இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 2 : தமிழர் படைத்திறம்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம் – தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழர் படைத்திறம் நாற்படைஅரசர்க்குரிய அங்கங்களுள் தலைசிறந்தது படை. படைத் திறத்தால் அரசன் உட்பகையை அழிப்பான்; புறப்பகையை ஒழிப்பான். முன்னாளில் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நாற்படையுமுடைய அரசன் மிகச் சிறந்தவனாக மதிக்கப் பெற்றான்.1 எல்லாப் படைகளுக்கும் மன்னனே மாபெருந் தலைவன்.யானைப் படைநால்வகைப் படைகளில் ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது யானைப்படை. செருக்களத்தில் வீறுகொண்டு வெம்போர் விளைப்பதும், மாற்றார்க்குரிய மாட மதில்களைத் தாக்கித் தகர்ப்பதும் யானைப் படையே. அப்படைவீரர் யானையாட்கள்…
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 1 : தமிழ்க் கொடியேற்றம்
(தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்-தொடர்ச்சி) தமிழர் வீரம்தமிழ்க் கொடியேற்றம் தமிழன் சீர்மைதமிழன் என்றோர் இனம் உண்டு; தனியே அதற்கொரு திறம் உண்டு. அத்திறம் முன்னாளில் தலை சிறந்து விளங்கிற்று. “மண்ணும் இமயமலை எங்கள் மலையே” என்று மார் தட்டிக் கூறினான் தமிழன். “கங்கையும் காவிரியும் எங்கள் நதியே” என்று இறுமாந்து பாடினான் தமிழன். “பஞ்சநதி பாயும் பழனத் திருநாடு எங்கள் நாடே” என்று நெஞ்சம் நிமிர்ந்து பேசினான் தமிழன். தமிழன் ஆண்மை ஆண்மை நிறைந்தவன் தமிழன். அந்நாளில் அவன்…
தமிழர் வீரம் – முன்னுரை – நாவலர் ச.சோமசுந்தர பாரதியார்
இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் திரு. நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதிய முதற் பதிப்பின் முகவுரை தமிழர் வீரம் என்னும் நல்லுரைத் தொகுதி வரப்பெற்றேன். படித்து உவகையுற்றேன். இவ் வினிய உரைச் செய்யுள் எழுதிய புலவர், சென்னைப் பல்கலைக் கழகத் தலைவராம் திரு. இராபி. சேதுப்பிள்ளை அவர்கள். ‘ சொல்லின் செல்வர் ‘ என வள மலி புலமை இளந்தமிழுலகு பாராட்டும் இப் பேராசிரியர் இனிய எழுத்தாளர்; இன்சொற் பேச்சாளர். இவர்கள் உரை கேட்டு மகிழாத தமிழர் இரார். இவர்கள் இயற்றும்…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 3
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 2 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 3 சோலை சோலை என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் உண்டு. மதுரையின் அருகேயுள்ள அழகர் கோவில் பழங்காலத்தில் திருமால் இருஞ்சோலை என்று பெயர் பெற்றிருந்தது.32 பழமுதிர் சோலை முருகப் பெருமானது படைவீடுகளில் ஒன்று என்று திருமுருகாற்றுப்படை கூறும்.33 சேலம் நாட்டில் தலைச்சோலை என்பது ஓர் ஊரின் பெயர். திருச்சிராப்பள்ளியில் திருவளர்சோலை என்னும் ஊர் உள்ளது. தோப்பு மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும்.34 தோப்பின்…
ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 2
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 2 பழங்காலத்தில் தமிழ் நாட்டில் மரம் செறிந்த காடுகள் மலிந்திருந்தன. பண்டைத் தமிழரசர்களாகிய கரிகால் வளவன் முதலியோர் காடு கொன்று நாடாக்கினர் என்று கூறப்படுகின்றது.19 ஆயினும், அந் நாளில் இருந்து அழிபட்ட காடுகளின் தன்மையைச் சில ஊர்ப்பெயர்களால், உணரலாம். இக்காலத்தில் பாடல் பெற்ற தலங்கள் என்று போற்றப்படுகின்ற ஊர்கள் முற்காலத்தில் பெரும்பாலும் வனங்களாகவே இருந்தன என்பது சமய வரலாற்றால் அறியப்படும். சிதம்பரம் ஆதியில் தில்லைவனம்; மதுரை கடம்பவனம்; திருநெல்வேலி வேணுவனம்….
ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 1
(ஊரும் பேரும் – முகவுரையும் நன்றியுரையும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 1. தமிழகமும் நிலமும் தமிழகம் பழம் பெருமை வாயந்த பாரதநாட்டின் தென்பால் விளங்குவது தமிழ்நாடு. சேர சோழ பாண்டியர் என்னும் மூவேந்தரால் தமிழகம் தொன்றுதொட்டு ஆளப்பட்ட தென்பர். பொதுவுற தமிழகம் நோக்கும்பொழுது பழந் தமிழகத்தில் மேல்நாடு சேரனுக்கும், கீழ்நாடு சோழனுக்கும், தென்னாடு பாண்டியனுக்கும் உரியன வாயிருந்தன என்பது புலனாகும். இங்ஙனம் மூன்று கவடாய் முளைத்தெழுந்த தமிழகம் மூவேந்தரது ஆட்சியில் தழைத்தோங்கி வளர்ந்தது.*1 நால் வகைப்பட்ட நிலங்கள். தமிழகத்தில் அமைந்திருக்கக் கண்டனர் பண்டைத் தமிழர்.*2…
ஊரும் பேரும் – திரு.வி.க. அவர்களின் முகவுரையும் ஆசிரியர் இரா.பி.சேது நன்றியுரையும்
தமிழகம் ஊரும் பேரும் முகவுரை உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புகள் பலப்பல. அவற்றுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது. நூலின் உள்ளுறை யாது? அறிவு. ஆதலின், நூல் அமைப்பை அறிவுச் சுரங்கம் என்று கூறலாம். நூல்கள் பல திறம். பல திறத்துள் இரவியும் தனித்தும் நிற்பது வரலாறு. வரலாறு வான் போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும், அவற்றைக் கடந்து தனித்தும் நிற்பதன்றோ? “ஊரும் பேரும்” என்னும் இந் நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ் வரலாறு தமிழ் நாட்டின்…