image-19093

செந்தோழர் நல்லகண்ணு வாழ்க! – புதுவைத் தமிழ்நெஞ்சன்

தோழர் நல்லகண்ணு(மார்கழி 12, 1956 / திசம்பர் 26, 1925) செந்தோழர் நல்லகண்ணு நீடுவாழ்க! செங்கொடித் தோழர் நல்ல கண்ணு சிந்தனை ஆற்றல் உள்ளவராம் - அவர் செங்களம் ஆடிடச் சிறிதும் தயங்கார் செழுமை நெஞ்ச நல்லவராம். உழைக்கும் மக்கள் உள்ளம் எல்லாம் உணர்வில் கலந்த உழைப்பாளி - அவர் அழைத்தால் எதற்கும் அணிய மாவார் அவரே ஏழைப் பங்காளி. அரசியல் என்பதை ஆக்க முள்ள அறிவு வழிக்குச் சென்றவராம் - போர் முரசம் போல ...
image-19086

பெறுமதியான பங்காளியா இலங்கை? – புகழேந்தி தங்கராசு

பெறுமதியான பங்காளியா இலங்கை?     வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விலங்குகளை வேட்டையாடுவது போலத் தமிழர்களை விரட்டி விரட்டிக் கொன்று குவித்த பிறகு, மகிந்த இராசபக்ச கூசாமல் பேசிய சொற்களில் ஒன்று - ‘மீள்குடியேற்றம்’. 2009 முதல் 2014 வரை மகிந்தன் பயன்படுத்திய அந்தப் பித்தலாட்ட சொல், இப்போது மைத்திரியின் வசம். ஆறே மாதத்தில் தமிழர்கள் அனைவரும் மீள்குடியேற்றம் ...
image-19082

ஐந்திணைப் பகுப்பு தமிழர்க்கே உரியது! – சி.இலக்குவனார்

    ஐந்திணைகளாக உலகத்தைப் பிரித்தனர். ஐந்திணைகளே இலக்கியத்திற்குரியனவா யிருந்தன. இவை முதல், கரு, உரி என முப்பெரும் பிரிவை உடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணைக்கும் முதல், கரு, உரி என்பன தனித்தனியே வரையறுக்கப்பட்டன. பேராசிரியர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 133
image-19077

பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்! – சி.இலக்குவனார்

  எழுத்தைப் பற்றியும் சொல்லைப் பற்றியும் விரிவாக உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்தால் ஆக்கப்பட்ட சொற்றொடர் கருவியாக அறியப்படும் பொருளைப் பற்றி உரைப்பதுவே அவர் நூலின் மூன்றாம் பகுதியாகும். எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன. மொழியைத் திருத்தமாக நன்கு பயன்படுத்த மொழி நூலறிவு வேண்டும். திருத்தமுற்ற மொழியின் செம்மைப் பண்பு நிலைத்திருக்க அம்மொழியில் உரையும், பாட்டும் ...
image-19072

கடவுளாய் நின்ற மழை! – தமிழ்சிவா

மழை உச்சந்தலையில் உட்கார்ந்து கிச்சுகிச்சு மூட்டும் ஒரு குழந்தை மழை! காலை நேரத்தில் ‘கோல’ப்பெண்களுடன் கொஞ்சி விளையாடும் ஒரு குறும்பு மழை! காயசண்டிகைக் கடலை நேயமுடன் நெருங்கி முத்தமிடும் ஒரு முத்து மழை! அரசியல் பிழைத்தோர்க்கு வாரக்கணக்கில் வகுப்பெடுக்கும் ஒரு புரட்சி மழை! ஆறுகளைக் கூறுபோட்ட அறிவிலார் மூளைக் கழிவுகளை அகற்றும் ஒரு துப்புரவு மழை! செம்புலப் பெயல்நீராய்த் தோன்றிச் சங்கப்புலவர்க்குக் காதல்சொன்னது ஓர் அந்தி மழை! முத்தொழில் செய்து கடவுளாய் நின்ற மழை! களவாடப்பட்ட எல்லாவற்றையும் மீட்டெடுக்க மீண்டும் மீண்டும் பெய்யெனப்பெய்து வென்ற மழை! புகுந்து புகார் சொன்னபோதும் கேளாமல் விட்டுவிட்டால் வெகுண்டு ...
image-19009

தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை – தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி

      'என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' - திருமூலர் தமிழ்க்காப்புக் கழகத்தின் தமிழ்ப்பூசை - தமிழ்ப்பூசாரி கட்டுரைப்போட்டி மொத்தப்பரிசு உரூ.10,000 /-   இறையன்பர்களுக்கும் பிற தமிழன்பர்களுக்கும் வணக்கம். தமிழ்க்காப்புக்கழகத்தின் சார்பில் “நமக்குத் தேவை தமிழ்ப்பூசைகளும் தமிழ்ப்பூசாரிகளும்” என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது. போட்டிக்கான பரிசுகளாக முதல் பரிசு உரூ. ஐந்தாயிரம் (5,000/-)  இரண்டாம் பரிசு உரூ. மூவாயிரம் (3,000/-)  மூன்றாம் பரிசு உரூ. இரண்டாயிரம் (2,000/-) வழங்கப்பெறும். பரிசுத்தொகைகளை ...
image-19110

சிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்

சிறியன சிந்திக்கலாமா? சிந்தனையைச் சிதற அடிக்கலாமா?   திடீரென்று விழிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகள் குறித்துக் காண்பதற்கு முன் சிலம்பரசன் செயல்பாடு குறித்துக் காண்போம்.   சிம்பு என்னும் சிலம்பரசனின் செயல் பண்பாடற்றது. மழலை நிலையிலிருந்தே திரைத்துறையில் இருப்பவர்; நடிகர், பாடகர், இசையமைப்பாளர் முதலான பல்வேறு துறைகளில் தந்தை வழியில் மலர்ந்து பல்துறை வித்தகராக வலம் வருபவர்; மேலும் ...
image-18925

பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 03 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பாரதியாரின் வாழ்வியல் கட்டளைகள் 2 – தொடர்ச்சி) 03     ஆண்மை கைக் கொள்!   உலகில் இன்பம் பெற வழி அச்சத்தை விரட்டுவதுதான். அச்சத்தை விரட்ட ஆண்மையைக் கைக் கொள்ள வேண்டும்.   அச்சத்தை விட்டிடடா - நல் ஆண்மையைக் கைக் கொள்ளடா இச்சகத்தினிமேலே நீ - என்றும் இன்பமே பெறுவையடா என்கிறார் பாரதியார்.   அச்சம் நீங்கினாயோ - அடிமை ஆண்மைத் தாங்கினாயோ (பக்கம் 63 / தொண்டு செய்யும் அடிமை) என்று அச்சம் ...
image-19058

பெரியார் – ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி – கலைஞர்

பெரியார் - ஆரியத்தின் அடிப்பீடமாட்டும் சூறாவளி 'இனத்தினிலே கோளாறு புகுத்தி வைத்தோர் இடிமுழக்கம் கேட்பதுபோல் - திணறிப் போனார் பின்னி வைத்த மதங்கடவுள், மடத்தன்மை யெல்லாம் மின்னலது வேகத்தில் ஓடியதுகாண்! பாராட்டிப் போற்றி வந்த பழமைலோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார். ஈவெரா என்ற வார்த்தை இந்நாட்டு ஆரியத்தின் அடிப்பீடம் ஆட்டுகின்ற சூறாவளியாம்! அவர் வெண்தாடி அசைந்தால் போதும் கண் சாடை தெரிந்தால் போதும்; கறுப்புடை தரித்தோர் உண்டு நறுக்கியே திரும்பும் வாள்கள் !!' -கலைஞர் ...
image-19052

புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்

இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி “கலைஞருள் வள்ளல், காசினி போற்றும் வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும் ஒல்லும் வகையில் உடனே உதவும் புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும் நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம் இனிதே வாழ என்றும் எண்ணி அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர் இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும் அண்ணா வழியில் அணியுறச் செல்லல் முந்துறும் தளபதி, மூவா இளைஞர் இராமச்சந்திரன் எனும் பெயரால் எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன் ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற நடிக்கும் ...
image-18985

இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு

மார்கழி 05, 2046 /  திசம்பர் 21, 2015  நண்பகல் 2.00 சல்லிக்கட்டு, தமிழ்ப்பண்பாடு  தொடர்பில் இரசினிகாந்து வீடு முற்றுகை அறிவிப்பு கி.வீரலக்குமி, தமிழர் முன்னேற்றப்படை
image-18921

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 12: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 11:   தொடர்ச்சி) 12   1952 இல் இந்தியப் பாராளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் நடை பெற்றது. புதியன செய்யும் பொறியில் வல்லுநர் கோ.து.நாயுடு திராவிடர் கழகச் சார்பில் திருவில்லிப்புத்தூர் பாராளுமன்றத் தொகுதியில் நின்றார். கோ.து.நாயுடு  உழைப்பால் உயர்ந்த அறிஞர்; உலகம் சுற்றியவர்; பலகலைகள் கற்றவர்; பேருந்து வண்டிகள் நடத்தும் பெருஞ் ...