indian rupee03

பின்பக்கத்தில் ஆண்டு இல்லாத உரூபாய்தாள்களை மாற்றிக்கொள்ள  சேம(ரிசர்வு) வங்கி அறிவுறுத்தல்

  இது குறித்து,  இந்தியச்  சேம வங்கி, அதன் வலைதளத்தில், “கடந்த, 2005 ஆம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட, அனைத்துப் பணத்தாள்களும் திரும்பப் பெறப்படும்,”  என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  2005  ஆம் ஆண்டிற்கு முன், வெளியிடப்பட்ட  பணத்தாள்களில் ஆண்டு அச்சிடப்பட்டிருக்காது எனவும்indian rupee02 இவற்றை அனைத்து வங்கிகளும், வரும் ஏப்பிரல் முதல்நாள் முதல் திரும்பப் பெறும் எனவும் வரும் சூலை முதல்நாள் முதல், வங்கிக் கணக்கு இல்லாதோர், 10க்கு மேற்பட்ட எண்ணிக்கையில், 500 உரூபாய், 1,000 உரூபாய்த் தாள்களை மாற்ற விரும்பினால், அடையாளச் சான்றையும் வசிப்பிடச் சான்றையும், வங்கிக்கு அளிக்க வேண்டும் என்றும் சேம வங்கி அறிவித்துள்ளது.

  2005 ஆம் ஆண்டிற்கு முன் வெளியிடப்பட்ட  பணத்தாள்களும், வழக்கம் போல் செல்லுபடியாகும் எனவும் இது குறித்துப் பொதுமக்கள் அச்சம் அடையத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ள சேம வங்கி பணத்தாளைத் திரும்பப் பெறும் திட்டத்திற்கு, முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.