(திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 5 & 6 தொடர்ச்சி)
திருத்தமிழ்ப்பாவை 7 & 8
ஏழாம் பாசுரம்
தமிழ் இலக்கிய வரலாறு
பாட்டும், தொகையும், கணக்கும், நுதல்மீது
தீட்டும் சமயமிரண் டூட்டும் இலக்கியமும்,
நாட்டும் பெருஞ்,சிறு நல்லணிஐங் காப்பியமும்,
வாட்டும்போர் பாடும் பரணியொடு, தூது,உலா
கூட்டும் சுவைபிள்ளை, பள்ளு, கலம்பகமென்
றேட்டில் புகழ்சிற் றிலக்கியமாய் ஏத்த,பிற
நாட்டு மதநூல்கள், நல்லுரைகள், சொல்லெளிய
பாட்டு, கவி, கூத்துதமிழ் போற்றடவா,
எம்பாவாய்!
எட்டாம் பாசுரம்
தொல்காப்பியம் தமிழின் ...