தமிழுடன் வாழப் பொங்கல் நாளில் வாழ்த்துகிறோம்!
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தமிழர் திருநாள் வாழ்த்து திருவள்ளுவர் புத்தாண்டு வாழ்த்து உழவர் திருநாள் வாழ்த்து வணக்கத்துடன் அகரமுதல தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம்
மாவீரர்களுக்கு வீர வணக்கம்!
மாவீரர்களுக்கு வீர வணக்கம்! தாயகக் கனவிற்காகத் தம்முயிர் நீத்தவர்களைத் தாய் மண்போற்றுபவர்கள் மறக்கக் கூடாது. மாவீரர்கள் மடிந்தாலும் அவர்களின் கனவுகளுக்கு உயிர்ப்பு கொடுக்க வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து உயர் கடமையாற்றத் தவறக்கூடாது. நேற்றைக்கு அழிக்கப்பட்ட கனவுகளை மறக்காமல் நாளை நனவாக்க இன்றைக்கு உழைக்காமல் இருக்கக் கூடாது. மாவீரர் நாளில் உலகெங்கும் மொழி இன நாட்டு விடுதலைக்காகப் போராடியவர்களுக்கும் தமிழீழ மாவீரர்களுக்கும் வீர வணக்கம். அகரமுதல – மின்னிதழ்
முனைவர் பூமா பொன்னவைக்கோ மறைந்தார்
திருவாட்டி முனைவர் பூமா பொன்னவைக்கோ விடை பெற்றார் கணவர் பேராசிரியர் முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களுருக்கேற்ற தமிழார்வம் மிக்க மனை மாண்பினராகத் திகழ்ந்த, அனைவரிடமும் கனிவாகவும் எளிமையாகவும் பழகும் முனைவர் பூமா பொன்னவைக்கோ அவர்கள் ஆனி 17, 2053 வெள்ளி இரவு 11.45 மணியளவில் பிரியா விடை பெற்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். அன்னாரின் நினைவேந்தல் படையல் ஆனி 25, 2053 / 09.07.2022 சனி இரவு 7.00 காரியம் மறுநாள் ஞாயிறு காலை 9.00 மணி நிகழ்விடம்: கோ இல்லம், எண்…
பொங்கல் வாழ்த்தும் பொங்கல் வேண்டுகோளும்
நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு!, இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
நாலடி இன்பம் 8 – இளமை என்னும் பலியாடு! வெறியயர் வெங் களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங் கண்ணி முன்னர்த் தயங்க, மறிகுளகு உண்டன்ன மன்னா மகிழ்ச்சி யறிவுடை யாளர்க ணில் பொருள்: பலிபீடத்தின் அருகில் உள்ள ஆடு தன்னை வெட்டிக் கொல்லப் போகிறார்கள் என உணராமல் எதிரில் உள்ள பூமாலையில் கட்டப்பட்டுள்ள இலைதழைகளை உண்கிறது. இதைப்போன்று நிலையற்ற இளமை இன்பத்தில் மகிழ்தல் நல்லறிவுடையாளர்களிடம் இல்லை. சொல் விளக்கம்: வெறி=வெறியாடுதலை; அயர்=செய்கின்ற; வெம்=கொடிய; களத்து=பலிக்களத்தில்; வேல்மகன்=பூசாரி; பாணி=கையில், முறி=தளிர்; ஆர்= நிறைந்த; நறும்=மணக்கும்;…
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது
தமிழ்நலப்பதிவர்களுக்கு இலக்குவனார் விருது இணையம் வழியாகத் தமிழ்ப்பணி ஆற்றுநர்க்கு ‘அகரமுதல’ சார்பில் இலக்குவனார் இலக்கிய இணையமும் தமிழ்க்காப்புக்கழகமும் இணைந்து இலக்குவனார் விருது வழங்க உள்ளன. மரபுத்தமிழில் பாடல்கள் எழுத ஊக்குவித்தும் கற்பித்தும் எழுதியும் சிலர் முகநூல் குழுக்கள் அல்லது பிற தளங்கள் வழித் தொண்டாற்றி வருகிறார்கள். பிழையின்றி எழுதுவதற்கு வழிகாட்டி நல்ல தமிழை வளர்க்கச் சிலர் உறுதுணையாக உள்ளனர். மிகச்சிலர் பிழையின்றியும் அயற்சொல், அயலெழுத்து கலக்காமலும் நல்ல தமிழில் எழுதி வருகின்றனர். சிலர் தமிழ் வளர்ச்சிக்காக வலைப்பூ அல்லது இணையத்தளங்கள் நடத்தி வருகின்றனர். சிலர்,…
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல்
உலகத்தமிழிணைய மாநாடு 2017, மலேசியா மாநாடு குறித்த இணையவழி உரையாடல் நாள் : ஆடி 21, 2048 ஞாயிறு ஆக.06, 2017 மாலை 6.00 – 7.30 இடம் : வெள்ளை மாளிகை, மணவை முசுதபா நினைவகம் ஏஈ 103. 6 ஆவது தெரு, பத்தாவது முதன்மைச்சாலை, அண்ணாநகர் மேற்கு, சென்னை 600 040 நேரலை/ உரையாடலில் பங்கேற்க இணைய முகவரி : https://www.fb.com/DrSemmal பதிவான காணொளிகளைக் காண : https://www.youtube.com/user/naalayatamil இணைய உரையாடலில் பங்கேற்க அழைக்கிறோம்! http://www.wtic.my/
அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 21
(திருக்குறள் மாநாடு, படத்தொகுப்பு 20 : தொடர்ச்சி) அனைத்துலகத் திருக்குறள் மாநாடு 2017, குமரி : படத்தொகுப்பு 21 [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
புறநானூற்றில் நிதி மேலாண்மை – அ.அறிவுநம்பி
(புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர் அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள் நல்ல தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில் வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது – ஆசிரியர் ) [நினைவுக்குறிப்பு: ‘சித்தர் இலக்கியம்’ குறித்தப் பன்னாட்டுக்…
‘அகரமுதல’ இதழின் பொங்கல் வாழ்த்துகள்!-இலக்குவனார் திருவள்ளுவன்
‘அகரமுதல’ இதழின் படைப்பாளர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் படிப்பாளர்களுக்கும் பகிர்வாளர்களுக்கும் கருத்தாளர்களுக்கும் பரப்பாளர்களுக்கும் அல்லன தொலையவும் நல்லன பெருகவும் இன்பமும் மகிழ்ச்சியும் பொங்கிடவும் அன்பு வாழ்த்துகள்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் ஆசிரியர் ‘அகரமுதல’ < www.akaramuthala >
புதிய அரசிற்கு வாழ்த்துகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
புதிய அரசிற்கு வாழ்த்துகள்! மாண்புமிகு பன்னீர்செல்வத்தை முதல்வராகக்கொண்டு கார்த்திகை 21, 2047 / திசம்பர் 06, 2016 அன்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ளதற்கு ‘அகரமுதல’ இதழ் வாழ்த்துகிறது. இதற்கு முன்னர் இரு முறை [புரட்டாசி 05, 2032 – மாசி 17, 2033 (செட்டம்பர் 21, 2001 / மார்ச்சு 1, 2002); புரட்டாசி 11, 2045 – வைகாசி 08, 2046 (செட்டம்பர் 2 , 2014 – மே 22, 2015)] முதல்வராகப் பதவிப்பொறுப்பேற்றார். எனினும் நடைமுறையில் இரண்டாமவராகத்தான்…
பிரபாகரன், பன்னூறு ஆண்டுகள் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
கார்த்திகை 11, தி.பி. 1985 / நவம்பர் 26, கி.பி. 1954 அன்று தமிழாய்ப்பிறந்த தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்த நாள் பெருமங்கலம்! தமிழ் என்றால் இனிமை. தமிழ் என்றால் அழகு. தமிழ் என்றால் வீரம். தமிழ் என்றால் அன்பு. தமிழ்போல் இனிமையும் அழகும் வீரமும் அன்பும் கொண்டவரே தலைவர் பிரபாகரன். பிரபாகரன் பிறந்ததால்தான் உலகம் தமிழரின் வீரத்தை உணர்ந்தது! தமிழரின் செம்மையை அறிந்தது! தமிழ்ஈழம் இன்றைக்கு உரிமை இழந்து நிற்கலாம். ஆனால், நாளை மீண்டும் எழும்! மலரும்! தனியரசாய்த்…