உ.வே.சா.வின் என் சரித்திரம் 70 : சிலேடையும் யமகமும்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய் – தொடர்ச்சி) என் சரித்திரம்அத்தியாயம்-42 சிலேடையும் யமகமும் பட்டீச்சுரத்தில் இருந்தபோது பிள்ளையவர்கள் இடையிடையேகும்பகோணம் முதலிய இடங்களுக்குப் போய் வருவதுண்டு. அப்பொழுதுநானும் உடன் சென்று வருவேன். பட்டீச்சுரத்திலுள்ள ஆலயத்திற்கு ஒருநாள்சென்று தரிசனம் செய்து வந்தோம். அக்கோயிலில் தேவி சந்நிதானத்தில் சிரீகோவிந்த தீட்சிதரது பிம்பமும் அவர் பத்தினியாரது பிம்பமும் இருக்கின்றன.அவற்றை நாங்கள் கண்டு களித்தோம். தஞ்சையிலிருந்து அரசாண்ட அச்சுதப்பநாயக்கரிடம் அமைச்சராக இருந்து பல அரிய தர்மங்களைச் செய்தவர் சிரீகோவிந்த தீட்சிதர். அவர் பட்டீச்சுரத்து அக்கிரகாரத்தில் வசித்து…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 69 : ஒரு செய்யுள் செய்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர் – தொடர்ச்சி) என் சரித்திரம் – அத்தியாயம் 41 தொடர்ச்சிஒரு செய்யுள் செய் இவ்வளவு சாக்கிரதையாக ஏற்பாடு செய்து கொண்டு விழிக்கும்ஆறுமுகத்தா பிள்ளையிடம் காலையில் நான் போய், “என் புத்தகத்தைக்காணவில்லை” என்று சொல்லுவேனானால் அவருக்குக் கோபம் வருமென்பதைநான் அறிவேன். ஆகையால் அவரிடம் சொல்லலாமென்று என் ஆசிரியர் கூறிய பின்பும், நான் பேசாமல் வாடிய முகத்துடன் அங்கேயே நின்றேன். ‘ஒரு செய்யுள் செய்யட்டும்’ சிறிது நேரத்திற்குப் பின் ஆறுமுகத்தா பிள்ளை துயில் நீங்கி எழுந்துஅவ்வழியே சென்றார்….

உ.வே.சா.வின் என் சரித்திரம் 68 : ஆறுமுக பூபாலர்

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 67 : ஆறுமுகத்தா பிள்ளையின் இயல்பு – தொடர்ச்சி) என் சரித்திரம் :  அத்தியாயம்-41 ‘ஆறுமுக பூபாலர்’ ஆறுமுகத்தா பிள்ளையைப் பார்த்தாலே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். பிறருக்கு ஆக வேண்டியவற்றைக் கவனித்தாலும் என்ன காரணத்தாலோ எல்லோரிடத்தும் அவர் கடுகடுத்த முகத்தோடு பெரும்பாலும் இருப்பார்; நான் மிகவும் சாக்கிரதையாக நடந்து வந்தும் அவருக்கு என்னிடம் அன்பு உண்டாகவில்லை. பிள்ளையவர்களிடத்தில் அவர் மிக்க மரியாதையும் அன்பும் உடையவராக இருந்தார். அக்கவிஞர் பெருமான் என்னிடம் அதிகமான அன்பு காட்டுவதையும் அவர் அறிவார், அப்படி…