எத்தனை எத்தனை அறமற்ற செயல்கள்! – இராமலிங்க வள்ளலார்
எத்தனை எத்தனை அறமற்ற செயல்கள்! (மனுநீதிச்சோழன் தெரிவிப்பதாக வள்ளலார் கூறும் அறமற்ற செயல்கள்) நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ! வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ! தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ! கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ! மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ! குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ! ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ! தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ! மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ! உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ! களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ! பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!…
முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! – இராமலிங்க வள்ளலார்
முதலும் நடுவும் முடிவும் அருட்பெருஞ்சோதியே! சாதியும் மதமுஞ் சமயமுந் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையுந் தணந்தேன் நீதியும் நிலையுஞ் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையுஞ் சுகமும் ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம் அருட்பெருஞ் சோதியென் றறிந்தேன் ஓதிய அனைத்தும் நீயறிந் ததுதான் உரைப்பதென் னடிக்கடி யுனக்கே குலத்திலே சமயக் குழியிலே நரகக் குழியிலே குமைந்துவீண் பொழுது நிலத்திலே போக்கி மயங்கியே மாந்து நிற்கின்றார் நிற்கநா னுவந்து வலத்திலே நினது வசத்திலே நின்றேன் மகிழ்ந்துநீ யென்னுள மெனும்…