தமிழ் இளையோர் அமைப்பு – கற்க கசடற

2018 தமிழ் இளையோர் அமைப்பு கற்க கசடற  தொல்காப்பியம்  திருக்குறள் ஆத்திசூடி போட்டிகள் அறிவதற்கு 07427261785  அல்லது  07915379101 எண்ணுக்கு அழையுங்கள்.   சுசிதா / Sujitha  

தமிழனின் தனிக்குணம்! – இடைமருதூர் கி.மஞ்சுளா

தமிழனின் தனிக்குணம்!    சென்னை, தியாகராய நகரிலிருந்து பாரிமுனை செல்லும் அரசுப் பேருந்தில் உட்கார்ந்திருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவன், தன் அருகில் அமர்ந்திருந்த  முதியவரைப் பார்த்து, அவன் மொழியில் “உங்கள் தமிழ்நாடு மிகவும் நல்ல நாடு” என்றான். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று அவனது மொழியிலேயே அந்த முதியவர் வியப்பாக அவனைப் பார்த்துக் கேட்டார். “எங்களுக்கு உங்கள் மொழி தெரியாது. ஆனாலும், சென்னையில் உள்ள கடைகளில் எல்லாம் எங்கள் மொழியை முதன்மைப்படுத்தி, ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகளை வைத்து, தமிழ்நாடு எங்களுக்கு எப்படி உதவுகிறது பார்த்தீர்களா?…

அரசியல் ஆத்திசூடி – இராமசெயம்

அனைத்திலும் அரசியல் அறிந்திடு ஆதிக்க உணர்வை வெறுத்திடு இல்லாதோர்க்காய் உழைத்திடு ஈகைக் குணத்தை வளர்த்திடு உண்மை உழைப்பைப் போற்றிடு ஊழல் சூழல் போக்கிடு எளிமை நெறியைக் கற்றிடு ஏளனம் செய்தல் மறந்திடு ஐக்கிய மாதல் உரைத்திடு ஒற்றுமை எண்ணம் பெருக்கிடு ஓய்தல் நீக்கிச் செயல்படு ஓளடதம் நீயென எண்ணிடு அஃதே அரசியலென மாற்றிடு. – க.இராமசெயம் http://www.rmsudarkodi.blogspot.in/    

பகுத்தறிவு சூடி – அரிஅரவேலன்

யாரால் எங்கே எப்பொழுது என்ன எப்படி யாருக்கு ஏன்என வினவிப் பகுத்து விளைவை அறிந்து வாழ ஊக்கும் வகையில் வகுத்த பாவே பகுத்தறிவு சூடி என்னும்இந் நூலே   01 அறிவியலுணர்வு கொள் 02 ஆருடம் பொய் 03 இழிதொழில் ஏது? 04 ஈட்டுக அறிவு 05 உன்னை அறி 06 ஊர்நலம் பேண் 07 எளிமையே மேல் 08 ஏனெனக் கேள் 09 ஒழுக்கம் உயர்வு 10 ஓம்புக மானுடம் 11 கடவுள் இல்லை 12 காலம் கருது 13 கிலியைக் கொல் 14 கீழ்மை அறு 15 குலம்பல எதற்கு 16 கூடி வாழ் 17 கெடுமதி விடு 18 கேண்மை போற்று 19 கொடுமை எதிர் 20 கோலம்…