image-782

அமஅநியில் (AIIMS) 228 பணியிடங்கள்

  மத்திய நல்வாழ்வு-குடும்பநலத்துறை அமைச்சகத்தின் கீழ்ப்  புதுதில்லியில் செயல்பட்டு வரும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுனத்தில்(AIIMS)  ஒழிவிடமாக உள்ள 'ஆ', 'இ' பிரிவு (குரூப் 'பி' மற்றும் 'சி' ) பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம், பொறியியல், அலுவலகம் சார்ந்து  16 வகை பணிகளில் மொத்தம் 228 ஒழிவிடங்கள் உள்ளன. அகவை உயர் ...
image-778

தீயக் குழுக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! கச்சத்தீவை மீட்போம்! – முதல்வர்

முதல்வர் செயலலிதா தலைமையில், நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள்- காவல்துறை அதிகாரிகள் மாநாட்டின் முதல் நாளில்(11.012.13), முதல்வர் செயலலிதா தொடக்கவுரை யாற்றினார். அப்பொழுது, தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும்   தீயக்குழுக்களைக் காவல்துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் செயலலிதா தெரிவித்தார்.  'ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், மகளிர் ...
image-772

இலங்கையில் நீதி நிலை நிறுத்தப்படும் – கனடா உறுதி!

மனித உரிமை, சட்டம் ஒழுங்கு,  சமயஉரிமை போன்றவற்றில் மிக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள கனடா, இத்தகைய நிலைப்பாட்டில் இலங்கை அரசு போதிய பற்றுறுதியைக் காட்டவில்லை என்பதைக் காரணம் காட்டி, அண்மையில் இடம்பெற்ற பொதுவள மாநாட்டில் கனடியத் தலைமையாளர் கலந்து கொள்வதில்லை என்ற முடிவை எடுத்திருந்தது. இதற்கிணங்க, மனிதநேயம் மிக்க, கனடியத் தலைமையாளர் இசுடீபன் ஆர்பர் இனப்படுகொலை நாட்டில் ...
image-768

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் மழலையர் கற்றல் கொண்டாட்டம்

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உலக மாந்த உரிமை நாளான திசம்பர் 10 அன்று ‘மழலையர் கற்றல் கொண்டாட்டம்’ சிறப்பாய் நடந்தது. திரைப்பட நடிகர் தோழர் இராமு அவர்களும் எழுத்தாளர் வழக்குரைஞர் நடராசன் அவர்களும் மழலைச் சொல் பதிப்பகம் தோழர் மலர்விழி அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். மழலையர் தங்களின் கற்றல் திறனை மகிழ்வாய் வெளிப்படுத்தினர். பல்வகைப் படங்களை, கற்றல் ...
image-766

தமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் – 3

 தமிழ்வழிப் பள்ளி அமைப்புகளும் பள்ளிகளும் கல்வியாளர் வெற்றிச் செழியன், செயலர், தமிழ்வழிக் கல்விக்கழகம். தமிழ்வழியில், தமிழிய உணர்வுடன் நடைபயின்று வருகின்றன தமிழ்வழிப் பள்ளிகள். ஒத்தக் கருத்தினால் ஒன்றுபட்டுச் செயல்படுதல், அவ்வழி தமிழ் வழிக் கல்வி விழிப்புணர்வை நம் தமிழ் நாடெங்கும் எடுத்துச் செல்வது, பள்ளிகளை மேம்படுத்துவது என்ற நிலையில் தமிழ் வழியில் நடந்த பள்ளிகள் அமைப்புகளாக ஒன்று ...
image-746

கரிகாலன் மகனே! தமிழுரிமை பறித்தாரை மாய்ப்போம்!

- திருக்குறள்பாவலன் தமிழ்மகிழ்நன் விழித்தவிழி இமையாமல் வீணர்கண் கண்டான்! வெங்களத்தில் மார்மீது விழுப்புண்கள் பெற்றான்! அழியாத புகழுடம்பு ஐயனவன் பெற்றான்! ஐயமின்றித் தமிழீழம் ஆளவுயிர் தந்தான்! பழிசுமந்த சிங்களரைப் பசும்மழலைக் கண்கள் பார்த்தபடி படமாகப் பாரெங்கும் கண்டார்! எழிலூறும் இருவிழியால் எரிதழலை யெழுப்பும் ஏந்தலவன் நினைவேந்தி இனியென்று மிருப்போம்! வெறித்தபிள்ளை விழிகளிலே வாழ்வச்சம் இல்லை வாழ்நாளில் இதுபோலே வையகமெங்கும் உண்டா? எறிந்தவேலை இமையாமல் எதிர்த்துவிழி நோக்கும் இணையில்லாக் கரிகாலன் இளையமக னிவனே! பறித்தவாழ்வை யார்தருவார்? ...
image-690

சிற்றிந்தியாவில் பேருந்துமோதி இளைஞர் மரணம் – வன்முறை வெடித்தது

சிங்கப்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட கலவரம்!  இன்று (08.12.13) இரவு, பேருந்து மோதி இந்திய இளைஞர் ஒருவர் இறந்ததாகச் செய்தி பரவி அது கலவரமாக மாறியது. சிங்கப்பூரில் சக்திவேல் குமாரவேலு (அகவை 33) என்பவர்,  கடந்த ஈராண்டுகளாக, எங்கு அப்பு சூன் (Heng Hup Soon) என்னும்  நிறுவனத்தில் கட்டடப்பணியாளராக வேலைபார்த்து வந்தார்.  இவரே அந்த ...
image-684

வட மாநிலத் தேர்தல் : காங்கிரசு துடைத் தெறியப்பட்டது

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2013   (அடைப்பிற்குள் கடந்த தேர்தல் முடிவுகள் குறிக்கப் பெற்றுள்ளன.)   மாநிலம்   மொத்தத் தொகுதிகள் பா.ச.க. காங். ஏழை மக்கள் கட்சி பிற தில்லி   70 31(23) 8(43) 28(-) 3(4) இராசசுதான்  200 162 21   16(3)- மா; 0(23)   மத்தியப்பிரதேசம் 230 165(143) 58(71)   7(7) – ப; 0(7) சத்தீசுகர் 90 49(50) 39(38)   2(2) மா - மார்க்சியப் பொதுவுடைமை ப -  பகுசன்     தில்லித் தேர்தலில் காங்.முதல்வர் சீலாவை முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிட்ட  ஏழை மக்கள்கட்சித் தலைவர் அரவிந்து தன்னுடைய தேர்தல் முத்திரையான சின்னம் கொண்டு துடைத்தெறிந்தார். மூன்று முறை ...
image-736

பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனாரின் வாழும் தமிழ்க்கவிஞர்கள் தொடர் பொழிவு – 125

  நாள் : கார்த்திகை 17, தி.பி.2044  செவ்வாய்  திசம்பர் 10, கி.பி.2013  மாலை 6.00 மணி   இடம்:  எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், சென்னை   தலைப்பு : இளவரச அமிழ்தன் கவிதைகள்   தலைமை : முனைவர் இ.சுந்தரமூர்த்தி ஏற்புரை :  முனைவர் இளவரச அமிழ்தன்   வாழும் கவிஞர் பாநலன் போற்றிட வாரீர்!   ஒய்எம்சிஏ பட்டிமன்றம் சென்னை 600 001        
image-697

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 4

தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன் (முந்தைய இதழின் தொடர்ச்சி) தமிழை அழிப்பதற்கான முயற்சியில் இம்மேதை இறங்கியுள்ளார். அனைத்துத் தமிழரும் இவரின் கருத்தை வன்மையாகக் கண்டிக்க வேண்டும்! சோமன் பாபு (Soman Babu) எப்படி மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன நமது அடையாளம் ஆகின்றதோ... அதே போல நமது தமிழ் எழுத்தும் நமது அடையாளமே. இன்று நமது எழுத்தை விட்டுக் ...
image-729

விசயகாந்திற்கு வாழ்த்துகள்!

  விசயகாந்து எடுத்த முயற்சி  பாராட்டிற்குரியதே! ஆனால், அரசியல் கணிப்பின்றிக் காங்கிரசிற்கு ஆதரவாகத்தில்லியில் அவர் பேசியதுதான் தவறு. காங்கிரசிற்கு எதிரான அலை வீசும் தில்லியில் காங்கிரசு ஒன்றும் திருத்த முடியாத கட்சி அல்ல என்று சொல்லும் துணிவு எப்படி வந்தது? காங்கிரசைப் பற்றிய தவறான கணிப்பா? தன்னைப்பற்றிய உயர்வான மதிப்பா? காங்கிரசுடன் சேரத்துடிக்கும் ஒருவருக்குக் காங்கிரசை வீழ்த்த நினைப்போர் எங்ஙனம் வாக்களிப்பர்? காங்கிரசிற்கு எதிரான நிலைப்பாடுடன் பரப்புரை மேற்கொண்டிருந்தால் அவர் ...
image-725

ஆவடியில் வட இந்தியர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் !

 த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் கைது! ஆவடி இந்தியப் அரசுப் பாதுகாப்புத் துறை நிறுவனப் பணி வாய்ப்பில் குவிந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட இந்தியர்களை எதிர்த்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. முதலான பல்வேறு அமைப்புத் தோழர்கள் தளையிடப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில்  இந்திய அரசு பாதுகாப்புத்துறை  நிறுவனம் (OCF) செயல்பட்டுவருகிறது.  இதில் தையல் பணியாளர்களுக்கான  வேலைவாய்ப்புத் தேர்வு  நடைபெற்றது. வேலை ...