image-25957

மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09 தொடர்ச்சி) மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன்  குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் - 10 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியல்யாப்பின் பிரிவு ...
image-25954

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! – தாமோதரன் கபாலி

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே!   முத்து முத்தாய்த் தமிழ்ச்சொற்கள் முந்தும் உயிரை அரவணைக்கும் கொத்துக் கொத்தாய்ப் பெரும்வினைகள் கொள்ளும் உயிரைக் கடைத்தேற்றும் சித்துச் சித்தாய் அகமடங்க திங்கள் ஒளியாய்க் குளிர்விக்கும் சத்துச் சத்தாய் உயிர்க்கலந்து சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! தாமோதரன் கபாலி
image-25951

திருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! – தமிழரசி

திருவள்ளுவரா வைத்தார்? ஒரு பெயரில் ஈர் அதிகாரம்!   திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் ...
image-25947

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 1/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று ! 1/5  தொலைபேசி  வருமுன்பு  நெஞ்சி   ருக்கும் தொலைதூர   உறவோடு   தொடர்பு  கொள்ள மலைகடந்து   பறக்கின்ற   புறாவின்   காலில் மனக்கருத்தைக்   கட்டியன்று   அனுப்பி  வைத்தார் அலைகடலைக்   கடந்தின்று   இருப்போ  ரோடே அறிவியலால்   மின்னஞ்சல்   முகநூல்   தம்மில் வலைத்தளத்தில்   கட்செவியில்   கையால்   தட்டி வார்த்தையாக்கிக்   கண்களிலே   பேசு   கின்றார் ! எத்தனைதான்   முன்னேற்றம்   வந்த  போதும் எழில்கிராமப்   பச்சைவயல்   அழகைப்   போல சித்தத்தை   மயக்குகின்ற   சேலை  தன்னில் சிரிக்கின்ற   ...
image-25942

அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு

தமிழ்ப்பரம்பரை மையத்தின் (Tamil Heritage Trust)நிகழ்வு  அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு  வழங்குநர் : ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவணி 18, 2047 / செட்டம்பர் 03, 2016 மாலை 5.30 ஆர்.கே.மையம், 146/3,  இராயப்பேட்டை நெடுஞ்சாலை, (ஓம்சுஇலக்சனா, சா மின்பொருள்கடை மாடியில்), மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ் பாராம்பரியம் சார்பாக நடைபெறும் மாத உரை நிகழ்ச்சியில், செட்டம்பர் 2016 நிகழ்வாக,  ஏ.கே. செட்டியார் ...
image-25939

நிலா நிலா – அழ.வள்ளியப்பா

நிலா நிலா   ‘நிலா, நிலா, ஓடிவா. நில்லாமல் ஓடிவா’ பல காலம் இப்படிப் பாடிப் பயன் இல்லையே ! மலை மேலே ஏறி நீ வருவாய் என்றே எண்ணினோம். மல்லி கைப்பூக் கொண்டுநீ தருவாய் என்றும் பாடினோம்.   எத்த னைநாள் பாடியும் ஏனோ நீயும் வரவில்லை. சத்தம் போட்டுப் பாடியும் சற்றும் நெருங்கி வரவில்லை. உன்னை விரும்பி அழைத்துமே ஓடி நீ வராததால் விண்க லத்தில் ஏறியே விரைவில் வருவோம் உன்னிடம் !   குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா : சிரிக்கும் பூக்கள்    
image-25936

தேவகோட்டை : சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு

வட்டார அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு  தேவகோட்டை - தேவகோட்டை  பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை குடியரசு  நாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  தமிழக அரசு 2016-2017ஆம் ஆண்டிற்கான குடியரசுநாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டிகளைத் ...
image-25933

தமிழ் வாழ்த்து- முடியரசன்

தமிழ் வாழ்த்து வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக் கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ் நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே - முடியரசன் (கவிஞர் இறுதியாக இயற்றிய கவிதை) பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் (தன்வரலாறு) பக்கம் 20
image-25931

இன்று .. இளைஞர் .. இலக்கியம் – குவிகம் நிகழ்வு

ஆவணி 25, 2047 /  செட்டம்பர் 10, 2016  சனிக்கிழமை   மாலை 6.30 மணி     சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய    இஃது ஒரு சாளரமாக அமையுமோ? நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குவிகம் மின்னிதழ் ...
image-25923

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்!

தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்! ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி! ஆங்காங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்.   தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்காங்கு நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்க் குமுகத்தின் (சமூகத்தின்) புள்ளியுமான மு.இராமநாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் ...
image-25920

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 1 – 5: தி.வே.விசயலட்சுமி

பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! பொய்தீர் ஒழுக்க நெறிபுகன்ற வள்ளுவனார் செய்தார் குறள்நூல் செறிந்து.   குற்றமிலா வாழ்நெறியைக் கூறும் குறள்நூலைப் பற்றியே வாழ்வோம் பணிந்து.   எம்மொழிக்கும் இல்லாத ஏற்றமிகு இன்குறளால் செம்மொழிக்குச் சேரும் சிறப்பு.   வேதத்தின் வித்தாய் விளங்கும் குறளமுதின் நீதியை நெஞ்சே நினை.   வள்ளுவர் உண்மையை விள்ளுவர் பொய்ம்மையைத் தள்ளுவர் சீர்அள் ளுவர்.   -புலவர் தி.வே.விசயலட்சுமி (பொய்தீர் ஒழுக்கநெறி தந்தாய் வாழி! 6 - ...