மதுரை - madurai

சங்க இலக்கியத்தில் இடம் பெறும் மதுரை, கூடல் சொற்கள்

கூடல் (மதுரை)
  1. பொய்யா விழாவின் கூடற் பறந்தலை

அகநானூறு: 16:14

  1. கொடிநுடங்கு மறுகிற் கூடற்குடா அது

அகநானூறு:149: 14

  1. யாம்வேண்டும் வையைப்புனல் எதிர்கொள்கூடல்

பரிபாடல் : 10:40

4.மதிமலை மாலிருள் கால்சீப்பக் கூடல்

பரிபாடல் : 10: 112

  1. வருந்தாது வரும்புனல் விருந்தயர் கூடல்

பரிபாடல் : 10:12

  1. கூடலொடு பரங்குன்றினிடை

பரிபாடல் : 17: 23

  1. கொய்யுளை மான்தேர்க் கொடித்தேரான் கூடற்கும்

பரிபாடல் : 17:45

  1. புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடல்

பரிபாடல் : 19:8

  1. நெடுநீர் மலிபுனல் நீள்மாடக் கூடல்

பரிபாடல் : 20: 106

  1. காமரு வையை கடுகின்றே கூடல்

பரிபாடல் திரட்டு 2: 4

  1. பணிவில் உயர்சிறப்பிஞ் பஞ்சவன் கூடல்

பரிபாடல் திரட்டு 2:46

  1. உருகெழு கூடல் அவரொடு வையை

பரிபாடல் திரட்டு 2:91

  1. நான்மாடக் கூடல்நகர்

பரிபாடல் திரட்டு 6

  1. சேய்மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும்

வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்

பரிபாடல் திரட்டு 11

 

  1. தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே

புறநானூறு : 58:13

  1. மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்

மதுரைக் காஞ்சி : 429

  1. மாடமலி மறுகிற் கூடல் குடவயின்

திருமுருகாற்றுப்படை : 71

 

மதுரை
  1. இடைநெறித் தாக்குற்றது ஏய்ப்ப அடன் மதுரை ஆடற்கு

பரிபாடல் : 11: 48: 49

  1. குன்றுதல் உண்டோ மதுரை கொடித்தேரான்

குன்றம் உண்டாகும் அளவு

பரிபாடல் : திரட்டு 8

  1. பொய்யாதல் உண்டோ மதுரை புனைதேரான்

வையை உண்டாகும் அளவு

பரிபாடல் : திரட்டு 9

  1. கோத்தை உண் டாமோமதுரை, கொடித்தேரான்

வார்த்தை உண்டாகும் அளவு

பரிபாடல் திரட்டு 10

  1. ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென

மாட மதுரையும் தருகுவன்

புறநானூறு : 32: 45

  1. தமிழ்நிலை பெற்ற தாங்கரும் மரபின்

மகிழ்நனை மறுகின் மதுரையும் வறிதே

சிறுபாணாற்றுப்படை : 66-67

 

-தமிழ்ச்சிமிழ்