கலைமாமணி விருதுகளை இதழாளர்களுக்கும் வழங்குக ! – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைமாமணி விருதுகளை இதழாளர்களுக்கும் வழங்குக ! பல்துறைக் கலைஞர்களுக்கும் கலைமாமணி விருதுகள் தமிழ்நாட்டரசின் சார்பில் கலைபண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இயல் இசை நாடக மன்றம் மூலம் வழங்கப் பெறுகின்றன. பொதுவாக எத்தகைய விருதுகள் வழங்கினாலும் அவை குறித்த எதிருரைகள் வருவது வழக்கமாக உள்ளது. ஆனால், கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் போதெல்லாம் எதிர் அலைகள் மிகுதியாகவே வீசப்படுகின்றன. “ திரைத்துறையினருக்கே கொட்டிக் குவிக்கின்றனர்; கலைஆற்றலின் மிகுதியைக் கருதாமல் ஆடைக் குறைப்பின் மிகுதியைக் கருத்தில் கொண்டு விருதுகள் வழங்குகின்றனர்; குறிப்பிட்ட சாதியினர்மட்டும்தான் தகுதியாளர்களா? அவர்களுக்கே விருதுகள் வழங்குவது ஏன்?;…
இணையத் தமிழ்ச்சுடர் தேமொழி – இலக்குவனார் திருவள்ளுவன்
இணையவழித் தன் தமிழ்ப்படைப்புகள் மூலம் சுவையான அருமையான கருத்துகளைத் தெரிவித்து வருபவர் முனைவர் தேமொழி. திருச்சி மரு.முனைவர் சிவக்கண்ணு, சானகி ஆகியோர் திருமகள். விலங்கியலில் இளம் அறிவியல் பட்டத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் முதுநிலைப்பட்டத்தைப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் ஆய்வியல் பட்டத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பெற்றவர். திருமணமானதும் கணவருடன் 1987 இல் அமெரிக்கா குடி புகுந்தார். இங்கே சியார்சு வாசிங்கடன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (Master of Engineering Management) பெற்றார். நகரகக் கல்வி- பொது மேலாண்மையில் முதுநிலைப்பட்டத்தை (Master of Urban Studies…
பிரபஞ்சன் காலமானார்
எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 4/6 அருங்கேடும் கேடறியாமையும் நல் விளைச்சலுக்கு நாடு கேடுகளின்றி இருக்க வேண்டும் என்பதை (குறள் 732) விளக்கும்பொழுது பிறரிடமிருந்து மாறுபட்டு, ‘‘பெருவெள்ளம், நிலநடுக்கம், கடல்அலைப்பு, எரிமலை முதலிய இயற்கைப் பொருள்களால் உண்டாகும் கேடுகள் அற்றிருக்க வேண்டும்’’[11] என இயற்கைஅறிவியல் அடிப்படையில் விளக்குகிறார். கேடறியாமையை நாட்டின் இலக்கணமாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூறுமிடத்தில் (குறள் 736) அதனை மழை வளம், நீர்வளம் ஆகியவற்றுடன்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6
(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 2/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 3/6 பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே! பெண்மைக்கு எதிராக எங்குக் களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 2/6 உரைநயம் உணர்த்தும் உரை வளம் இலக்குவனார், இருபாலருக்கும் பொதுவாகவும் பெண்மையை உயர்த்தியும் சிறப்பான விளக்கவுரை அளித்துள்ளார். சில சொற்களுக்கு அவர் தரும் விரிவான விளக்கம் அவரின் நுண்மாண்நுழைபுலத்தை நன்கு புலப்படுத்துகின்றது. திருவள்ளுவர் தமிழ்மொழி, தமிழ்இனம் என்றெல்லாம் சாராமல் திருக்குறளைப் படைத்திருந்தாலும் விளக்கம் அளிக்கையில் தமிழ் உணர்வை ஊட்டும் வகையில் இன்றைய தேவைக்கேற்ப குறள் நெறி அறிஞர் இலக்குவனார் படைத்துள்ளார்; ஆனால், உலகப் புலவர் திருவள்ளுவரைப் புரிந்து கொண்டு இணக்கமான உரை தந்துள்ளார். பேராசிரியரின்…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள். தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்தாய்ந்து அகன்ற…
தமிழ் பிரபாகரனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வைகோ வேண்டுகோள்
இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழகச் செய்தியாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தித் தலைமையாளர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாகத் தலைமையாளருக்கு வெள்ளிக்கிழமை தொலைநகலி(ஃபேக்சு) மூலம் அனுப்பிய மடலில் அவர் கூறியிருப்பதாவது: “சுற்றுலா நுழைவு உரிமை பெற்று இலங்கைக்குச் சென்ற, தமிழகச் செய்தியாளர் மகா தமிழ் பிரபாகரன், இலங்கைப் படையினரால் தளையிடப்பட்டுள்ள செய்தியை, உடனடியாகத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன், வடக்கு மாகாண அவை உறுப்பினர்…
தமிழ் பிரபாகரனை உடனே விடுதலை செய்க!
இலங்கைக்குச் சுற்றுலா புகவுச் சீட்டு பெற்று இதழாளர் மகா.தமிழ் பிரபாகரன் சென்றுள்ளார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிரீதரன் அலுவலகத்தில் தங்கியிருந்தார். அவர் வந்த இரண்டு நாளிலும் உடல் நலிவால் வெளியே செல்லாமல் இருந்துள்ளார். பின்னர், சிரீதரன் அவர்களுடனும் வடக்கு மாகாண அவை உறுப்பினர் பசுபதி(பிள்ளை) அவர்களுடனும் அவர்கள் மேற்கொண்ட தொகுதி நலப்பணி தொடர்பான பயணத்தில் உடன் சென்றுள்ளார். இம்மூவரும் வலைப்பாடு என்னும் ஊரில் தூய அந்தோணியார் தேவாலயத்தின் பங்குத் தந்தை அவர்களோடு உரையாடிக் கொண்டு இருந்தபோது, 25.12.2013 பகல் 1.30 மணி அளவில், இலங்கைப்…