சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) – எழில்.இளங்கோவன்
சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை) கவியோகி சுத்தானந்த பாரதியார் ஒருவரை இப்படிப் பாராட்டுகிறார்: “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை. தமிழின் இன்பம் நுகர வேண்டுமானால், சேதுப்பிள்ளையின் செந்தமிழைப் படிக்க வேண்டும்” யார் இந்தச் சேதுப்பிள்ளை? “தமிழறிஞர்களுள் மிகச் சிறந்த நாவீறு படைத்தவராக விளங்கியவர் ‘சொல்லின் செல்வர்’ இரா.பி.சேது(ப்பிள்ளை). சொல்மாரிச் செந்தமிழ்ச் சொற்கள் நடம் புரியும். எதுகையும் மோனையும் பண்ணிசைக்கும். சுவைதரும் கவிதைகள் மேற்கோளாகும். எடுப்பான நடையில் நின்று, நிதானித்து அவரின் சொற்பொழிவு இருக்கும்.” இப்படி அறிமுகம் செய்கிறார் சொல்லின் செல்வர் இரா.பி.சேது(ப்பிள்ளை)யை, பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். திருநெல்வேலி மாவட்டம் இராசவல்லிபுரம் என்ற ஊரில் பங்குனி 20,…
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 : இரா.பி.சேது(ப்பிள்ளை)
[தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)(தொடர்ச்சி] தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 2/2 இன்னும், இந் நாட்டைத் தந்தை நாடென்று கருதும் பொழுது, அத் தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது உரிமை, மனத்தில் முனைந்து தோன்றுவதாகும். இவ்வுரிமைக் கருத்து உள்ளத்தைக் கவரும்பொழுது வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின் உருவமாகவும், தந்தையை வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல் தமிழ் வழக்காகும். அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு என்று நினைக்கும் பொழுது அன்பினால் இன்பம் பிறக்கும்; தந்தை நாடு …
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 – இரா.பி.சேது(ப்பிள்ளை)
தமிழ் இன்பம் – செந்தமிழ் நாடு 1/2 இவ்வுலகில் முன்னணியில் நிற்கும் நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத் தலைக்கொண்டு போற்றுகின்றன. தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன்னர் அந்நிய மொழிகளில் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு அழகென்றும், தாய்மொழியைப் புறக்கணிப்பது தவறன்றென்றும் அறிவாளர் கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய கொள்கைகள் அகன்று ஒழிய, ஆர்வம் நிறைந்த தமிழ்மக்கள் தமிழ்த்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர். தமிழ்மொழியின் நயமறிந்த கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும் தமிழகத்தை அன்பு ததும்பும் இன்ப மொழிகளாற் போற்றும் அழகு எல்லை யற்ற இன்பம் தருவதாகும். …
பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்
[1] பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும். பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் உடன் பயிலும் தோழர்களாலும் பாராட்டப்பெற்றவர். அவரது தமிழ்ப்பற்றைத் தனித்தமிழ்ப்பற்றாக ஆற்றுப்படுத்தியவர் அவரது ஆசிரியர் அறிஞர் சாமி.சிதம்பரனார். இலக்குவனார்க்குப் பெற்றோர் இட்ட பெயர்…
குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!
குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று! சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித்தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். –…
சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்? – இரா.பி. சேது(ப்பிள்ளை)
சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்? தோப்பு மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும். தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும், மான்தோப்பு இராமநாதபுரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வௌவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன. சுரம் சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்துவிட்டது….
பம்புளி என மருவிய பைம்பொழில் – இரா.பி.சேது(ப்பிள்ளை)
பம்புளி என மருவிய பைம்பொழில் மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத்…
காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)
கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும். தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக்…
காடு என்னும் பெயருடைய பல ஊர்கள் – இரா.பி.சேது(ப்பிள்ளை)
காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால்…
குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்: இரா.பி.சேது(ப்பிள்ளை)
குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம் குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி நாட்டுத் திருப்பரங்குன்றமும், தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் பாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்க்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங்குணம், பூங்குணம் என மருவி உள்ளன. குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும், குன்றக்குடி என்றும் பெயர் பெறும். அப்பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம்…
தமிழ்நாடு ஒருமையுடன் உழைத்தால் பெருமையடையும்! – இரா.பி.சேதுப்பிள்ளை
விழுமிய வீரம் “தோன்றிற் புகழொடு தோன்றுக” என்றார் திருவள்ளுவர். அவ்வுரையின் வழிநின்று வீரப்புகழ் பெற்றது பழந் தமிழ்நாடு. பாரில் உயர்ந்த பனிவரை மேல் நின்றது பழந்தமிழர் வீரம். கங்கை நாட்டில் கதித்தெழுந்த பகைவரை அறுத்தது தமிழர் வீரம். கடல் கடந்து மாற்றாரைக் கலக்கியது தமிழர் வீரம். இது சென்ற காலத்தின் சிறப்பு. மறவர் நிலை அன்று நாற்றிசையும் போற்ற ஏற்றமுற்று வாழ்ந்த தமிழ்நாடு இன்று ஊக்கம் இழந்து உறங்குகின்றது. மன்னரும் மதிக்க வாழ்ந்த மறக்குலம் இடைக்காலத்தில் அடக்கி ஒடுக்கப்பட்டது. அக்குல வீரரது முறுக்கு மீசை…
தமிழ்க்கொடி யேற்றம் – இரா.பி.சேதுப்பிள்ளை
தமிழன் சீர்மை தமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமையமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன் வாளாண்மையால் பகைவரை வென்றான்; தாளாண்மையால் வன்னிலத்தை நன்னிலமாக்கினான்; வேளாண்மை யால் வளம் பெருக்கினான்….