image-28713

தமிழணங்கே ! மாமணி நீ! – ஒ.சுந்தரமூர்த்தி

தமிழணங்கே ! மாமணி நீ! - ஒ.சுந்தரமூர்த்தி   தமிழணங்கே ! காணலுறும் தேவதைநீ  கண்ணே பெண்ணே கண்ணிலுறு மாமணிநீ மண்ணே விண்ணே! பாணதனில் வீரமுடைப் பாலும் தந்தாய் பாடலுறக் கூடவரும் இன்பம் சிந்தாய் பூணுகின்ற பாவதற்குள் அமிழ்தம் பொங்கும் புத்துணர்வின் உச்சமது என்னுள் தங்கும் காணுகின்ற காட்சிகளில்உன்னைக் கண்டேன் கன்னியெனக் காதலியாய்த் தாயாய்ப் பாவாய் !   கட்டிக்குளம் ஒ.சுந்தரமூர்த்தி தமிழாசிரியர், நஞ்சப்பா அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி, திருப்பூர்
image-28716

விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! – ‘வாசல்’ எழிலன்

விந்தைத் தமிழை விரும்பிப் போற்று ! - 'வாசல்' எழிலன்   அழகும் தமிழும் ஒன்றே தானாம் அறிவைச் சேர்க்க அதுவே தேனாம் பழகும் பாங்கில் பணிவே சீராம் பண்பை உரைக்கும் பகுத்தறி தேராம் உழவர் உணவை ஈட்டல் போல உணர்வைத் தமிழே உலகுக் கீட்டும் மழலை போல மகிழ்வைக் காட்டி மலரும் முல்லைபோல் மணத்தைஈட்டும் இளமை இனிமை இணைந்தே இருக்கும் இன்பம் துன்பம் ஒன்றாய்ப் பிணைக்கும் இலக்கை நோக்கும் இதயம்கொடுக்கும் இல்லற வாழ்வை என்றும் ...
image-28710

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! – செந்தமிழினி பிரபாகரன்

நல்லவளே எழுந்திடடி சூரியனை மீட்டிடவே! ஆராரோ ஆரிரரோ ஆராரோ யார் இவரோ? ஆராரோ நிலம் பறிக்க ஆராரோ அழுகின்றோம். கண்ணே நீ விழித்து விடு கண்ணீரை விட்டு விடு காலம் எங்கள் வசமாகும். அழுவதை நிறுத்தி விடு சொந்த மண்ணில் படை வரலாம் வெந்த புண்ணில் சீழ் வரலாம் ஆர் ஆற்றி தீருமம்மா ஆறாத எம் துயரம்? எமக்காக குரல் கொடுக்க எவர் குரலும் இரங்கவில்லை எதிர்காலம் இருண்டிடினும் எதிர் கொண்டு வெல்வோமடி! கண்ணே நீ எழுந்திடம்மா கண் விழித்துப் போராடு கண்ணுறங்க ...
image-28707

கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16

(கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 13 & 14 தொடர்ச்சி)  திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 15 & 16 பதினைந்தாம் பாசுரம் தமிழே பிற உயிரினங்களிலும் ஐவண்ணப் பைங்கிளிபோல் ஐம்மிளிரும் நாயகியாள் ! தூவிறகு அன்னம்போல் தன்சொல் பிரித்துயர்வாள் ! ஓவியக்கண் பீலிப்புள் ஒய்யாரம் காட்டுதல்போல் மேவும் சபைதன்னில் மேதைமை செய்திடுவாள் ! மாவரசு சிங்கம்போல் மேலாண்மை கூடியவள் ! மூவாத ஆல்போல் மண்ணுள் விழுதூன்றிப் பாவாணர் போற்றப் பரந்துவிரிந் ...
image-28701

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன்

தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது! – திருமாவளவன் கண்டன அறிக்கை  “இலங்கைப் படையினரால் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமை இனப்படுகொலையை விடக் கொடூரமானது” எனத் திருமாவளவன் தெரிவித்துள்ளார். “தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக வைத்திருந்த சிங்களப் படையினரைக் கைது செய்து தண்டிக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.   இலங்கை இனப்படுகொலையின்பொழுது தமிழ்ப் பெண்களை ...
image-28697

பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!

பாலியல் வதை முகாம்களில் தமிழ்ப் பெண்கள் சித்திரவதை! – கவிஞர் காசி ஆனந்தன் கண்டனம்!   கம்பி வேலிகளின் பின்னால், சுவர்களின் பின்னால், இருட்டறைகளில் தமிழ்ப் பெண்களை அடைத்து வைத்துப் பாலியல் முகாம்களை நடத்தும் சிங்களப் படைகள் பற்றி அண்மையில் வெளிவந்துள்ள செய்தி குறித்து இந்திய – ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் ...
image-28694

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்!

தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்! – உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு!   இலங்கையின் சிங்களப் படையினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது.   இலங்கைப் போரின்பொழுதும் அதன் பின்பும் தமிழ்ப் பெண்களைக் கைது செய்து, தடுத்து வைத்துப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் அவர்களிடம் மேலும் ...
image-28690

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் ‘நடுகல் சிலை’

குளங்களின் பாதுகாப்பை உணர்த்தும் 'நடுகல் சிலை'  நீர் நிலைகளைப் பாதுகாத்தவர்களுக்கு, நடுகல் சிலை வைத்து அவர்களை வழிபாட்டுக்கு உரியவர்களாக மாற்றி முன்னோர்கள் முதன்மை அளித்துள்ளனர்.   மன்னர்கள், பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில்,  பயிர் நிலங்களின் பரப்பை அதிகரிக்க, குளங்கள், தடுப்பணைகள் உருவாக்குவது  முதன்மைப் பணியாக இருந்துள்ளது. நீர் நிலைகளைப் பாதுகாக்க, அவர்கள் அளித்த  முதன்மை, நீர் வழித்தடங்களையும் நீர் நிலைகளையும் ...
image-28687

நன்மை நீஇ! தின்மை நீஇ!

நன்மை நீஇ!  தின்மை நீஇ!   நன்மை நீஇ;  தின்மை நீஇ; நனவு நீஇ; கனவு நீஇ; வன்மை நீஇ; மென்மை நீஇ; மதியு நீஇ; விதியு நீஇ; இம்மை நீஇ; மறுமை நீஇ; இரவு நீஇ; பகலு நீஇ; செம்மை நீஇ; கருமை நீஇ; சேர்வு நீஇ; சார்வு நீஇ; நீலகேசி உரை பெருந்தொகை தொகுப்பு: மு.இராகவையங்கார்: பக்கம் 187
image-28683

நோர்வே : கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல்

நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் நோர்வே தமிழ்ச்சங்கத்தினால் நடாத்தப்பட்ட கேப்பாப்பிலவு, பிலவுக் குடியிருப்பு மக்களுக்காக ஒன்றுகூடல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (19.02.2017) நண்பகல் 13:00மணிக்கு  (Slora Idrettspark, Strømmen, Norway என்னும் இடத்தில்) நடைபெற்றது. இந்த நிகழ்வில் குழந்தைகள், வளர்ந்தோர் என 350பேர் கலந்துகொண்டனர். ஈழத் தமிழர்களாகிய நாம் கேப்பாப்பிலவு, பிலவுக்குடியிருப்பு மக்களின் அறம்சார் உரிமைப்போராட்டத்தை ...
image-28679

சுந்தரச் சிலேடைகள் – மாணவரும் ஆடும்

சுந்தரமூர்த்தி கவிதைகள் சுந்தரச் சிலேடைகள் மாணவரும் ஆடும் சிலேடை 1 அடைந்திருக்கும் ஓரிடத்தில் ஆளின்றேல் தாவும் கடைநிலையிற் கொம்படிக்கும் கத்தும்-இடைநின் றிழுக்க அசைபோட் டிறுதி விருந்தாம் எழுத்தறி வானாட்டுக் கீடு. பொருள் மாணவர்=வகுப்பறையில் அனைவரும் இருப்பர். ஆசான் இல்லாதபோது இங்குமங்கும் விளையாடுவர். படிக்காத கடை மாணவர் கொம்பால் அடிவாங்குவர். பள்ளிவராமல் உள்ளோர் சகமாணவர்களால் இழுத்து வரப்படுவர். அழுவர். கற்றதை அசைபோடுவர்.பின்னாளில் நல்ல விருந்தளிப்பர். ஆடு=கொட்டகையில் அடைந்து கிடக்கும். ஆளில்லை என்றால் இங்குமங்கும் தாவும் சேட்டை செய்யும் ...
image-28676

மலரினும் மெல்லியது காதல் ! – இரா.இரவி

மலரினும் மெல்லியது காதல் ! மலரினும் மெல்லியது காதல் ஆனால் மலையினும் வலியது காதல் ! ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால் உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் ! தடைகள் ஆயிரம் வந்த போதும் தகர்த்து இணைவதே உண்மைக் காதல் ! புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல் அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் ! என்னவென்று விளக்கமுடியாவிடினும் ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் ! இடையில் ...