ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே !

ஆரப்பா, மொகஞ்சதாரோவில் கிடைப்பன தமிழர் அடையாளங்களே!   பழமையான நாகரிகச் சின்னங்கள் கிடைத்த இடங்களில் சிந்துவெளிக்கரையில் அமைந்துள்ள “ஆரப்பா’ “மொகஞ்சதாரோ’ ஆகியன குறிப்பிடத்தக்கன. இங்குக் கிடைத்த பானை ஓடுகள், முத்திரைகள் ஆகியவற்றில் நட்சத்திரக் குறியீடுகளும், கோள்களின் குறியீடுகளும் காணப்படுகின்றன.   தமிழகத்தின் மிகச் சிறந்த துறைமுகமாகப் பண்டைய காலத்தில் திகழ்ந்த கொற்கையை இப்போது ஆராய்ந்த போது இங்குக் கிடைத்த பல பானை ஓடுகளில் நட்சத்திரக் குறியீடுகளைப் போலவே கொற்கையில் கிடைத்த குறியீடுகளிலும் காணப்படுகுன்றன. கார்த்திகை நட்சத்திரத்தைக் குறிக்க ஆறுமீன்கள் குறியீடாகக் காணப்படுகின்றன. செவ்வாய்க் கோளைக்…

காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் – வைகை அனிசு

காலமாற்றத்தால் காணாமல் போன தமிழர்களின் அடையாளங்கள் தமிழகத்தின் தனித்த அடையாளங்களாக உலகம் முழுவதும் அறியப்படுபவை கலையும்  இறைமையும்.   குறிப்பாகக் கோயில் கட்டடக்கலை இன்று வரை உலகினை ஈர்க்கும்  முதன்மைக் கூறாக உள்ளது. இயற்கைச் சீற்றங்களாலும்,  அயலவர்களின் படையெடுப்பாலும் அழிந்து போனவை தவிர்த்து, காலத்தைத் தின்று செரித்து இன்றும் நம்முன் நின்று கொண்டிருக்கும் வரலாற்றுக் கால கட்டடங்கள் நம் பெருமையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.   இவ்வாறு கலைப் பண்பு நிறைந்த கோயில்களில் இறைவனுக்கு ஊழியம் செய்ய ஆண்களும், பெண்களும் இருந்துள்ளனர். அவர்கள் தேவ அடியார்…