அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்   விளக்க உரை: பேராசிரியர் வெ.அரங்கராசன்                 1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது.                  அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு  இன்றியமையாமையாதது  என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர்.       அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும்  உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம்.  உலகம் சார்ந்தது: அகச்சான்று:                 சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்;…

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்    சமுதாயம் சார்ந்தவற்றுள் மருத்துவம் சார்ந்த ஒர் உண்மை நிகழ்வு:  தம்முயிரைப் பற்றிச் சிந்திக்காமல், பல்லுயிர்களைக் காத்த நல்லறத்தர்:  குடியேற்றம் [குடியாத்தம்] மண்ணுக்குப் பெருமையைக் குடியேற்றிய நல்லறத்தர் செவிலியர் செயக்குமார்.  பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர் செயக் குமாரை நேரில் அழைத்து,  மாண்பமை முதல்வர் முத்து வேல் கருணாநிதி இசுதாலின் அவர்கள் பாராட்டிப் பெருமைப்படுத்தி, அகம் மகிழ்ந்த அரிய உண்மை நிகழ்வு.   வேலூர் மாவட்டம் குடியேற்றம் நெல்லூர்ப்பேட்டைப் பாவோடும்தோப்பு, நீலிக் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் செயக் குமார்…

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 2/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 2/4: பேராசிரியர் வெ.அரங்கராசன்    ஒப்பு நோக்குக:   மன்னுயிரைக் காத்திடத் தம்முயிரை ஈவதற்[கு] என்றும் இருப்பர் சிலர்.                  –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்      2.குடும்பம் சார்ந்தது:                 தாம் அறம் சார்ந்த செயல்களைச் செய்யும்போது துன்பம் வரினும், தம் குடும்பதிற்கு இன்பம் தரும் அச்செயல்களைத்  துணிவோடும் மனஉறுதியோடும் இறுதிவரை முயன்று வெற்றியுடன் செய்து முடித்தல் வேண்டும். அகச் சான்றாக ஒரு குறள்மட்டும்.   அகச்சான்று:        இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்       …

அரங்கனின் குறள் ஒளி : 7 : துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4

துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 1/4: பேராசிரியர் வெ.அரங்கராசன்                துன்பம் துரத்தட்டும் துணிந்து நில்;                 இன்பம் கிட்டும்வரை தொடர்ந்து செல்! அகச்சான்று:   துன்பம் உறவரினும் செய்க, துணி[வு]ஆற்றி,       இன்பம் பயக்கும் வினை.                                                   [குறள்.669]   பொருள்கோள் விரிவாக்கம்:                 துன்பம் உற வரினும், துணிவினை ஆற்றி,                 இன்பத்தைப் பயக்கும் வினையைச் செய்க.   பொருள் உரை விரிவாக்கம்:                 ஆராய்ந்து மேற்கொண்ட அறம் சார்ந்த ஒரு செயலினைச் செய்ய முயலும்போது…

அரங்கனின் குறள் ஒளி : 6: சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5

சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 2/5 பேராசிரியர் வெ.அரங்கராசன் புறச்சான்று – 2 ஒப்பு நோக்குப் பகுதி – இலக்கியச் சான்று: யாயும் ஞாயும் யார்ஆ கியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்? யானும் நீயும் எவ்வழி அறிதும்? செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.                                              -செம்புலப் பெயல்நீரார், குறுந்தொகை, 40. பொருள் உரை: என் தாயும் நின் தாயும் ஒருவருக்கு ஒருவர் எத்தகைய உறவின் முறையினராவர்? எத்தகைய உறவின் முறையினரும் அல்லர். என் தந்தையும் நின் தந்தையும் எந்த…