image-23616

கொழும்பு இரோயல் கல்லூரிக்கு மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி வருகை! – பா.திருஞானம்

கொழும்பு இரோயல் கல்லூரிக்கு  மாநிலக்கல்வி அமைச்சர் அதிரடி  வருகை! ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்    மாநிலக் கல்விஅமைச்சர் வே. இராதாகிருட்டிணன் கொழும்பு  அரசு(இரோயல்) கல்லூரியின் தமிழ்ப் பிரிவுற்கு வைகாசி 14, 2047 / 27.05.2016  அன்று அதிரடி  வருகை ஒன்றினை மேற்கொண்டார். இதன் போது கல்லூரியின் அதிபர் தமிழ்ப் பிரிவிற்கான  துணை அதிபர்,  தமிழ்மொழி மூலமான ஆசிரியர்களுடன் பாடசாலையின் ...
image-23609

காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்

(காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 226-250  தொடர்ச்சி) காலந்தோறும் ‘தமிழ்’ – சொல்லாட்சி 251 - 275 251. சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம். - பெரியபுராணம்: 6. வம்பறா வரிவண்டுச் சருக்கம் : 29. திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம் : 372.4 252. மதுர முத்தமிழ் வாசகர் அணைந்தனர் மன்று உள் - பெரியபுராணம்: 6. ...
image-23577

வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 10. உடம்பை வளர்த்தல்

(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் – 9. தொடர்ச்சி)    10. உடம்பை வளர்த்தல்   உடம்பெலாஞ் செய்யு மொப்பிலாக் கருவி. உடல் என்பது எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒப்பற்ற கருவி ஆகும். உடம்பை வளர்த்தலஃ துரமுறச் செய்தல். உடம்பை வளர்த்தல் என்பது உடலை வலிமை உடையதாக மாற்றுவது ஆகும். உடம்புநல் லுரமுறி னுலகெலா மெய்தும். உடல் நல்ல வலிமை பெற்றால் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ளும். ...
image-23559

பாடி எனப் பெயர் விளங்கும் ஊர்கள் – இரா.பி.சேது

பாடி எனப் பெயர் விளங்கும் ஊர்கள்     முல்லை நிலத்திலே தோன்றும் ஊர்கள் பெரும்பாலும் பாடி என்று பெயர் பெறும். திருத்தொண்டராகிய சண்டேசுரர் ஆக்களை (பசுக்களை) மேய்த்து, ஈசனுக்குப் பூசனை புரிந்த இடம் திருஆப்பாடி என்று தேவாரம் கூறுகின்றது. கண்ணன் பிறந்து வளர்ந்த கோகுலத்தை ஆயர்பாடி என்று தமிழ் நூல்கள் குறிக்கின்றன. வட ஆர்க்காட்டில் ஆதியில் வேலப்பாடி ...
image-23575

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 1.2 புலவர் வாழ்த்து   தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ்’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது.   திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய ...
image-23556

பலவகை மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள்

பலவகை மரங்களின் பெயர்களைக் கொண்ட ஊர்கள்   கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒருவகை மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரக் கோயிலில் பொன்னலரியே தல மரமாகப் போற்றப்படுகின்றது.   தேவாரத்தில் குறிக்கப்படுகின்ற திருப்பைஞ்ஞீலி என்ற ஊரும் மரத்தின் அடியாகப் பிறந்ததேயாகும். பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். அவ்வகையான வாழைகள் சிறந்து ...
image-23572

க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 4/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை

(க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 3/5 தொடர்ச்சி)   தனித்தமிழைப் பேணச்சொல்லும் அண்ணலின் அறிவுரைக்கு ஈனர்கள் எதிருரை பகர்கின்றார்கள். தனித்தமிழ் நமக்குத் தேவையில்லை, அதனால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை என்ற தங்களது மறுப்பை முரட்டுத்தனமாக எடுத்துவைக்கின்றார்கள். சீற்றத்தில் கொந்தளிக்கின்றார் அண்ணல். அவரின் சொற்கள் ஒவ்வொன்றும் எறியப்பட்ட ஈட்டிகளாகப் பாய்கின்றன. நெஞ்சம் திறக்கின்றது. சொற்களின் வன்மையைப் பாருங்கள்:         ...
image-23567

மன அமைதிக்கு மருந்து நூல்களின் பங்கு: 1/ 2 : தி.வே.விசயலட்சுமி

மன அமைதிக்கு மருந்து - நூல்களின் பங்கு 1/ 2   “நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு'             (குறள் 783)   நூல்களைப் படிப்பவர்களுக்கு,    அதிலுள்ள நற்பொருள்கள் சிறுகச் சிறுக விளங்குவதுபோலப், பண்புள்ளவர்களுடன் செய்துகொள்ளும் நட்பு, அவருடன் பழகப்பழக இன்பம் அளிக்கும்.   நூல் ஒரு சிறந்த நண்பன், சிறந்த ஆசிரியர், சிறந்த அமைச்சரைப்போல் அறிவுரை கூறி வழிகாட்டும். நூல் ...
image-23563

‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்

'இலக்கியச் சோலை' மாத இதழ் சார்பில் தந்தையர்நாள் நிகழ்ச்சி வைகாசி 30, 2047 / 12-06-2016 அன்று காலை, சென்னை, மயிலாப்பூர், பாரதிய வித்யா பவனில் நடைபெற இருக்கிறது.   'அப்பா -  அப்பப்பா' தலைப்பில் கவியரங்கம்.   நீங்களும் பங்கேற்கலாம். பெயர் பதிவுக்குத் தொடர்பு கொள்க:  98405 27782.
image-23423

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில! – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகைச்செல்விக்கு வாழ்த்துகள் வரையில!  இப்போதைய - தி.பி.2047 / கி.பி. 2016 ஆம்  ஆண்டுச் - சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் முதல்வர் புரட்சித்தலைவி  செயலலிதாவிற்கு வாழ்த்துகள்!   'பள்ளிக்கணக்கு புள்ளிக்கு உதவாது' என்பர். அதுபோல் புள்ளிவிவரங்களை அடுக்கி, உண்மையான வெற்றியல்ல இது எனச் சில தரப்பால் கூறப்பட்டாலும் நம் அரசியலமைப்பின்படி இதுதான் வெற்றி.   ...
image-23522

மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது.  (திருவள்ளுவர், திருக்குறள் 772)   தமிழகச் சட்டமன்றங்களில் தொடர்ந்து இரு கட்சிகளின் முதன்மைகளுக்கு மாறாக அவ்வப்பொழுது 3 ஆம் அணி உருவாக்கம்பற்றிய பேச்சும்  முயற்சியும் வந்துபோகும். என்றாலும், இந்தமுறை சீர்குலைப்பு முயற்சிகளையும் மீறி மக்கள்நலக்கூட்டணி உருவானது.   முன்பு இருந்த சூழலைவிட இம்முறை மக்கள் பெரிதும் மாற்றத்தை ...
image-23513

திமுகவின் கைகளில் கடிவாளம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

திமுகவின்  கைகளில் கடிவாளம்!   நம்நாட்டு மக்களாட்சி முறைக்கேற்ப  ஆட்சியை அமைப்பதற்கான வெற்றி வாய்ப்பை திமுக இழந்து உள்ளது.   9 தொகுதிகளில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வேறுபாட்டிலும் மேற்கொண்டு 9 தொகுதிகளில் ஆயிரத்திலிருந்து 2615 இற்குக் குறைவாகவும் மேற்கொண்டு 14 தொகுதிகளில் இதிலிருந்து 5000த்திற்குக் குறைவாகவும் வாக்குகள் பெற்று வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனர். இவர்களுள் மிகுதியானவர் தி.மு.க.வினர்.  ...