அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! – கருமலைத்தமிழாழன்
அறிவியல் பூக்கள் நிறைந்த தொல்காப்பியம்போல் எம்மொழியிலும் நூலில்லை! [தொல்காப்பியர் சிலை திறப்பு விழா கவியரங்கம் இடம் – காப்பிக்காடு (நாகர்கோவில்) நாள்: 26.06.2047 10-07 -2016 தலைமை – கவிஞர் குமரிச்செழியன்] தமிழ்த்தாய் வணக்கம் கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத தமிழன்னையை …
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் (2) – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல 127, பங்குனி 21, 2047 / ஏப்பிரல் 03, 2015 தொடர்ச்சி சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 2 நோக்கம் இன்றைய அறிவியல் சொற்கள் யாவும் சங்க இலக்கியங்களில் உள்ளன என நான் உரைக்கவில்லை. பின்வரும் அடிப்படையில் சங்கச் சொற்களைப் பயன்பாடுள்ளனவாக ஆக்க வேண்டும் என்பதே நோக்கம். இன்றைக்குக் கையாளும் அதே பொருள் உள்ள சங்கச் சொற்களை நாம் அவ்வாறே பயன்படுத்த வேண்டும். சான்றாகப் பூக்காத தாவரம் என நாம் சொல்கிறோம். அதே பொருளில் கோளி என்னும் சொல் சங்க இலக்கியங்களில்…
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் – இலக்குவனார் திருவள்ளுவன்
சங்கஇலக்கியக்கலைச்சொற்களின் மீள்பயன்பாடும் மீளாக்கமும் 1 அறிவியல்துறைகளில் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகிறது; எனினும் தக்கத் தமிழ்க்கலைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற முனைப்பின்றி ஒலி பெயர்ப்புச் சொற்களையும் பிற மொழிச் சொற்களையுமே மிகுதியும் பயன்படுத்துகின்றனர். அதே நேரம், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், தனிப்பட்ட அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், இணையத்தளத்தினர், வலைப்பதிவர்கள் எனப் பல்வகையினரும் கலைச்சொற்கள் வெளியீட்டிலும் கலைச்சொல் ஆக்கத்திலும் ஈடுபட்டுவருவதும் வளர்ந்து வருகிறது. இருப்பினும் துறைதோறுமான கலைச்சொற்களஞ்சியங்கள் பெருக வேண்டி உள்ளன. கருத்துச் செறிவு மிக்க, சுருங்கிய வடிவிலான கலைச்சொற்களை ஆயிரக்கணக்கில் உருவாக்க…
இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! – பெரியார்
இயற்கையோடு அறிவியலுக்கு ஒப்ப இயைந்ததே திருக்குறள்! திருக்குறளை மெச்சுகிறார்களே ஒழிய காரியத்தில் அதை மலந்துடைக்கும் துண்டுக் காகிதமாகவே மக்கள் கருதுகிறார்கள். அதோடு அதற்கு நேர்மாறாக விரோதமான கீதையைப் போற்றுகிறார்கள். அறிவால் உய்த்துணர்ந்து ஒப்புக் கொள்ளக் கூடியனவும் இயற்கையோடு விஞ்ஞானத்துக்கு ஒப்ப இயைந்திருக்கக் கூடியனவும் ஆன கருத்துக்களையே கொண்டு இயங்குகிறது வள்ளுவர் குறள். தந்தை பெரியார் ஈ வே. இராமசாமி
நாட்டுப்புற நம்பிக்கைகளும் மொட்டைக்கோபுரமும் – வைகை அனீசு
அறிவியலுக்கு அறைகூவலிடும் நாட்டுப்புற நம்பிக்கைகளும் சிதைக்கப்பட்டு வரும் மொட்டைக்கோபுரமும் நாட்டுப்புற மக்களிடம் எண்ணற்ற நம்பிக்கைள் காணப்படுகின்றன. அனைத்தும் அறிவியல் சார்ந்தது எனக்கூறமுடியாது. இருப்பினும் பல நம்பிக்கைகள் அறிவியலின் வெளிப்பாடாக அமைந்துள்ளது. நாட்டுப்புற மக்கள் தாங்கள் அன்றாடம் வாழ்க்கையில் கண்ட சில கூறுகளை வைத்துக் காலத்தையும் நேரத்தையும் திசைகளையும் கணித்தனர். மழை, வெள்ளம், பனி, மின்னல், பூக்கள் பூப்பது, விலங்குகள் கத்துவது, பறவைகளின் ஒலி, முகில், காற்று, புயல் என வானவியல் முதலான அனைத்தையும் ஏதோ ஓர் அடிப்படையில் கணித்திருந்தார்கள். . அந்தக் கணிப்பு…
அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை – சேலம் செயலட்சுமி
அறிவியலிலும், தமிழர்கள் பின்தங்கியில்லை என்பதைச் சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன. சங்க இலக்கியங்கள் கூறும் பல்வேறு துறைச் செய்திகள் பிறநாட்டு அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. தாவர இயல், விலங்கியல், நிலங்களின் பிரிவுகள், இசை நுணுக்கங்கள், ஆடற் கலைகள், முத்து, வைரம், வைடூரியம் பற்றிய உண்மைகள், சிற்பக்கலை, கட்டடக்கலை, கணிதம், வானநிலை சாத்திரம், கடற்பயணங்கள் ஆகிய எந்தக் கலையிலும் அறிவியல் துறையிலும் தமிழர் பின்தங்கியதாகத் தெரியவில்லை. சங்க நூல்களைத் தெளிவாக ஆராய்ந்தால் இப்படிப் பல உண்மைகள் வெளிவருகின்றன. – இசைப்பேரரசி முனைவர் சேலம் செயலட்சுமி: தமிழிசை…
அறிவியல் வாசலில் தமிழ் – கு. செ. சிவபாலன்
அறிவியல் வாசலில் தமிழ் முக நூலில் முகமறியா ஒருவன் கேட்டான் என்ன உண்டு தமிழில் – சொன்னேன் தமிழ் . . . அணுவைத் துளைத்தலை அன்றே சொன்ன அவ்வை மொழி. உலகம் இயங்க உரக்க முழங்கிய வள்ளுவன் வாய் மொழி. உடற் பிணி குறைய , மனக்குறை மறைய சமூகம் பற்றி , சரித்திரம் பற்றி சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ? வளம் உண்டு. நயம் உண்டு – என்றாலும் அறிவியல் தேடலில் , தேவையில் தேயுமோ தமிழ் மொழி…
குறுந்தொகை கூறும் உயிரியல் செய்திகள் 2/5 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆவணி 08, 2045 / ஆகத்து 24, 2014 இதழின் தொடர்ச்சி) 21. கள்ளி இதன் முள் பிளவு பட்டதாய் இருக்கும். இதன் காய் வெடிக்கும் பொழுது மிகுந்த ஒலி உண்டாகும். ‘கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி’ வெண்பூதியார்: குறுந்தொகை:174:2 (நொடி – ஒலி) கள்ளிமரத்தின் காய்கள் வெயிலில் வெடிக்கும். ‘பொரிகால் கள்ளி விரிகாய் அம்கவட்டு’ மருத்துவன் சீத்தலைச் சாத்தனார்: குறுந்தொகை: 154:5 22. காஞ்சி காஞ்சி மரம் மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் பசிய பூந்தாதுக்கள் உடையனவாய் நறுமணம் கமழும். பயற்றங் கொத்துகள்…
மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதே உண்மையான அறிவியல்
– அறிவியல் ஆவணப்படம் திரையிடலில் பேச்சு – வந்தவாசி. ஆடி 20, 2045 / ஆக.05.வந்தவாசி யுரேகா கல்வி இயக்கமும், இளங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியும் இணைந்து உலகில் முதலில் நிலவில் கால் பதித்த நீல் ஆம்சுட்ராங்கின் 84-ஆவது பிறந்த நாளையொட்டி விழா நடத்தினர். விழாவில் அறிவியல் விழிப்புணர்வு ஆவணப்படம் திரையிடப்பெற்றது. நிகழ்வில், மனித சமூக வளர்ச்சிக்கும், சிந்தனைக்கும் புறம்பான மூட நம்பிக்கைகளிலிருந்து நாம் பெறுகிற விடுதலையே உண்மையான அறிவியலாகும் என்று யுரேகா கல்வி இயக்கத் திட்ட மேலாளர்…
ஆர்க்கிமிடிசு – தி.சி.கருப்பண்ணன், கலை.மு.
(சித்திரை 14, 2045 / 27 ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி) விலக்கம் உற்ற தண்ணீரின் எடை எவ்வளவோ, அவ்வளவு குறைவு பொருளின் எடையிற் காணும். ஏனெனில் தண்ணீருள் அமிழும் பொருளை தண்ணீர் எப்போதும் மேல் நோக்கித் தள்ளுகிறது. இவ்வாறு கீழே அமிழும் பொருளை மேல் நோக்கித் தள்ளும் தண்ணீரின் ஆற்றல், பொருளால் விலக்கம் உற்ற தண்ணீரின் எடைக்கு ஒப்பாகும் எடுத்துக்காட்டாக, ஓர் இரும்புத் துண்டு 4 கிலோ கிராம் எடையுள்ளதாகக் கொள்வோம். இது தண்ணீருள் முழுதும் மூழ்கும்படி தொங்கவிடப்பட்டால் ஏறத்தாழ அரைகிலோகிராம்…