தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016) பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல் நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும் என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…
திருவரங்கம்: அ.தி.மு.க.விற்கு ஆதரவு – ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு
திருவரங்கம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு ஆதரவு ஓய்வு ஆசிரியர் சங்கங்கள் முடிவு திருச்சியில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கு ஓய்வுஆசிரியர் சங்கங்கள் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். பள்ளி கல்வித்துறையில் மடிகணிணி முதற்கொண்ட 14 வகை சலுகைகளை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கிய அதிமுக அரசிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டது. திருச்சியில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிப் பணி ஓய்வு இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஏ.சி.சிவபாலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத்;தலைவர் திருமலைச்சாமி,…
திருவரங்கம் தொகுதியில் தேனிக்கழகத் தொண்டர்கள்
திருவரங்கம் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வரவேற்ற திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், பண்ணைக்காடு பேரூராட்சித் தலைவர் சண்முகசுந்தரம், பழனி அன்வர்தீன், ஆத்தூர் ஒன்றியத் துணைப் பெருந்தலைவர் இமாக்குலின் சார்மிலி முதலானோர் உள்ளனர். திருவரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து மின்-ஆயத்தீர்வை அமைச்சர் நத்தம் விசுவநாதன் பரப்புரை மேற்கொள்கிறார். உடன், திண்டுக்கல் தொகுதிச் செயலர் கண்ணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் கே.எசு.என்.வேணுகோபால், ஒன்றியச் செயலர் ஆர்.பி.பி.சண்முகசுந்தரம், கொடைக்கானல் நகர்மன்றத்தலைவர் சிரீதர், ஒன்றியப் பெருந்தலைவர்…
உண்ணாநோன்பைக் கொச்சைப்படுத்தாதீர்!
உண்ணாநோன்பு என்பது ஒரு தவம். பழந்தமிழர்கள் தங்களுக்கு இழுக்கு ஏற்பட்டபொழுது மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969) என்பதற்கு எடுத்துக்காட்டாக, வடக்கிருந்து உணவுமறுத்து உயிர்விட்டுள்ளனர். உண்ணாநோன்பிருந்து உயிர்துறக்கும் சமணர் செயல், ’சல்லேகனை’ எனப்படும். இடையூறுஒழிவில்நோய் மூப்புஇவை வந்தால் கடைதுறத்தல் சல்லே கனை. என்கிறது ‘அருங்கலச் செப்பு’ என்னும் சமணநூல். பொறுத்துக் கொள்ள இயலாமல் பிறரால் ஏற்படும் தொல்லை, தீராமல் தொடர்ந்து துன்பம் தருகின்ற நோய், தாங்க இயலா முதுமைத் தொல்லை, ஆகியன வரும்…
பாசகவின் நாடகத்திற்கு எடுத்துக்காட்டு, கச்சத்தீவு நிலைப்பாடு
– தில்லிச் செய்தியாளர், தினமலர் செப்.3,2013 கச்சத்தீவு : அனைத்துக் கட்சிக் கூட்டம்: பாரதிய சனதா: “கச்சத்தீவு, இலங்கைக்குச் சொந்தமானது எனக், கூறுவதை, ஏற்க முடியாது. இதுபற்றி விவாதிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என, பா.ச., கோரியுள்ளது. “இராமேசுவரம் அருகேயுள்ள கச்சத்தீவு, இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டது. அதை, திரும்பப் பெறும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக்கோரி, முதல்வர் செயலலிதா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிந்துள்ளார். கேள்விக்கே இடமில்லை: இந்த மனு, அண்மையில் உசாவலுக்கு…
திமுக, அதிமுக இரண்டுமே ஊழல் கட்சிகள்: விசயகாந்து பேச்சு
“திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஊழல் செய்த கட்சிகள்” என தேமுதிக தலைவர் விசயகாந்து தெரிவித்தார். தேசிய சனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் பேராசிரியர் சே.கே.இரவீந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து தேமுதிக தலைவர் விசயகாந்து யானைக்கவுனியில் வாக்கு திரட்டினார். அப்போது, விசயகாந்து பேசிய தாவது: “தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. இந்நிலையில், முதல்வர் செயலலிதா குசராத்தை ஒப்பிட்டுப் பேசுகிறார். ஏற்கெனவே, மதுரவாயல் மேம்பாலம் திட்டம் கிடப்பில் கிடக்கிறது. மதுரவாயல் பாலம் திட்டத்துக்கு, ஏற்கெனவே…
காங்கிரசு, பாசக அல்லாத ஆட்சியே இலட்சியம்: செயலலிதா பேச்சு
ஆரணி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் செயலலிதா பேசியதாவது: பாச கவின் “ஆ” அணிதான் அதிமுக என்றும், பாசகவை எதிர்த்து ஏன் பேசவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. . எங்களைப் பொருத்தவரை நாங்கள் யாருக்கும் “ஆ” அணி இல்லை. எங்கள் அணிதான் முதன்மையான அணி. காங்கிரசு, பாசக அல்லாத மத்திய ஆட்சிதான் அமைய வேண்டும் என்பதே அதிமுகவின் இலட்சியம். இதை 2012-இல் நடந்த அதிமுக பொதுக் குழுவிலேயே நான் அறிவித்தேன். இந்த இலட்சியம் நிறைவேற 40 மக்களவைத்…