image-14175

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே! – சி.இலக்குவனார்

தொல்காப்பியம் ஒரு வரலாற்று நூலே!   தொல்காப்பியர் தம்முடைய சமசுகிருதப் புலமை தமிழின் அழகையும், தனித் தன்மையையும், சிதைப்பதற்கு இடம் தரவில்லை. வடவேங்கடம் தென்குமரி இடையே உள்ள கிடைத்த தமிழ் நூல்களின் அடிப்படையிலேயே தொல்காப்பியர் தம்முடைய சிறந்த நூலை யாத்துள்ளார் எனப் பனம்பாரனார் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் 'என்மனார்' 'என்ப' 'என்மனார் புலவர்' எனத் தம் ...
image-14173

தொல்காப்பியமே கிறித்து காலத்திற்கு முற்பட்ட வரலாற்று வாயில் – சி.இலக்குவனார்

  கிறித்து காலத்திற்கு முற்பட்ட தமிழ்நாட்டின் நிலையையும், தமிழ் மொழி இலக்கிய நிலையையும் அறிவதற்குத் தொல்காப்பியமே வாயிலாய் அமைகின்றது. எல்லா வகையிலும் தமிழ்நாட்டின் வரலாற்றில் தொல்காப்பியமே ஒரு எல்லைக் கல்லாக விளங்குகிறது. தொல்காப்பியர் இலக்கண ஆசிரியராக மட்டுமல்லாமல் புலவராக, மொழியியலாளராக, மெய்யியலாளராக, வரலாற்றறிஞராக மன்பதையியல் அறிஞராகத் திகழ்கிறார். தொல்காப்பியர் தமிழிலும், சமசுகிருதத்திலும் சிறந்த புலமையாளராக விளங்குகிறார். தொல்காப்பியம் ...
image-14168

வளம் பெறும் மொழி மாறுதலடையும் – சி.இலக்குவனார்

வளம் பெறும் மொழி மாறுதலடையும் இலக்கிய ஆசிரியரால் வளம் பெறும் மொழி, என்றும் ஒரே நிலையானதாக இராது. காலந்தோறும் மாறுதலடையும். இலக்கண வரம்புக்குட்பட்டு மாறுதலடைதல், மொழி வளர்ச்சியின் இன்றியமையாத நெறியாகும். இலக்கண ஆசிரியராம் தொல்காப்பியர் இம்மொழியல்பை நன்கு அறிந்த மொழிநூற் புலவராவார். அதனால் தாம் கூறும் இலக்கண வரம்புகட்கு விதி விலக்களிக்கும் புறனடை நூற்பாக்களை ஆங்காங்கே புகன்றுள்ளார். - ...
image-14164

எழுத்தாளர் மு.முருகேசுக்குப் பாராட்டும் பரிசும்

வந்தவாசி எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன!        வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் மு.முருகேசுக்கு நெய்வேலி புத்தகக்காட்சியில் சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான பாராட்டும் பரிசும் வழங்கப்பட்டன.   நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சார்பில் ஆண்டுதோறும் நெய்வேலியில் புத்தகக்காட்சி நடைபெற்று வருகிறது. 18-ஆவது ஆண்டு புத்தகக்காட்சி நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அரங்கில் ஆனி ...
image-14156

ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! – அ.க.நவநீதக்கிருட்டிணன்

தமிழர் திருநாடே தாரணியில் முதல் தோற்றம் அமுதமொழி கண்டார் அருந்தமிழர் அந்நாளில் இயற்கையோ டியைந்தமொழி இன்பம் நிறைந்ததமிழ் நயங்கள் நிறைந்தமொழி நல்லறிஞர் கண்டதமிழ் எப்போ பிறந்ததென்று எவரும் அறிந்ததில்லை ஒப்பில்லா இன்பத்தமிழ் உலகில் முதன்மொழியே! குமரியின் தென்திசையில் குளிர்ந்த வளநாடு தமிழர்திருநாடு தழைத்தோங்கி இருந்ததையோ! அந்நாட்டில் தென்மதுரை அழகான நன்னகரில் தென்னன் தமிழ்ச்சங்கம் திறம்பெறவே அமைத்திட்டான்! கன்னித்தமிழ்மொழியைக் கருத்தாய் வளர்த்திட்டான் பன்னூறு புலவரதில் பழந்தமிழை ஆய்ந்திட்டார் பின்னர்க் கபாடபுரம் பெரியதொரு தமிழ்நகரம் மன்னு தமிழ்ச்சங்கம்மறுபடியும் ...
image-14151

சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு – 2: மறைமலை இலக்குவனார்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2  போராரவாரம்:   பேராரவாரம் மிக்க சூழல்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிய சங்கச் சான்றோர்கள் போராரவங்களையும் பதிவு செய்துள்ளனர். புறப்பாடல்களைவிட மிகுதியாக அகப்பாடல்களில் இவை நுவலப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஊரார் அலர் தூற்றலின் கொடுமையால் துன்புறும் தலைவியும் தோழியும், அலரினால் எழுந்த ஆரவாரம் போராரவாரத்தைக் காட்டிலும் பெரிதாக விளங்கியதாக எடுத்துக்கூறும் வகையில் இப் பாடல்கள் அமைந்துள்ளன.   ...
image-14140

சிரியுங்கள் – வெ.அரங்கராசன்

சிரியுங்கள்           சிரியுங்கள்...சிரியுங்கள்.... சிந்தை குளிரச் சிரியுங்கள்.... சந்திப்புத் தொடரவே சிந்தித்துச் சிரியுங்கள்.... சிரித்தாலும் சிரியுங்கள்---பிறர் சிரிக்காத போதும் சிரியுங்கள்.... சிரிப்புக்காகச் சிரிக்காமல் சிரிப்பதற் கென்றே சிரியுங்கள்.... மனத்தால் மனம்சேரச் சிரியுங்கள்..... மனத்தை மதித்துச் சிரியுங்கள்..... மனம்விட்டுச் சிரியுங்கள்.... மனம்மகிழ்ந்து சிரியுங்கள்..... நோய்விட்டுப் போக வாய்விட்டுச் சிரியுங்கள்..... காய்விட்டுக் கனிதொட்டுத் தேன்சொட்டச் சிரியுங்கள்.... நொந்துபோன நெஞ்சினிலே வந்துவாழும் நோய்கள் எல்லாம் வெந்து வீழ்ந்து சாகும்படி முந்தி வந்து சிரியுங்கள்..... யாழிசை மழலையின் ஏழிசைச் சிரிப்பே போல வாழும் காலம் எல்லாம் கோலம் கொள்ளச் சிரியுங்கள்..... முதல்நாள் சிரிப்பது போலவே முப்பதாம் நாளும் சிரியுங்கள்.... மூலதனமாய்ச் சிரிப்பும் அமைவதால், முழுமை மனத்துடன் சிரியுங்கள்..... சோகப் பயிர்கள் சாகும்படி சிரியுங்கள்.... சுகம்மிகு பயிர்கள் செழிக்கும்படி சிரியுங்கள்.... சந்தி சிரிக்காமல் இங்கிதம் தெரிந்து சந்தமாய்ச் சிரியுங்கள்.... சந்தனமாய்ச் சிரியுங்கள்.... ஒப்புக்குச் சிரிக்காமல் உண்மையாய்ச் சிரியுங்கள்.... எண்ணத்தில் குழிஏதும் விழாமல் கன்னத்தில் குழிவிழச் சிரியுங்கள்..... ஆணவச் சிரிப்பின் வேரினை அறுத்தெறிந்து பாரினை வென்றிடப் பணிவோடு சிரியுங்கள்.... அசட்டுச் சிரிப்புக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் இடம்அறிந்து--- வெல்லும் தடம்அறிந்து சிரியுங்கள்..... விரக்திச் சிரிப்பினை விரட்டிவிட்டு---நல்ல நம்பிக்கை வந்உதிக்கத் தெளிவாகச் சிரியுங்கள்.... கூனிக் குறுகும் சிரிப்பைக் குப்பையில் போட்டு விட்டு மேனி குலுங்கி மகிழ்ந்திட மேன்மை யாகச் சிரியுங்கள்.... காரியச் சிரிப்புக்குக் கறுப்புக் கொடிகாட்டித் தோழமை உணர்வோடு ஆழமாகச் சிரியுங்கள்..... விளையாட்டு வினையாகி வேதனைகள் ஊட்டாமல் வெற்றிகள் விளைந்து சுற்றிவரச் சிரியுங்கள்..... காந்தி போலச் சிரியுங்கள்....சூரிய காந்தி போலச் சிரியுங்கள்.... தோகைமயில் ஆடும்படி---கார் மேகமெனச் சிரியுங்கள்..... அன்புக்குத் தூதுவிட்டு அருளுக்குப் பாதை போட்டு மன்றத்தில் உலாவரும் தென்றல் போலச் சிரியுங்கள்.... தனியாகச் சிரித்துத் 'தனிப்பட்டம்' வாங்காமல் துணையோடு துணைநின்று துணிவாகச் சிரியுங்கள்.... பந்த பாசம் சொந்தமாக இந்தப் புவியும் சொர்க்கமாகச் செந்தமிழின் சந்தம் போலச் எந்த நாளும் சிரியுங்கள்..... கேலிச் சிரிப்பும் ஏளனச் சிரிப்பும் கிண்டல் சிரிப்பும் நக்கல் சிரிப்பும் இல்லாது ஒழிந்திட உதயத்துக் கதிர்போல உளம்மகிழச் சிரியுங்கள்..... வெற்றியிலும் சிரியுங்கள்... வீழ்ச்சியிலும் சிரியுங்கள்.... விழுந்தாலும் மேலே எழும்வரை சிரியுங்கள்.... விடியலுக்குச் சிரியுங்கள்--விந்தை படியும்படி சிரியுங்கள்.... விளங்கும்படி சிரியுங்கள்---வெளிச்சம் வழங்கும்படி சிரியுங்கள்.... சிரியுங்கள்...சிரியுங்கள்... சிந்தித்துச் சிரியுங்கள்....  -  பேரா.வெ.அரங்கராசன் பேரா.வெ.அரங்கராசன்
image-14148

திருக்குறளில் வணிகவியல் மேலாண்மைக் கோட்பாடுகள் 2 – வெ.அரங்கராசன்

(சூன் 28, 2015 தொடர்ச்சி)2 11.0. வல்லுநர் கருத்து அறிதல்      ஒரு தொழிலை / வணிகத்தை / நிறுவனத்தை நடத்தும் போது, எதிர்பாராத விதமாகச் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்றும். அவற்றைச் சரி செய்வதற்கு, அவற்றின் உள்ளும் புறமும் உள்ள அனைத்தையும் படித்த - ஆராய்ந்த - பட்டறிந்த - வல்லுநர்களிடம் கேட்டுத் தெரிந்து ...
image-14143

மகளுக்குத் தந்தையின் மடல் – இளையவன்-செயா

  பெரியார் ஆண்டு 135  தொ. ஆ. 2880 தி.ஆ. 2046        ஆடவை ( ஆனி )  13          28--06--2015 அன்பு மதுமலர்க்கு வணக்கம். நலம். நாடலும் அதுவே.        கடந்த  22ஆம் நாள்  உங்கள்  புகழுரையை  மின்னஞ்சல் மூலம் படித்தேன். அதனை அப்படியே  ஏற்றுக்கொள்கிறேன். நான் இளைஞர்களிடம் ...
image-14146

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை!

கோஅனா பள்ளியில் தமிழ்க்கல்வி தேவை! அனைவருக்கும் இனிய வணக்கங்கள். சப்பான் தமிழ்ச்சங்கத்தின் மொழிவளர்ச்சித் துறையின் சார்பாகச் சப்பான் நாட்டின் கவாசாகி நகரில் இயங்கிவரும் கோஅனா பள்ளிக்குச் (Kohana international school) சென்றிருந்தோம். இப்பள்ளியின் தலைமை ஆசிரியரும் பள்ளியின் முதல்வருமான திருமதி.பிரியா அவர்கள் நம்மை அன்புடன் வரவேற்றார். கோஅனா பள்ளி பன்னாட்டுப் பொதுச் சான்றிதழ்க் கல்விக்கான  (IGCS என்னும்) பாடத்திட்டத்தைப் பின்பற்றும் ...
image-14137

குமுக வளர்ச்சி 2 – முனைவர் இராம.கி.

(சூன் 28, 2015 தொடர்ச்சி) முனைவர் இராம.கி.   குமிந்துகூடிச் சேர்ந்துவாழும் மக்கள்கூட்டத்தையே குமுகமென்று சொல்கிறோம்.  குமுகமென்பதை வடமொழி உச்சரிப்போடு சமூகமென்று சொல்லியே நாமெல்லாம் பழகிவிட்டோம். ஆங்கிலத்தில் இதை society என்பார். 'People bound by neighborhood and intercourse aware of living together in an ordered community' ஆகக் குமுகமென்பது வெறுங் கும்பலல்ல. பல்வேறு வகைப்பட்ட மக்கள் ஓரிடத்திற் ...
image-14133

தாய்த்தமிழும் மலையாளமும் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்த்தமிழும் மலையாளமும் 1   தமிழ் உலக மொழிகளுக்கெல்லாம் தாயாகத் திகழ்ந்தாலும் தமிழ் நாட்டு வரலாறு போன்று தமிழ் மொழியின் உண்மையான வரலாறும் அனைவரும் அறியும் வண்ணம் வெளிப்படுத்தப்படவில்லை. போதிய சான்றுகள் இருப்பினும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவது போன்று தமிழின் தொன்மைபற்றியும் நாம் பேசி வருகிறோம்; பேசும் அளவைவிடக் குறைவாக எழுதி வருகிறோம். நடுநிலை ஆய்வறிஞர்களால் ...