பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு – இலக்குவனார் திருவள்ளுவன்

பொங்கல் விடுமுறையில் இரு குறைபாடு போகிக்கு அல்லவா விடுமுறை விட்டிருக்க வேண்டும்? மொழிப்போர் ஈகியர் நாளை வேலைநாள் ஆக்கியிருக்கலாமா? இவ்வாண்டு(தி.ஆ.2056/பொ.ஆ.2025) தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் சனவரி 14 செவ்வாயன்று வருகிறது. தொடர்ந்து புதனன்று திருவள்ளுவர்  திருநாள்/மாட்டுப் பொங்கல்(சன.15), வியாழனன்று உழவர் திருநாள் (சன.16) என முந்நாளும் அரசு விடுமுறையாகும். எனவே வெள்ளியன்று விடுமுறை விட்டால் தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றிலும் குடும்பத்தினருடன் இருக்கும் வகையில் நல் வாய்ப்பாக இருக்கும் என ஆசிரியர்களும் அரசூழியர்களும் கருதினர். இதற்கிணங்க எழுந்த முறையீட்டு அடிப்படையில் அரசு வெள்ளியன்றும்…

தேவதானப்பட்டியில் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்   தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.   திண்டுக்கலில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஆந்திராவைச்சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு போதிய நிதியில்லாததால்…

சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!

ஆந்திரரின் அளப்பரிய கொடுமை! வெங்கையாவிற்குக் கடும் கண்டனம்! சித்தூர் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும்!   கொடுங்கோல் கொலையாளி இராசபக்சேவை அழைத்து அழைத்து ஆந்திரர்களும் அவனின் மறு பதிப்பாக ஆகிவிட்டனர் போலும்! கூலி வேலைக்கு அழைத்து வந்த தமிழர்களைத் திட்டமிட்டுத் துன்புறுத்தி, உடலுறுப்புகளை வெட்டி, எரியூட்டி, குண்டுகளால் துளைத்துக் கொன்ற செய்தி ஊடகங்களிலும் இணையத் தளங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனால், அப்பாவி மக்களைக் கொன்றோமே என்ற உணர்வு கிஞ்சித்தும் இல்லை. எப்படி இரக்க உணர்வு வரும்? திட்டமிட்ட படுகொலை என்னும் பொழுது அதைத்தானே சரி என்பார்கள்….