image-51434

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 47-49

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 47. சவாரிக் குதிரை இங்கிலாந்தை ஆண்ட மகாராணி விக்குடோரியாவுக்கு ஒரு நாள் ஒர் ஆசை - தன் பேரனைத் (ஐந்தாம் சியார்சு) தூக்கி மகிழவேண்டும் என்பது.அதைப் பிறர் யாரேனும் பார்க்கப்படாதே என்ற அச்சம் வேறு இருந்தது. என் செய்வார்? சிறு குழந்தையைத் தூக்க ஆசை.மகாராணியாயிற்றே! யாரும் இல்லாத நேரம், ...
image-51628

உ.வே.சா.வின் என் சரித்திரம் 114: அத்தியாயம் – 76: தல தரிசனம்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-76 தல தரிசனம் திருக்குற்றாலத்தில் சில தினங்கள் தங்கிப் பிறகு ஆதீனத்திற்குரியகிராமங்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபடியே சுப்பிரமணிய தேசிகர் யாத்திரை செய்யலானார். வேணுவன லிங்கத் தம்பிரான் ஆட்சியின் கீழிருந்த அந்தக் கிராமங்கள் திருவாவடுதுறை மடத்தின் சீவாதாரமாக உள்ளவை. அவற்றில் கம்பனேரி புதுக்குடி என்பது ஒரு கிராமம். அதை ...
image-51666

சுவைத் தமிழின் மூதறிஞர் – கடவூரார் கவிதையும் தமிழ்ப்பாவை  முன்னுரையும்

(திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை-தொடர்ச்சி) சுவைத் தமிழின் மூதறிஞர் மறைமலையார் பாவாணர் அடிச்சுவட்டில் மாண்பார்ந்த தனித்தமிழ்க்குப் பெருமை சேர்த்த நிறைபுலமை யாளர்நம் பழனிவேலர் நினைவெல்லாம் மொழிமானம் தாங்கி நிற்கும் குறையில்லாப் பெருங்கொள்கை யாளர்! அந்நாள் கோதறுசீர் 'மாணாக்கன்' இதழின் மூலம் முறையான தமிழ்த்தொண்டு புரிந்த நல்லார்! மூப்பினிலும் தமிழ்யாப்பின் மரபில் வல்லார்! உரமுடையார்! திறமுடையார்! தமிழைக் காக்கும் உணர்வுடையார்! போர்க்குணமும் உடையார்! நெஞ்சில் கரவறியார்! செந்தமிழைக் காப்ப தற்குக் களம்புகுவார்! தன்னலத்தைச் சிறிதும் ...
image-51675

இலக்குவனார் திருவள்ளுவனுக்கு அடர் தமிழ்ப் போராளி விருது – பெருங்கவிக்கோ அளித்தார்

அன்னை சேது அறக்கட்டளை நடத்திய பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ இணையர் அன்னை சேதுமதியின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தலின் (ஐப்பசி 23, 2055  /  09.11.2024 சனி மாலை 5.30) பொழுது தமிழ்த் தொண்டறத்தார்களுக்கு விருதுகள் வழங்கப்பெற்றன. தொடக்கத்தில் பன்னாட்டுத்தமிழுறவு மன்ற இயக்குநர் கவிஞர் தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையில் விருதாளர்களைச் சிறப்பாக அறிமுகப்படுத்தினார். புலவர் மா.கணபதி தமிழ்ப்போராளி புலவர் த.சுந்தரராசன் படத்தினைத் திறந்து வைத்தார். கந்தசாமி (நாயுடு) கல்லூரி முதல்வர் முனைவர் வா.மு.சே. ஆண்டவர் விருது வழங்குநரை அறிமுகப்படுத்தினார். அறிஞர்கள் ...
image-51520

தமிழர் பண்பாடு, தொடர்ச்சி – புலவர் கா.கோவிந்தன்

(தமிழர் பண்பாடு - புலவர் கா.கோவிந்தன், தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 6 தமிழர் பண்பாடு தென்னிந்திய உழவர் பெருமக்களின் உழவு பற்றிய மதி நலத்திற்கு, இன்றைய அறிவியல், ஒரு சிறிதே துணை புரியவல்லதாம் என்பதற்கேற்ப, உழவுத்தொழில் பற்றிய கலைகள், நன்மிகப் பழங்காலத்திலேயே முழுமை பெற்று விட்டன. ஆற்றுப்படுகைக்கு அப்பால் வெள்ளத்தால் அரிப்புண்டு அடித்துக் கொண்டுவரப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை ...
image-51469

கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 74 : 15. இசைத்திறம் உணர எழுந்த காதை

(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 73 : ஏமகானன் தூண்டு மொழி-தொடர்ச்சி) பூங்கொடி இசைத்திறம் உணர எழுந்த காதை அடிகளார் ஆணை பூங்கொடி யாகிய பொற்புடைச் செல்வி ஆங்கண் மீண்டதும் அருண்மொழிக் குரைப்போள் `மீனவன் திறமெலாம் விளம்பித் தமிழால் ஆன நல்லிசை யாண்டும் பரவிடச்                   சுவடியின் துணையால் தொண்டியற் றென்று 5           தவறிலா அடிகள் சாற்றினர்' என்றனள்; அருண்மொழியும் இசைதல்           `ஆம்என் மகளே! அதூஉஞ் சாலும் தோமறு தமிழிசை ...
image-51432

அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43-தொடர்ச்சி) அறிவுக்கதைகள் நூறு 44. செட்டியாரும் காகமும் செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.நரி - 'காக்கா காக்கா - உன் குரல் எவ்வளவு அழகாக - இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது.காகம் அதை நம்பி,வாய்திறந்து ...
image-51655

சட்டச் சொற்கள் விளக்கம் 876-880: இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 871-875 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 876-880 876. alternative and cumulative remedyமாற்று - திரள் தீர்வழி மாற்று ஒட்டுமொத்தத் தீர்வழி திரள் தீர்வழி என்பது தரப்பாருக்கு நடைமுறையில் உள்ள தீர்வைவிடக் கிடைக்கும் வாய்ப்புள்ளதாகும். ஒரே இரண்டு தீர்வழிகளும் தவறு செய்பவருக்கு அல்லது தவறு செய்பவர்களுக்கு எதிராக அவரால் ...
image-51622

உ.வே.சா.வின் என் சரித்திரம் 113: அத்தியாயம் – 75: இரண்டு புலவர்கள்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 112: அத்தியாயம் – 73: நானே உதாரணம்-தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-75 இரண்டு புலவர்கள் புலவர்கள் பலர் உள்ள புளியங்குடியென்னும் ஊரிலிருந்து இருவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க ஒரு நாள் செவந்திபுரத்திற்கு வந்தனர். அவர்களோடு வந்த கட்டைவண்டியில் பல ஓலைச் சுருணைகள் வந்திருந்தன. அவற்றையெல்லாம் திண்ணையில் இறக்கி வைத்தனர். அப்போது அத்திண்ணையிலிருந்து தேசிகர் எங்களுக்குப் பாடம் சொல்லி ...
image-51660

பேரா.சி.இலக்குவனார் 116ஆவது பிறந்தநாள் நிகழ்வு, சென்னை

பள்ளிக்கல்வித் துறை பொது நூலக இயக்ககம் அண்ணா நூற்றாண்டு நூலகம் கோட்டூர்புரம், சென்னை 85பள்ளிக்கல்வித் துறை செந்தமிழ்ச் சிற்பிகள் உரையரங்கம் 1 பேராசிரியர் சி.இலக்குவனார் 116ஆவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்வு கார்த்திகை 02, 2055 ஞாயிறு  17.11.2024 மாலை 5.00 சிறப்புரை முனைவர் மறைமலை இலக்குவனார் இயக்குநர் உலகத் திருக்குறள் இணையக் கல்விக் கழகம் நிகழ்விடம் இரண்டாம் தளம் ஆ பிரிவு அண்ணா நூற்றாண்டு நூலகம்
image-51652

திருத்துறைக் கிழார் கட்டுரைகள் – அணிந்துரை

முனைவர் ப.தமிழ்ப்பாவை தொகுப்பில் திருத்துறைக் கிழார் கட்டுரைகள் அணிந்துரை வை.மு.கும்பலிங்கன்    திருத்துறைக்கிழார் எழுதிக் குவித்த எழுத்துகளாம் பூந்தோட்டத்தில் காய், கனித்தோப்பில் புகுந்து, சுற்றிப்பார்த்தும், உண்டு மகிழ்ந்தும் களிப்போம். இவர், தாம் உருவாக்கிய எழுத்து என்னும் கருத்துத் தோட்டத்தை 1.தமிழ், 2.தமிழர், 3.தமிழ்நாடு என மூவகைப்படுத்தி, சுற்றுவேலி கட்டி அமைத்துள்ளார். தமிழ்த் தோப்பில் 14 கட்டுரைகளும், தமிழர் தோப்பில் 19 ...
image-51516

தமிழர் பண்பாடு- தொடர்ச்சி: புலவர் கா.கோவிந்தன்

(தமிழர் பண்பாடு - புலவர் கா.கோவிந்தன், தொடர்ச்சி) ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 5 தமிழர் பண்பாடு- தொடர்ச்சி: புலவர் கா.கோவிந்தன் ஆயர் குறிஞ்சியில் ஒருபால் மக்கள் தொகை பெருகிவிட, மற்றொருபால் கிடைக்கக்கூடிய உணவுப்பொருள் வழங்கல், குறையத் தொடங்கிய போது, அம்மக்கள், அடுத்த நிலப் பகுதியாகிய காட்டுநிலமாம் முல்லைக்குக் குடிபெயர்ந்தனர். அக்காலக் கட்டத்தில் எருமை, பசு, செம்மறியாடு, வெள்ளாடு ஆகிய விலங்கினங்களையும், குறவர் ...