ilangai thamizh mannar marbinar prithyvirasu01
இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார்.

vicrama rasa singan kallarai07வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சிvicrama rasa singan kallaraikal06 செய்தனர்.  இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர் தொடுத்தது, ஆங்கில அரசு. 26 ஆண்டுகள் ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்தார். போரின் இறுதியில் மன்னரும் அவரது குடும்பத்தினரும் தலைமறைவானார்கள்.  இறுதியில், கண்டியைக் கைப்பற்றி, மன்னனையும், ஏழு பட்டத்தரசிகளையும் கைது செய்து,முதலில் கொழும்புவில் அடைத்து வைத்தனர். பினன்ர், கப்பல் மூலம், தமிழகம் கொண்டு வந்து, 1816 இல், வேலூர் கோட்டையில், கண்டி அரண்மனையில் சிறை வைத்தனர். சிறை வைத்தனர். கடந்த, 1832, சன., 30 அன்று விக்ரம இராசசிங்கர் இறந்தார். அவரது உடல், வேலூர், காட்டுப்பாடிச் சாலை, பாலாற்றங்கரையில் vicrama rasa singan manimandapam03புதைக்கப்பட்டு, கல்லறை கட்டப்பட்டது; அதன் அருகில், 1843இல் இறந்த, அவரது மகன் இரங்கராசா கல்லறையும் அமைக்கப்பட்டது. இலங்கையில் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்த தமிழ் மன்னரின் வீரத்தைப் போற்றும் வகையில் 1990 இல் முத்து மண்டபம் கட்டபட்டது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த, விக்ரமராச சிங்கரின் மகன் இரங்க இராசாவுக்குப் பிறந்தவர் தான், பிருதிவிராசு.  மன்னரின் வழிமுறையினர் ஒவ்வொருவராக இறந்த பின், பிருதிவிராசை, யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்தியா  விடுதலை அடைந்த பின், கண்டி அரண்மனையை விட்டு, வெளியேறிய

விக்கிரமசிங்கஇராசா சிறை வைக்கப்பட்ட இடம் (இப்பொழுத பதிவாளர் அலுவலகம்)

விக்கிரமஇராசசிங்கர் சிறை வைக்கப்பட்ட இடம் (இப்பொழுத பதிவாளர் அலுவலகம்)

vicrama rasa singan04

விக்கிரமசிங்கஇராசா

பிரதிவிராசு, வேலூர், சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்தார். கூலி வேலைக்குச் சென்று, இளங்கலைப் பட்டம் படித்துள்ளார்.

திரையரங்குகளில் மேலாளராகப் பணியாற்றிய, பிருதிவிராசுக்கு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. அப்போது, ஆட்சியில் இருந்த, தி.மு.க., அரசிடம், “தான், இலங்கையை ஆண்ட, கடைசித் தமிழ் மன்னர் விக்ரமஇராசசிங்கன் மரபினர்’ என்றும், ஏதாவது, உதவி செய்யும்படிக் கேட்டும், நூற்றுக்கும் மேற்பட்ட  விண்ணப்பங்களைப்  பிருதிவிராசு அனுப்பியுள்ளார். எந்த நடவடிக்கையும் இல்லாததால், வறுமையிலேயே  வாடினார்” எனப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.  நேர்ச்சியில்(விபத்தில்) காலில் அடிபட்டதால், வீட்டுக்குள்ளேயே, பிருதிவிராசு முடங்கினார். 74  அகவையான பிருதிவிராசு,  வெள்ளி காலை, 7:40 மணிக்கு, மாரடைப்பால் இறந்தார்.

இவருக்கு புட்பா என்ற மனைவி, விக்கிரமன், விசயகுமார் என்ற மக்கள் உள்ளனர். ஒரு மகன்,  மின்பணியாளராகவும் மற்றொருவர்  கிறித்துவ அறப்பணி  மருத்துவமனையில்,  ஏவலராகவும் பணியாற்றி வருகின்றனர்.

மன்னர்க் குறித்த விரிவான விவரம் தமிழ்வம்பன்(http://tamilvamban.blogspot.in/2012/11/01.html) வலைத்தளத்தில் உள்ளது.

மன்னர் குடும்பத்தினர் பேணப்படாமல் புறக்கணிக்கப்படுவதுபோல், அவர் பெயரில் எழுப்பப்பட்ட மணிமண்டபமும் சுற்றுலாத் தலமாகப் பேணப்படாமல் சீர் கெட்டு வருகின்றது. அரசு உடனே கருத்து செலுத்த வேண்டும்.

vellore kottai01

வேலூர்க்கோட்டை

    விக்கிரமஇராச சிங்கர் முத்து மண்டபம்

விக்கிரமஇராச சிங்கர் முத்து மண்டபம்