image-25624

திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல – சேயோன்

திருவள்ளுவர் காட்டு நெறிகள் பல     தெய்வப்புலவர் தெளிவுறுத்தும் நெறிகள் பல. அவையனைத்தும் தனிமனித வளர்ச்சிக்கும் சமுதாய மலர்ச்சிக்கும் உலக ஒருமைப்பாட்டிற்கும் உறுதுணை புரிவன. திருவள்ளுவர் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வழிமுறைகளையும், குறள்நெறிகளையும் ஆய்ந்தும் தோய்ந்தும் தொகுத்தும் பகுத்தும் தந்துள்ளார். அவற்றை உய்த்துணர்ந்து போற்றி நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து நானிலத்தில் மேனிலை அடைவது ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். முனைவர் ...
image-25619

வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து – பெ.அருத்தநாரீசுவரன்

வள்ளுவர் விளக்கும் வன்முறைக்கு எதிரான மருந்து   சமுதாயத்தில் தாம் நினைத்தால் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாக்கக் கூடிய அளவிற்கு நிறைந்த பண்புலநலன்கள் கொண்ட பெரியோர்கள் சிலர் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட பெரியோர்களை வள்ளுவர் சான்றோர் என்று குறிப்பிடுகின்றார். சான்றோர் என்ற சொல் வள்ளுவர் காலத்திற்கு முன்பு போர்க்களத்தில் போராடுகின்ற வீரர்களைக் குறித்த சொல். பிற்காலத்தில் போரிட வேண்டும் என்று தேவை ...
image-25614

பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன – கல்வியமைச்சர் வேலுசாமி

பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக 100 க்கு மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன  மாகாணக்கல்வியமைச்சர் வேலுசாமி  இலங்கையில் எதிர்காலத்தில்  ஆதாய நோக்கத்துடன்  தொடங்கப்படும் வணிக நிலையங்களைப்போலப் பன்னாட்டுப் பாடசாலைகளைத் தொடங்க முடியாது. பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாக கல்வி அமைச்சுப் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கு எற்பாடுகளை மேற்கொண்டுள்ளது  பன்னாட்டுப் பாடசாலைகள் தொடர்பாகத் தனக்கு 100 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என  மாகாணக்கல்வி அமைச்சர் ...
image-25602

தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் :நிகழ்ச்சிப்படங்கள்

  முனைவர் க.தமிழமல்லன் பாநூல்கள் ஆய்வரங்கம் கி.இ.க. / ஒய்எம்சிஏ அரங்கில் முனைவர் பேராசிரியர் மறைமலைஇலக்குவனார் தலைமையில்  நடைபெற்றது. பாவலர் பூங்குழலி பெருமாள் ஆய்வுரை நிகழ்த்தினார். செயலாளர் பக்தவத்சலம் வரவேற்புரை கூறினார். தமிழமல்லன் ஏற்புரை நிகழ்த்தினார்.
image-25597

வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது என்றார்! – சி.இலக்குவனார்

வள்ளுவர் கல்வி அனைவர்க்கும் பொது  என்றார்!   மக்களில் கல்விப்பேறு அடைதற்குரியவர் சிலரே என்றனர். சில நாடுகளில் படிப்பவர் வேறு, உழைப்பவர் வேறு என்று வகைப்படுத்தினர். உயர்ந்தோரே படித்தல் வேண்டும், உழைப்பவர் படித்தல் வேண்டா என்றும விதியாக்கினர். ஆனால், வள்ளுவர் கூறியது என்ன? கல்வி அனைவர்க்கும் பொது; கண்கள் அனைவர்க்கும் இயல்பாக உரியன; அதுபோலக் கல்வியும் எல்லார்க்கும் ...
image-25586

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 இசைப்பாடல்   இசைப்பாடல் என்ற பிரிவில் திருவள்ளுவர் இயற்றிய கல்வி அதிகாரத்தின் சிறப்பை விளக்கும் வகையில் ‘கல்வியைப் போல் செல்வம் காணக்கிடையாது’ என்னும் பாடலை கவிஞர் யாத்துள்ளார். இப்பாடலுக்கு ‘இசைமணி சங்கரனார்’ என்பவர் இசையமைத்துள்ளார். இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த இசைவாணர் ஆவர்.  வித்துவான் ந. ...
image-25589

திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார் – சி.இலக்குவனார்

திருவள்ளுவர், வெளிநாட்டிலிருந்து வந்த போலி அந்தணர்களைப் புறக்கணிக்க வழிகோலினார்   தமிழ்நாட்டில் இரக்கத்திற் சிறந்து அருள் உளம் கொண்டு மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் தொண்டாற்றுகின்றவர்களை அந்தணர் என்று அழைத்து வந்தனர். அவர்களே மக்களின் தலைவர்களாகவும் மதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து வந்த சிலர் தம்மைப் பிறப்பால் உயர்ந்தவராகக் கூறிக்கொண்டு அந்தணர் என்றும் ஐயர் என்றும் அழைத்துக் கொண்டனர். ஆனால், செயலில் ...
image-25593

மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும் – சி.இலக்குவனார்

மக்களாட்சி வெற்றி பெற ஒழுக்கமுடையோர் போற்றப்படுதல் வேண்டும்!   பிறப்பால் உயர்வுதாழ்வு பேசுதல்  பேதமை. ஒழுக்கத்தால் உயர்ந்தோரே நல்ல குடியில் பிறந்தோர் ஆவார். ஒழுக்கக் கேடர்களே இழிந்த பிறப்பினர் ஆவார்கள். ஆதலின் ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் என்று இடித்துரைத்தார். ஒழுக்கத்தால் உயர்வுபெறும் நெறி வெற்றி பெற்றிருக்குமேல், இன்று நாட்டில் பூசல்கள் ...
image-25583

தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்துக் கொண்டார்!

பதுளையிலுள்ள தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்து(அபகரித்து)க் கொண்டார்! செயலணியில் முறைப்பாடு ஊவா மாகாணம் பதுளையிலுள்ள தங்களது காணிகள் புத்தத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, மட்டக்களப்பிற்கு ஏதிலியராக (அகதியாக) வந்து 33 ஆண்டுகள் கழிந்தும், வாழ வீடு கிடைக்கவில்லை என்று பெருந்தோட்டப் பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.   நல்லிணக்க முயற்சியின்பொழுது தமிழ்க் குமுகம்(சமூகம்) நிகருரிமை(சமவுரிமை) பெற்று அனைத்து நலங்களுடனும் வளங்களுடனும் ...
image-25579

வள்ளுவர் வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்! – சி.இலக்குவனார்

வள்ளுவர்  வேள்விக்கு எதிரான எதிர்ப்புக் குரலை எழுப்பினார்   வேள்விகளைச்செய்து ஆற்றலைப் பெறலாம். அடைதற்கரியனவற்றை அடையலாம் என்ற கூற்றில் மயங்கி வேள்வியை அறியாத் தமிழ்நாட்டில் வேள்வி செய்தலைப் பெருங்கடனாகச் செய்தனர் சிலர். தமிழரசர்களில் சிலர் எளிதில் எதையும் பெறலாம் என்று எண்ணி வேள்விகளைச் செய்வதற்கு ஊக்கமும் ஆக்கமும் அளி்த்தனர். பல வேள்விகைளச்செய்த அரசர்க்குப் பல்வேள்வி செய்தான் என்ற ...
image-25573

திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் – சி.இலக்குவனார்

திருவள்ளுவர் மகளிரை உயர்த்திக்கூறினார் - சி.இலக்குவனார்  மனைவியை வாழ்க்கைத்துணை என முதல்முதலாக அழைத்தவரும் அவரே! கணவனும் மனைவியும் நண்பர்போன்று வாழ்தல் வேண்டும் என்று கட்டுரைத்தவரும் அவரே. ஆண்மகனுடைய ஒழுக்கத்திற்குப் பெண்மகளை எடுத்துக்காட்டாகக் கூறியவரும் இப்பெரியாரே.ஒருமை மகளிரேபோல் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு என்பதை நோக்குக. இல்லவள் மாண்பானால் இல்லது என் என்று எல்லாம் மனைவியால்தான் என மகளிரை உயர்த்திக்கூறினார். -  ...