-29059

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். – சீமான்

மத்தியப் பல்கலைக்கழகங்களையும் மாநில அரசின் அதிகாரவரம்பிற்குள் கொண்டுவரவேண்டும்.  ச.நே.ப. மாணவர் முத்துக்கிருட்டிணன் மரணத்திற்கு உரிய நீதி உசாவல் வேண்டும்.  - சீமான் வலியுறுத்தல் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்  'தற்போதைய வரலாறு' பாடத்தில் ஆய்வு மேற்கொண்டிருந்த சேலம் மாணவர் முத்துக்கிருட்டிணன் தற்கொலை செய்துகொண்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது ...
image-29057

இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு

பங்குனி 12, 2048  சனிக்கிழமை  25-03-2017  மாலை 6.00  இலக்கியச் சிந்தனையின் 564 ஆவது நிகழ்வு ' நானும் கண்ணதாசனும் ' உரை : திரு அமுதன்  தொடர்ந்து குவிகம் இலக்கிய வாசலின் 24 ஆவது நிகழ்வு 'இளைஞர் விரும்பும் இலக்கியம்' -    சரசுவதி   சீனிவாச காந்தி நிலையம்,  (Gandhi Peace Foundation)                          அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை சென்னை 600018      அனைரும் வருக! http://ilakkiyavaasal.blogspot.in
image-29054

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 19 & 20 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 21 & 22   இருபத்தோராம் பாசுரம் மேம்பட்ட தமிழர் நாகரிகம் ஆதி உலகினில்பே ராட்சி நடத்தியவர்; யாதுமே ஊரென்றார்; யாவருமே கேளிரென்றார்; பூதலமே தாம்பெறினும் ஓர்பழி ஒவ்வாதார்; சாதலும் ஏற்பார் புகழ்கொள வையத்தில்! யாதினிய நாகரிகம், தீதிலாப் பண்பாடு! ஈதுணரும் நெஞ்சமில் லாராய்த் தமிழரிந்நாள் காதலே யின்றி இன,மொழிகா வாதிருக்கும் தீதினைச் சுட்டித் திருத்திடவா, எம்பாவாய் ...
image-29038

ஓவியர் புகழேந்தியின் ‘நானும் எனது நிறமும்’ தன் வரலாற்று நூல் – சென்னையில் வெளியீடு!

ஓவியர் புகழேந்தியின்  'நானும் எனது நிறமும்' தன் வரலாற்று நூல் - சென்னையில் வெளியீடு!   தமிழீழ ஆதரவு - தமிழர் உரிமை ஆதரவு - மதவெறி எதிர்ப்பு எனப் பல்வேறு தளங்களில் தமது ஓவியங்களின் மூலம் அழுத்தமான தடம் பதித்துள்ள ஓவியர் கு. புகழேந்தி  எழுதியுள்ள 'நானும் எனது நிறமும்' - தன்வரலாற்று நூல்,  மாசி 28, 2048 / 12.03.2017 அன்று சென்னையில் வெளியிடப்பட்டது.   சென்னை எம்ஞ்சியார். ...
image-29035

சார்சாவில் இரத்தத் தான முகாம்

சார்சாவில் இரத்தத் தான முகாம் சார்சா நகர் மையம்  பின்புறம் உள்ள  நகர் வாடகைஊர்தி(City-Taxi)  அலுவலகத்தில் மாசி 07, 2048 - திங்கட்கிழமை  -  20.03.2017 காலை 8 மணி முதல் நண்பகல் 1 மணி வரை குருதிக்கொடை முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் முதுவை  இதாயத்து 050 51 96 433 கீழை ஏ  அமீது  யாசின் 052 ...