image-13657

சங்க இலக்கியங்கள் மங்கா இனிமை பயப்பன – புலியூர்க் கேசிகன்

அகத்தெழும் உணர்வுகள் அனைத்தும் உலகிடை முகிழ்த்திடும் காதலில் முதிர்ந்தே தோன்றிடும்; பருவத்து மலர்ச்சியும் பாவையின் வனப்பும் செறிவுற்று இலங்கும் சேயிழை நல்லாள் மறத்தின் மாண்பும் மலர்தமிழ்ப் பண்பும் திறத்தில் உருவாய்த் திகழுமோர் காளையைக் கண்டதும் அவனிற் கலந்திடத் துடிப்பாள்; நாணும் மடமும் நற்குலப் பண்பும் தாமே அகன்றிடத் தளர்வாள் காதலால்; ஆண்மையும் சிறப்பும் அந்நிலை அகன்றிடப் பெண்மையை நாடிப் பித்தெனும் நிலையில் அவனும் தளர்வான் அங்கவர் கலப்பார்; இங்கிவர் தம்முட் களவிற் கண்டிடும் இன்பமே ...
image-13634

சங்க நூல்கள் வரலாற்று நூல்களே!

  சங்க நூற்களில் பெரும்பாலும் இயற்கைத் தன்மைகளை உள்ளவாறுணரலாம். நிலவியல்பால் பல நலங்குகளைக் காணலாம். சிற்றுயிர் வாழ்க்கைகளை உற்று நோக்குவதால் மாந்தர் கற்றுக் குற்ற நீங்கிக் குணங்கொண்டு வாழ்வாங்கு வாழ வேண்டிய பல வாய்மைகளை உணரலாம். குறிப்பிற் புலப்படுத்தும் அறமுறைகள் அளவில்லன அறியலாம். இவற்றிற்கு உள்ளுறையுவமம் எனப் பெயர்ந்து உள்ளுதோறுள்ள முவக்குமாறு உள்ளியுணர வைத்தனர் ஆன்றோர். ...
image-13631

வடநூல் இலக்கியங்களை விட சங்க இலக்கியங்கள் சிறந்தன.

பொருந்தாப் புனைவுகள் உடைய வடநூல் இலக்கியங்களை விட இயற்கையை இயம்பும் சங்க இலக்கியங்கள் சிறந்தன!   வடமொழி முதலிய பிறமொழிவாணர்கள் தங்கள் இலக்கியங்களை ஆக்குதற்குப் பெரும்பாலும் அறிவொடு பொருந்தாத கற்பனைகளையே பயில வழங்குவராயினர். பாற்கடலும், கருப்பஞ் சாற்றுக் கடலும், மேலுலகங்களும், கீழுலகங்களும், அரக்கர்களும், தேவர்களும், பிசாசர்களும், இன்னோரன்ன பொருந்தாப் புனைவுகளை அவர்கள் இலக்கியங்களில் யாண்டுங் காணலாம். பல்லாயிரம் ...
image-13650

பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணுவோம்! – ஔவை துரைசாமி

  இடைக்காலத்துத் தமிழகம் தன் பண்டைய இலக்கியச் செல்வத்தைப் பேணும் துறையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின், இத்தமிழகம் இகழ்வார் தலை மடங்க, புகழ்வார் புரட்சி முற்றப் பேரிலக்கியப் பெருமையால் நிலவுலகு பரவும் இசை மிக்கு நிலவுவதாம். இடைக்காலத்தே புன்னெறி வீழ்ந்து அறிவு ஆண்மை பொருள் முதலிய வகையில் அடிமையுற்ற தமிழகம், தனது வீழ்ச்சியால் விளைந்த கேட்டினை நினைக்கின்றது; ...
image-13685

ஆனி 06 / சூன் 21 – பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் !

 பன்னாட்டு ஓக நாள் பயிலரங்கம் ! நிகழ்ச்சி நிரல் : காலை 10 மணி முதல் 1 மணி வரை ௧. தமிழ்த் தாய் வாழ்த்து ௨. தொடக்க உரை: தமிழ்த்திரு. மருத்துவர்.சிவக்குமார், தமிழர் உலகம் வாழ்த்துரை: தமிழ்த்திரு. இராசா சுடாலின், முருகன் சேனை தமிழ்த்திரு. வே.க.சந்திரமோகன், தமிழர் ஆட்சி கட்சி தமிழ்த்திரு. முனைவர்.முகமது கடாபி, தமிழ் நாட்டு விளையாட்டு மேம்பாட்டுகு் கழகம், ...
image-13629

அணிற்பிள்ளை – தி.ஈழமலர்

கோடை முழுக்கக் கொண்டாட்டம்தான்!   பிறந்து ஓரிரு நாட்களே ஆன, இவ்வளவு சிறிய அணிற்பிள்ளையை இந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே பார்த்து இரசிக்கும் வாய்ப்பு சின்னக்குட்டி அழகனைத்தவிர வேறு யாருக்கும் கிட்டியிராதுதான். அழகன் - பெயருக்கு ஏற்றாற்போல் அழகும் அறிவும் மிகுந்த துடிப்பான 3 வயதுக் குழந்தை.   அந்த அணில், இவர்கள் புதுமனை புகும் பொழுது பழைய வீட்டில் ...
image-13662

சங்க இலக்கியங்கள் இயற்கை இன்பம் தருவன! புராணங்களோ பொருந்தாப் பொய்கள் நிறைந்தன! – அண்ணா

  சங்க நூல்களிலோ யானை அலறக் கேட்டு அஞ்சிய தலைமகளை, அஞ்சற்க என்று கூறி ஆதரித்த தலைமனைக் காண்கிறோம். பிறகோ, அண்ணலை யானைøயாக்கி அனுப்பி வள்ளியைப் பயமுறுத்தி மணம் புரியும் வேலன் கதை வீடுதோறும் காண்கிறோம். சங்க நூல் சித்திரம் சிலருக்கே தெரியும். புராணமோ, தெரியாதவர் மிகமிகச் சிலரே. சங்க நூல்களிலே, மந்திக்குக் கனிபறித்தீயும், காதற்கடுவனைப் ...
image-13647

முச்சங்கச் செய்திகளும் உண்மையே! – கா.அப்பாத்துரை

  தமிழில் முதல் இடை, கடை, என முச்சங்கங்கள் இருந்தன என்பதும் முதலது கடலுட்பட்ட குமரி பஃறுளி நாடுகளிலமைந்த தென்மதுரையிலும், இடையது அதே இடத்தில் கவாடபுரத்திலும், மூன்றாவது வைகைக்கரை மதுரையிலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்வு பெற்றிருந்தன என்பதும் நெடுநாளைய தமிழ்நூல் மரபு. ஒரு சாய்பின்றி ஆய்பவர்கட்குச் சங்ககால வாழ்வின் தன்மை மலைமேலிட்ட விளக்கம் ஆகும். இரண்டு தலைமுறைகளில் ...
image-13643

இந்திய நாகரிகம் என மொழிவன எல்லாம் தமிழர் நாகரிகங்களையே! – தனிநாயக அடிகள்

  இந்திய வரலாற்று நூல்களை எடுத்து நோக்கினால் மாக்சுமுல்லர், வின்றர்னிட்சு போன்றவர்கள் வட மொழி இலக்கியத்தின் பெருமையையே விரித்துக் கூறுவர். தமிழ் இலக்கியத்தைப் பற்றி, ஒரு சொல்லேனும் ஒரு குறிப்பேனும் காணக் கிடையா. இந்தியப் பண்பு, இந்திய நாகரிகம் என அவர்கள் மொழிவன எல்லாம் திராவிட நாகரிகம், திராவிட மொழிகள் இவற்றையே அடிப்படையாக் கொண்டவையாயினும், பல்லாண்டுகளாக ...
image-13660

சங்கத்தில் மிகுதியான பெண்பாற்புலவர்கள் இருந்தனர் – சேலம் செயலட்சுமி

  சங்கத்தில் மிகப்பல பெண்பாற்புலவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது மிக்க வியப்பிற்குரியது. இவர்கள் பல்வேறு குலத்தொழில் உடையவர்களாகவும், சமுதாயத்தின் பல்வேறு நிலைகளில் இருந்தவர்களாகவும் இருப்பது அதனிலும் அதிசயத்திற்குரியது. அக்காலத்தில் தொழிலையொட்டியே சமுதாயம் வகுக்கப்பட்டிருந்தது. என்றும், பிற்காலத்தில் சாதி வேறுபாடுகள் தோன்றின என்றும் தோன்றுகிறது. இயற் புலவர்கள் இசைப்புலவர்கள், நடனப் பெண்கள் ஆகியோர் அரசு குடும்பத்திலும் இருந்தனர். எளிய ...
image-13641

உலக அமைதியை நிலைநாட்டத் துணைசெய்வன சங்க இலக்கியங்களே!

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள் சங்கமாகக் கூடித் தமிழைப் போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத்தொகையும் பத்துப்பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொலை நூல்களைக் கொண்டது. இவை, படிப்போர் உள்ளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் துணை செய்வன. இவற்றைப் பொருள்வகையானும் திணை ...