நான் கடலுக்கே போகிறேன்! – மாவீரன் மணிகண்டன்
அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே! நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்! பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்! கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன், உனக்காகக் கீழ் இறங்கினேன்! கொஞ்சமும் நினைவு இல்லையா? வஞ்சனை செய்கிறாயே… என்னை அழைத்து விட்டு…! வறண்ட என் நிலக் காதலி நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்…. சுரண்டி அவள் மேனியெல்லாம் பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்! நனைத்து அணைப்பதாலே உடல் குளிர நலம் கொள்வாள்! அனைத்தும் மறுதலித்து, கடல் சேரவே வழி செய்தாய்! குளம் குட்டை ஏரியென அங்கங்கே தங்கியிருந்தேன்! வளம் கொழித்த அத்தனைக்கும் பங்கம்…
அரசால் வழங்கப்பட்ட நிலம் விற்பனை!
முதலக்கம்பட்டி ஊராட்சியில் அரசால் வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) நிலம் விற்பனை தேவதானப்பட்டி அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த தி.மு.க.ஆட்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட 2 காணி(ஏக்கர்) விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் முறையிடுகின்றனர் முதலக்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கரமூர்த்திபட்டி, முதலக்கம்பட்டி மேடு, சருக்கரை ஆலை ஆகிய பகுதிகளில் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் 2 காணி(ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்படும் நிலத்திற்குப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களான 2 காணி(ஏக்கர்) நிலம், பூமிதான நிலம், பஞ்சமி நிலம் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என விதி…
வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு – வைகை அனிசு
வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் கவர்வு தேவதானப்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைக் கவர்ந்து கட்டடங்கள் கட்டி வருவதைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள மருகால்பட்டியில் சேமக்காடுகள் என்று அழைக்கப்படும் நிலங்கள் வனத்துறைக்குச் சொந்தமானவை. சேமக்காடுகள் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கும், அப்பகுதியில் உள்ள கனிமங்கள், மரங்கள் வெட்டுவதற்கும் வனத்துறை ஏற்கெனவே தடை விதித்துள்ளது. இப்பொழுது மருகால்பட்டிப் பகுதியில் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களைத் தனியர்கள் கவர்ந்து கட்டடங்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு கட்டடங்களை எழுப்பிச் சேமக்காடுகள்…
பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை!
பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை! ஆண்டுதோறும் தணிக்கை செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு. தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் நடைபெறும் கொள்ளைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மன்னன் இல்லாத கோட்டை, தண்ணீர் இல்லாத ஆறு, அதிகாரம் இல்லாத காவலர், மரங்கள் இல்லாத மலை, தெய்வம் இல்லாத கோயில் என அடுக்கிக்கொண்டே போவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல போடாத சாலை, வெட்டாத கிணறு, கட்டப்படாத கழிப்பறைகள் எனக் கணக்கு காட்டி பணத்தைக் கொள்ளையடிப்பது உண்டு. பொதுவாகத் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிப்பகுதிகளில் பலவித முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன….
பொதுப்பணித்துறைக் குளங்கள் ஆக்கிரமிப்பு
தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான குளங்கள் ஆக்கிரமிப்பு தேவதானப்பட்டிப் பகுதியில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமாக உள்ள குளம், ஏரி, கண்மாய், வாய்க்கால் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலத்தில் வருகின்ற நீரைத் தேக்கவிடாமல் தடுத்து வெளியேற்றுகின்றனர். இதனால் கோடைக் காலத்திற்கு முன்பே குளங்கள், ஏரிகள், கண்மாய்கள் ஆகியவை நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள மலைச்சாலையில் மத்துவார்குளம் என்ற கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் கடைகள், பைஞ்சுதை(cement) தொட்டிகள் கட்டும் தொழிற்சாலைகள் முறைகேடாகக் கட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த ஆண்டு பெய்த மழையால் பெருகிய தண்ணீர்…