முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள்!

  இந்திய – சிங்களக் கூட்டுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழ மக்களுக்கு நினைவேந்தும் விதமாக, தஞ்சை விளாரில், உலகத் தமிழர் பேரமைப்பால் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுவரையும், பூங்காவையும் இடித்த தமிழக அரசின் வன்செயலைக் கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அய்யா பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 போராளிகளை ...

மதிமுக வழக்குரைஞர் மாநாடு : விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி தீர்மானம்

    மதிமுகக் கழக வழக்குரைஞர் மாநாடு 16.11.13 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குச்  சென்னை, எழும்பூர், வேனல்சு சாலை, இம்ப்பீரியல் வளாகத்தில் உள்ள சிராசு மகாலில் கழகச் சட்டத்துறைச் செயலாளர் வழக்குரைஞர் தேவதாசு தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் காலை அமர்வில் பின்குறிப்பிட்டுள்ள தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானம் எண். 1 சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குக! தீர்மானம் எண். ...
image-102

ஏற்காடு இடைத்தேர்தல் : 27 பேர் வேட்புப் பதிவு

ஏற்காடு இடைத்தேர்தலில்,  திசம்பர், 4 இல் நடைபெற உள்ள, ஏற்காடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான, வேட்புப்பதிவு கடந்த, 9 ஆம் நாள் தொடங்கி, நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதுவரை, அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் உட்பட, 27 பேர்  விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களில், இரண்டு பேர், அ.தி.மு.க., வேட்பாளர் சரோசா, தி.மு.க., வேட்பாளர் மாறன். மற்ற இரண்டு ...

யாழில் காவல்துறையினர் கொடூரமான தாக்குதல்: உலகத் தலைவர்கள் அதிர்ச்சி

  காணாமல் போனவர்களுடைய உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைப்  பொறுத்துக் கொள்ள இயலாத சிங்களக்காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக பெண்கள் என்று பாராமல் எம்மையும் பாதிரியார்களையும் தாக்கினர். கவனயீர்ப்புப் போராட்டத்தில் பலத்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பா.உ சரவணபவன், சுரேசு பிரேமச்சந்திரன், வடமாகாணஅவை உறுப்பினர் பசுபதி(ப்பிள்ளை), ஆனந்தி சசிதரன்  முதலானவர்கள் விவரித்தனர்.

இசை அமைப்பாளர் பரத்வாசின் திருக்குறள் பாடல் பேழை

இசை அமைப்பாளர் பரத்வாசு. 1330 திருக்குறள்களையும் 500 பாடகர்களைக் கொண்டு பாட வைத்துத் திருக்குறள் பாடற்பேழை உருவாக்குகிறார்.  திரையிசையால் பணம் கிடைத்தாலும் மன நிறைவிற்காகத் திருக்குறள் பாடலிசை முயற்சியில் ஈடுபட்டுவருவதாக இசைஅமைப்பாளர் பரத்வாசு கூறுகிறார். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பால்களுக்கும் தனித்தனிப் பண்கள்  அமைத்து  அவற்றைத் தனித்தனி பகுதிகளாக உருவாக்கி  உள்ளதாகவும், உலகம் முழுவதும் பயணம் ...

முள்ளிவாய்க்கால் முற்றம்: தமிழக அரசு கட்டித்தர வேண்டும்

-திருமாவளவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சை அருகே விளார்  என்னும் ஊரில் எழுப்பப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் எனும் நினைவிடத்தின் சுற்றுச்சுவரினை தமிழக அரசு திடீரென இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. மேலும், அவ்வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த பூங்காவும் சிதைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தைக் கவர்ந்து நினைவிடம் கட்டப்பட்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சுவரை இடித்ததாகவும் பூங்கா பகுதியைக் ...

அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

  சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் குழந்தைகள் நாள் விழாவும் சிறந்த நூலகர்களுக்கான  எசு.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கும் விழாவும் 14.11.13 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. இந்த விழாவில்   பேசிய பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா அரசுப் பள்ளிகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அவர்கள் பணி ...

திருக்குறள் வாழ்வியல் நூல்!

  - சுப.வீரபாண்டியன் ஆயிரம் மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆனால், தாய் மொழியை மறந்துவிடாதீர்கள்! எந்த நாட்டில் வேண்டுமானாலும் வாழுங்கள்.. ஆனால், சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள்! மூத்தவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! குறைந்தது திருக்குறளையாவது பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். திருக்குறள் படித்தால் வேலை கிடைக்குமா என்று கேட்டால், கிடைக்காது என்பதுதான் உண்மை. ஆனால்,திருக்குறள் படித்தால், கிடைத்த வேலை நிலைக்கும். புதிய உறவுகள் ...

தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!

முந்தைய செய்தி இலங்கை பொதுவள ஆய மாநாட்டை இந்திய அரசு, முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்! தமிழகச் சட்ட மன்றச் சிறப்புக் கூட்டத்தில் தீர்மானம்!   இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழர்களைக் கொன்று குவித்துப் போர்க்குற்றத்திலும் இனப்படுகொலைகளிலும்  ஈடுபட்ட இலங்கையில் நடைபெறும் பொதுவள ஆய மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களும் ...

பிரித்தானியத் தமிழர் பேரவை அறிக்கை

முந்தைய செய்தி சட்ட மன்றத் தீர்மானம் அவலப்பட்ட ஈழத்தமிழ் மக்களிற்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றது: பிரித்தானியத் தமிழர் பேரவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் செயலலிதா அம்மையார் கொண்டுவந்து நிறைவேற்றியுள்ள தீர்மானத்தை வரவேற்பதாக அறிவித்துள்ள பிரித்தானியத் தமிழர் பேரவை, இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி ஈழத்தமிழ் மக்களின் இன்னல் தீர அம்மையார் தொடர்ந்தும் குரல்கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ...

காணிக்கை

விடுதலைப்பூ ஒரு நாளில் மலர்ந்திடாது - என்றாலும் என்றேனும் ஒரு நாள் மலர்ந்தே தீரும் என்ற நம்பிக்கையில் தாய் மண் காக்க உயிர் நீத்த உறுப்புகள் இழந்த உறவுகள் பிரிந்த உடைமைகள் பறிகொடுத்த ஈழத்தமிழ் மாவீரர்களுக்கும் தாய்மண்காக்கப் போராடிய, போராடும் மண்ணின் மைந்தர்களுக்கும்

தமிழைத் தாங்கும் தமிழ்வழிப் பள்ளிகள்

  - வெற்றிச்செழியன் செயலர், தமிழ்வழிக்கல்வி இயக்கம் தமிழ்வழிக் கல்வி        “தாய்மொழி வழிக்கல்வியே சிறந்தது, சரியானது”, என நாம் அனைவரும் அறிவோம்.  உலகெங்கும் வாழும் அறிஞர்கள் இதையே வலியுறுத்தி வருகின்றனர்.  தமிழ் நமது தாய்மொழி; எனவே, தமிழே நமது கல்வி மொழியாக இருக்க முடியும்; இருக்க வேண்டும்.         தமிழ் நமது தாய்மொழி என்ற நிலையைத் தாண்டி, தலைமுறைகளாய் வளர்ந்து வரும் ...