முதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

முதலில் செவாலியர் விருது பெற்ற தமிழ் நாட்டவர் யார்?   கடலை முதலில் பார்க்கும் குழந்தை என் பொம்மையைப்போலவே கடல் நீல நிறமாக உள்ளது எனக் கூறுவதுபோல்தான் நாம்அனைவரும் அவரவர் நிலையிலேயே அனைத்தையும் பார்க்கிறோம். எனவேதான்  ஒரு நிகழ்வோ அருவினையோ நடக்கும் பொழுது முந்தைய வரலாற்றை அறியும் ஆர்வமற்றவர்களாக, ஏதும் முன் நிகழ்வு உள்ளதா எனப் பார்க்கும் தேடுதல் உணர்வு இல்லாதவராக நடந்து கொள்கிறோம். அதுபோன்ற விளைவுதான் சான்றோன்(செவாலியர்) பாராட்டிதழ் பற்றியது. செவாலியர்  பாராட்டிதழ் வழங்குவது என்பது நெப்போலியனால்(Napoléon Bonaparte) 1802ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது….

அறிவிப்பு: 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.

  அறிவிப்பு : 3 திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப் பெறும்.   அன்புடையீர் வணக்கம். வேறு சில பணிகளால், இனி வரும் மூன்று திங்கள், அகரமுதல இதழில் குறைவான பதிவுகளே மேற்கொள்ளப்பெறும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆசிரியர், அகரமுதல

எங்குமெழுகவே! – தமிழ்மகிழ்நன்

  எங்குமெழுகவே!   அகர முதலுடை அன்னைத் தமிழை இகழும் வடவரின் இந்தியை வீழ்த்த இகலெதிர் கண்ட இலக்குவர் ஈன்ற புகழ்மிகு வள்ளுவ! பூட்கை வினைஞ! தகவுடைச் செந்தமிழ்த் தாயினங் காக்க முகிழ்த்த முரசே! மொழிப்போர்க் களிறே! முகிலைக் கிழித்தொளி வீசும் நிலவாய் அகர முதல யிதழெங்கு மெழுகவே!   – திருக்குறட் பாவலன் தமிழ்மகிழ்நன்

திகட்டாத் தமிழிதழ் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அகர முதல வெறும் அகட விகடம் அல்ல. அகலத் தமிழின் அகழ்வாராய்ச்சித் திகழ் ஒளி வீசும் திகட்டாத் தமிழிதழ். பனை ஏடுகளின் மன ஏடுகள் மடல் அவிழ்க்கும் மங்கா விளக்கின் மாணிக்கச்செவ்விதழ். வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

வாழி வாழி நீவிர் – (உ)ருத்ரா இ.பரமசிவன்

அன்புள்ள திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களே! துரும்பு அசையும் தூசு அசையும் அதையும் விட‌ துல்லியமாய் அசையும் தமிழின் எழுத்தும் சொல்லும் உங்கள் இதயத்தில் தான் முதலில் அசைகிறது. உங்கள் அருந்தமிழ்ப்பணி தொடர‌ வாழி வாழி நீவிர் நீடுழி நீடூழி வாழ்வீர். அன்புடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

“அகர முதல” கண்டு மலைத்தேன்.

“அகர முதல” விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன‌ மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர‌ நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன‌ பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துக்களுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்

தமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….

  அண்மையில் வெளிவந்த 12 ஆம் வகுப்புத் தேர்வில் முதல்நிலைகளில் மதிப்பெண் எடுத்திருந்தவர்கள் எடுத்துள்ள மொழிப்பாடம் சமற்கிருதம். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவ்வாறுதான் உள்ளது. ஆனால், இவர்கள் பெற்ற சமற்கிருதக் கல்வி இதே வகுப்பில் உள்ள தமிழ்ப் பாடக் கல்விக்கு இணையானது அல்ல. தொடக்க நிலைபோன்ற பாடத்திட்டமும் அதற்கேற்ற எளிய வினாக்களும் கொண்டதே சமசுகிருதப்பாடம். இரு வேறுபட்ட நிலையில் உள்ள மொழிப்பாடங்களின் மதிப்பெண்களை இணையாகப் பார்ப்பதே தவறாகும். சமற்கிருத மொழியைச் செத்த  மொழி என்கிறோம். ஆனால், மத்திய அரசின் முயற்சியால் உலகெங்கும் அம்மொழி  கற்பிக்கப்பட்டு…

அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்!

  தமிழர்திருநாளாம் பொங்கல் நன்னாளில் அனைவருக்கும் அகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்! இனப்படுகொலைகளு்க்கும் நிலப்பறிப்பிற்கும் பிற துயரங்களுக்கும் ஆளாகி வரும் தமிழ் ஈழ மக்கள், 01.01.1600  இல் பெற்றிருந்த நிலப்பரப்பைப் பெற்றுத் தனியரசாய்த்திகழும் நாளே நமக்கு மகிழ்வு தரும் நாள் என்பதில் ஐயமில்லை. எனினும் துயரத்தை வென்றெடுக்க, ஊக்க உணர்ச்சி பெற, இன எழுச்சி பெற, இடையிடையே வரும் பொங்கற் புது நாள் போன்றன உந்துதலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  எனவே உலகத் தமிழர்கள் உவக்கும் வண்ணம் தமிழ் ஈழ விடுதலை விரைவில் அமைய…