(அதிகாரம்   003. நீத்தார் பெருமை தொடர்ச்சி)          001 அறத்துப் பால்        01 பாயிர இயல் அதிகாரம் 004. அறன் வலியுறுத்தல்                     ‘சிந்தனையும், சொல்லும், செயலும்          தூயதாய் இருக்க’ என வற்புறுத்தல்   சிறப்(பு)ஈனும்; செல்வமும் ஈனும்; அறத்தின்ஊங்(கு)      ஆக்கம் எவனோ உயிர்க்கு…..?         சிறப்பும், செல்வமும் தருஅறத்தைவிட,         வளமும் நலமும் வே[று]இல்லை.   அறத்தின்ஊங்(கு), ஆக்கமும் இல்லை; அதனை,       மறத்தலின் ஊங்(கு)இல்லை கேடு.        அறத்தைவிட, நல்லதும், அதனை         மறத்தலைவிடக், கெட்டதும்,…