மும்பையில் பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா

மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா                 மும்பைத் திராவிடர் கழகத்தின் சார்பாகத் தந்தை பெரியாரின் 135 ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக  17.09.2013 செவ்வாய்க் கிழமை  மாலை 7.30 மணியளவில் தாராவில் உள்ள கலைஞர் மாளிகையில் நடைபெற்றது. சு.குமணராசன், பெ.கணேசன், அலிசேக் மீரான், அ. இரவிச்சந்திரன், வே.ம.உத்தமன், ...

வள்ளுவர் வகுத்த அரசியல் – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 2. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. (திருக்குறள் 731)   தள்ளா-குறையாத, விளையுளும்-விளைவிக்கப்படும் பொருள்களும், தக்காரும்-விளைவுக்குக் காரணமான அறிஞரும், தாழ்வுஇலா-குறைவுஇலாத, செல்வரும்-செல்வமுடையவரும், சேர்வது-சேர்ந்திருப்பது, நாடு-நாடு ஆகும். ‘விளையுள்’ என்பது மக்களால் விளைவிக்கப்படும் எல்லாப் பொருள்களையும் குறிக்கும். உணவுப் பொருள்கள் மட்டுமல்ல, மக்கள் வாழ்வுக்கு வேண்டிய அனைத்துப் பொருள்களையும் ஆக்கிக்கொள்ளும் ஆற்றலும் வாய்ப்பும் வசதியும் நாடு பெற்றிருக்க ...

அதிமுக, திமுக வேட்பாளர்கள் உள்பட 11 பேர் போட்டி

ஏற்காடு (தனி) தொகுதிக்குப் புதிய சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு கடந்த அக்டோபர் 4-  இல் வெளியிடப்பட்டது. இதன்படி, ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் புதன்கிழமை மாலை வெளியிடப்பட்டது. அதன்படி, அதிமுக (பெ.சரோசா), திமுக (வெ.மாறன்) வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

இலங்கைக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் தேவை: த.ஈ.ஆ.அ (டெசோ)

இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பாகப் பன்னாட்டு உசாவல் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற,த.ஈ.ஆ.அ (டெசோ) அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மேலும், இலங்கையில் நடைபெற்று வரும் பொதுவளஆய மாநாட்டில் இந்தியா பங்கேற்றதற்கு, திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதி தலைமையிலானஇவ்வமைப்பு அமைப்பு, மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தது. எனினும் தமிழ் ஈழத்தில் நடைபெற்ற பேரினப்படுகொலையை வெறும் ...

தஞ்சாவூரில் ‘அறிஞர் அண்ணா இல்லம்’

அன்புடையீர், வணக்கம்.  ஒரு புதிய முயற்சியாக, நம் தமிழ் மக்களின் தேவைக்கான ஒரு முயற்சியாக  தஞ்சாவூரில் 'அறிஞர் அண்ணா இல்லம்' அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதை 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 'அறிஞர் அண்ணா அறக்கட்டளை' சார்பில் அமைக்கவிருக்கிறோம். இது யாரும் எதிர்பாராத முயற்சிதான். ஆனால் இந்த 'அறிஞர் அண்ணா இல்லம்' மனிதகுலம் இருக்கும் வரை நிலைத்திருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ...

தீக்குச்சி – கவிமுரசு வா.மு.சே.திருவள்ளுவர்

  கலைவளர் அறுபத்து நான்கு கயமையைப் பொசுக்க நாமும் தவத்தீக் குச்சிகள் கொண்டே தீய்த்திட்டே தமிழைக் காப்போம்   கவலைகள் சொன்ன ஆசான் கவனமாய்த் தீர்க்க நாமும் புவனத்துத் தமிழ்த்தாய் எண்ணி பூமியில் ஓங்கி வாழ்வோம்!   ஒளியினை வழங்கும் குச்சி ஒண்டமிழ் காக்கும் வேள்வி பழியினைப் போக்க என்றும் பாவத்தைப் பொசுக்கி வெல்வோம்!   விழிகளின் தோழன் ஒளியே விண்டிடும் தீக்குச்சி வழியே தளிர்விடும் அறத்தைக் காக்க தீக்குச்சியால் சமைத்தே ஈவோம்!   தீமைகள் கலையும் ஆசான் பாக்குச்சி சமைத்து நானும் பாதைவழி காணல் நன்றே பூமணம் காத்தல் ...

ஆய்வுக் களம்

  தாய்ப்பால் வாய் நன்கு அமையாக் குளனும் வயிறு ஆரத் தாய் முலை உண்ணாக் குழவியும் சேய் மரபின் கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இம் மூவர் நல்குரவு சேரப்பட்டார்                                                 நல்லாதனார்,      திரிகடுகம். 84  ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர் தளர் நடை வருத்தம் வீட அலர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழீஇப் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் ...      கடியலூர் உருத்திரங் கண்ணனார் பெரும்பா ...

பூட்டப்பட்டது அண்ணா மேம்பாலம்!

  மாணாக்கர் எழுச்சி!   முள்ளிவாய்க்கால் முற்றத்தை உடனே மறு சீரமைப்பு செய்ய வேண்டியும் கொளத்தூர் மணி, பழ.நெடுமாறன்  முதலான தமிழ் ஆர்வலர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டியும்  மாணாக்கர் போராட்டம் நாடெங்கும் நடைபெறுகிறது. அதில் ஒன்றாக, வரலாற்றில் முதன்முறையாக சென்னை அண்ணா மேம்பாலத்தைச் சங்கிலியால் பூட்டிப் போக்குவரத்தை முடக்கினர்  மாணாக்கர்கள். இப்போராட்டத்தில் 70 மாணாக்கர்களும் ...

பரிவுகாட்டப்பட வேண்டியவர்களைப் பாழ்கிணற்றில் தள்ளலாமா?

சிறப்புமுகாம்வாசிகள் மடல் அனுப்புநர் : இலங்கைச் சிறைவாசிகள் இலங்கைச் சிறப்புச்சிறை மத்தியச் சிறை வளாகம் திருச்சி ஐயா வணக்கம். நாம் இந்த  மக்களாட்சி நாட்டின் விருந்தாளிகள். எம்மீது ஐயத்தின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுப், பிணையில் வெளியே வந்தவர்கள் . வழக்கை முடிக்காமல் சொந்த நாட்டிற்குச் சென்று விடுவார்கள் எனும் அடிப்படையில் வெளிநாட்டவர் தடுப்புச் சட்டம் 3உ-ஐப் பயன் படுத்தி எம்மைச் சிறப்பு முகாம்களில் அடைக்கின்றீர்கள். எமது ...

மாமூலனார் பாடல்கள் 2 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

  (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   அகம்                                                                                                                                                                பாலை 1         வண்டு படத் ததைந்த கண்ணி, ஒண் கழல், உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நற் போர் நெடு வேள் ஆவி, அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண்,   5           “சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம்” என்ற சொல்தாம் மறந்தனர்கொல்லோ தோழி! சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டுப் பொலங்கல வெறுக்கை தருமார் ...

மும்பை சு.குமணராசனுக்குப் பாராட்டு

ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில்  பத்து நாட்களாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ”தமிழ் இலெமுரியா” முதன்மை ஆசிரியர் சு.குமணராசன் இதழியல் பணிக்காகப் பாராட்டப் பெற்றார்.   விழாவில் பாலச்சந்திரன் இ.ஆ.ப. பாராட்டிச் சிறப்புரையாற்றினார்.

மருத்துவப் பண்டுவம் கடனாளி ஆக்குகிறது: சசி தரூர்

சென்னை : ''மருத்துவப் பண்டுவத்திற்காகக், கடனாளிகளாகும் நிலை, இந்தியாவில் நிலவுகிறது. எனவே, குறைந்த செலவில், தரமான மருத்துவம் வழங்க, மருத்துவர்கள் முன்வர வேண்டும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர், சசி தரூர் கேட்டுக் கொண்டு உள்ளார். இராமச்சந்திரா பல்கலைக் கழகத்தின், 18 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. ...