தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] – இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙீ] தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙு] இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி நெல்லையில் பணியாற்றிய பேராசிரியர் சி.இலக்குவனார் அடுத்து விருதுநகர் செந்திற்குமாரநாடார் இந்துக்கல்லூரியில் (10.08.47 அன்று) தமிழ்த்துறைத்தலைவராகப் பணியில் சேர்ந்தார்; இக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பின்மையால் இளங்கலையில் தமிழ் இலக்கியத்தை அறிமுகப்படுத்தினார். கல்லூரியிலும் தமிழ் அமைப்புகள் மூலமாக நகரிலும் தம் தமிழ்த் தொண்டினைத் தொடர்ந்தார் பேராசிரியர். “பேராசிரியர் (சி.இலக்குவனார்) சென்ற இடங்களில் எல்லாம் தமிழ்த் தொண்டே நிகழ்ந்தது. தமிழுக்கு மறுமலர்ச்சி…
இன்று .. இளைஞர் .. இலக்கியம் – குவிகம் நிகழ்வு
ஆவணி 25, 2047 / செட்டம்பர் 10, 2016 சனிக்கிழமை மாலை 6.30 மணி சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் சாலை, ஆழ்வார்பேட்டை சென்னை 600018 குவிகம் இலக்கிய வாசலின் இம்மாத நிகழ்வாக முழுவதும் இளைஞர்கள் வழங்கும் கதை, கவிதை, கருத்து நிகழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறையின் இலக்கியப் பார்வையினை அறிய இஃது ஒரு சாளரமாக அமையுமோ? நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குவிகம் மின்னிதழ் படிக்க வலைப்பூ பார்க்க
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 – தி.வே. விசயலட்சுமி
தொல்காப்பியம் காட்டும் பண்பாட்டு நெறிகள் 1/2 பண்டைத் தமிழரின் விழுமிய வாழ்வு சிறந்த பண்பாட்டையும் செவ்வியல் இலக்கிய, இலக்கணங்களையும் தோற்றுவித்தது. அவற்றுள் காலத்தால் முற்பட்டதும். பெருமைக்குரியதுமாய் இருக்கும் நூல் தொல்காப்பியமாகும். தமிழுக்கும், தமிழினத்திற்கு முதனூல். இந்நூலுக்கு முன்னர்த் தோன்றியனவாகச் சில நூல்கள் இருப்பினும், அந்நூல்களைப்பற்றி நாம் ஒன்றும் அறியக் கூடவில்லை. இடைக் காலத்தில் தொல்காப்பியப் பொருளதிகாரம் மறைப்புண்டிருந்தது என்பது தெரிய வருகிறது. தொல்காப்பியனார் குறித்த வரலாறுபற்றிப் பலசெய்திகள் வழங்குகின்றன. அவற்றுள் தொல்காப்பியனாருடன் ஒரு சாலை மாணாக்கராகிய பனம்பாரனார் பாடிய தொல்காப்பியச்…
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே! – அகத்தியர்
இலக்கியம் இன்றி இலக்கணம் இன்றே; எள்ளின் றாகில் எண்ணெயும் இன்றே; எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத் தினின்றும் எடுபடும் இலக்கணம் அகத்தியர்: பேரகத்தியத் திரட்டு
சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்
சி.இலக்குவனார் – சில நினைவுகள் “ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…” என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத்…
திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம் – இரா.நெடுஞ்செழியன்
திருக்குறள் என்றும் அழியாச் சிறந்த பேரிலக்கியம் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுப்படையாக அமைந்த ‘பொதுநூல்’ என்று பெயர் பெற்றது. உலகோர் போற்றிப் புகழுவதற்குரிய ‘பொதுமறைநூல்‘ என்னும் பெருமையுடையது. மக்களின் வாழ்வியலைப் பற்றிக் கூறவந்த ‘வாழ்வியல் நூல்‘ என்னும் சிறப்புடையது. எல்லா மக்களுக்கும் வாழ்க்கை வழிகாட்டியாகத் திகழக் கூடிய ‘வாழ்க்கை வழிகாட்டி நூல்’ என்னும் பெருமை பெற்றது. மக்கள் அனைவர்க்கும் அறநெறி கூறவந்த ‘அறநெறி நூல்’ என்னும் புகழ் பெற்றது. எல்லார்க்கும் அன்புநெறியை அறிவுறுத்த வந்த ‘அன்புநெறி நூல்’ என்னும் சிறப்பு பெற்றது. மக்கள்…
பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்! – சி.இலக்குவனார்
பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது. நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும். அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக்கியம் இயற்றுதல் இயலும். கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்களே செம்மையுற இயற்றுதல் இயலும். தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய்…
பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும்! – சி.இலக்குவனார்
எழுத்தைப் பற்றியும் சொல்லைப் பற்றியும் விரிவாக உரைத்த ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்தால் ஆக்கப்பட்ட சொற்றொடர் கருவியாக அறியப்படும் பொருளைப் பற்றி உரைப்பதுவே அவர் நூலின் மூன்றாம் பகுதியாகும். எழுத்தும் சொல்லும் மொழியைப் பற்றியன. மொழியைத் திருத்தமாக நன்கு பயன்படுத்த மொழி நூலறிவு வேண்டும். திருத்தமுற்ற மொழியின் செம்மைப் பண்பு நிலைத்திருக்க அம்மொழியில் உரையும், பாட்டும் தோன்றுதல்வேண்டும். அவ்வாறு தோன்றும் உரையும் பாட்டுமே இலக்கியம் எனப்பட்டன. பண்பட்ட மொழியின் செம்மைசால் மலரே இலக்கியமாகும். ஒரு மொழிக்கு வளமும், வாழ்வும் அளிப்பது இலக்கியமே. இலக்கியம் தோன்றப்…
காதல்வாழ்வே இலக்கியத்தோற்றத்தின் விளைநிலம் – சி.இலக்குவனார்
காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக்களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக்காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத்திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கியத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும். செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் : தொல்காப்பிய ஆராய்ச்சி: பக்கம்: 129-130
இலக்கிய யானைகள் எட்டு! – பு.சீ. கிருட்டிணமூர்த்தி
ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள் நெல்லையைச் சார்ந்த வடிவேற் கவிராயர் என்பவர் இலங்கையில் இருந்தபோது, யாழ்ப்பாணம் நமச்சிவாய(முதலியார்) என்பவர், யாழ்ப்பாணம் திருவானைக்கோட்டையில் கோயில் கொண்டுள்ள சுப்பிரமணியர் மீது ஒரு கோவை பாட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க வடிவேற் கவிராயர் கோவையைப் பாடி முடித்துக் கொடுத்ததற்காக, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் ஒரு பாராட்டு விழா நடந்தப்பட்டது. அப்பாராட்டு விழாவில், இவரைச் சோதிக்க விரும்பிய ஒரு புலவர், ஒவ்வொரு பாட்டிலும் எட்டு யானைகள் வருமாறு சிவபெருமான் மீது பாடல் பாடவேண்டும் என்றார். அதற்கு…
ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது!
ஆரியர்களுக்கு இலக்கிய இலக்கணம் தெரியாது! ஆரியர்கள் தமிழர்களோடு உறவாடித்தான் தமிழ் இலக்கிய இலக்கணங்களை அறிந்தார்கள். ஆரியர்களுக்கு முதன்முதலில் இலக்கியம், இலக்கணம் என்றால் என்ன என்றே தெரியாது. (எழுத்துக்களை வகைப்படுத்தியவர்கள் தமிழர்களே.) மறைமலை அடிகள் : தமிழின் தனிச்சிறப்பு
புதுவையில் புத்தகக் கண்காட்சி – இலக்கியம் & காலச்சுவடு
ஆனி 17 – ஆடி 15, தி.ஆ. 2045