வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, அனல் வினா மன்றம்
இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும்…
வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும்! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் ! – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தல் கொழும்பு, மார்ச்சு 23 இலங்கை இனப்படுகொலைக் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலைக் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரண்டு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த்…
போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
போற்றுதலுக்குரிய ஞாலத்தலைவர் பிரபாகரன் என்றென்றும் வாழியவே! தமிழ்நாடான இலங்கை, ஒற்றை நாடாகவே மலர்ந்து தமிழினமும் இனஉரிமையும் இணைஉரிமையும் பெற்றுத் திகழும் என்னும் கனவு சிங்களர்களால் அழிக்கப்படத் தொடங்கிய நாளிலிருந்தே தமிழர்நாடு மலர வேண்டிய தேவையை இலங்கைத்தமிழர்கள் உணர்ந்தனர். அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் அவற்றிற்கு எதிரான தொடர் போராட்டங்களும் வாழ்க்கையாய் மாறின. விடுதலை விதைகள் பலரது உள்ளங்களிலும் ஊன்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே “தமிழீழம் தமிழர்களின் தாயகம்“ என்னும் மந்திர உண்மை ஈழத்தமிழர்களை வழிநடத்தியது. மூத்ததலைவர்கள் வழியில் போராட்டக் களத்தில் ஈடுபட்டாலும் தேவை உணர்ந்து விடுதலைப்படை…
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஈழம் : துயரம் விலகவில்லை ! என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை! ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்தானியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…
தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!
தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்! (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம். அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலையும் குடும்பங்கள், வவுனியாவில் கறுப்புக்கொடி போராட்டம்! இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க்குற்றம், சித்திரவதைகள், பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமானவர்களை உசாவுவதற்கு, ஐ.நா மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானத்திற்கு விடையளிக்கும் கடப்பாட்டினை தொடர்ந்து புறக்கணித்துவரும் இலங்கை அரசுக்கு, இம்முறையும் செனிவாவில் இன்னும் இரண்டு வருட கால நீட்டிப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் மாசி 28, 2048 / 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டுக் கடத்தப்பட்டு காணாமல்…
சிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்
சிங்கள அரசின் ஏமாற்று வேலை இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது. 2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம்…
இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
இனப்படுகொலைக்கான நீதியை இழுத்தடிக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் மாசி 27, 2048 / 11.03.2017 சனி காலை 9.00 மணி, சென்னைச் செய்தியாளர்கள் சங்கம், சேப்பாக்கம் ஒன்றரை இலட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை, போர்க்குற்ற விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்று வருவதை நீங்கள் அறிவீர்கள். இனப்படுகொலை முடிந்து 8 ஆண்டுகள் ஆனபிறகும், பன்னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்றங்களை உசாவுவதாக இலங்கையே ஒப்புக்கொண்டு 18 மாதம் ஆனபிறகும், அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் எடுக்காத இலங்கை, …
அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016
அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப்போட்டி 2016 முடிவு நாள் : பங்குனி 17, 2048 மார்ச்சு 30, 2017 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி : ஞானம், கிளை அலுவலகம், எண் 38, 46 ஆவது ஒழுங்கை, கொழும்பு 06.
ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா?
நீங்கள், ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என்பதை வலியுறுத்த விரும்புகிறீர்களா? ஐ.நா.அவையில் அளிக்க கருத்துகளைத் தெரிவியுங்கள். வணக்கம்! தமிழக, தமிழீழச் செயற்பாட்டாளர்களுக்கான வேண்டுகோள். பெரும்பாலான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் மாவீரர் நாளுக்கான அதிகளவான முதன்மையைக் கொடுத்துச் செயற்படுகிறீர்கள் அதே முதன்மையையும் மக்கள் ஆற்றலையும் அந்த மாவீரர்களின் இலட்சியத்தை வென்றெடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் அவை சார்ந்த செயற்பாடுகளுக்கும் வழங்கவேண்டுமென எதிர்பார்க்கிறோம். நாம் இந்தத் தருணத்திலே அதற்காக அதிகமாக அதிகமாக உழைக்கவேண்டியுள்ளது. தமிழர்களுடைய சிக்கல்களை நாம் அனைத்துநாட்டுமயப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம், தற்போதைய இறுக்கமான இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு…
அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்! – புகழேந்தி தங்கராசு
அழுகிப்போன இலங்கைக்குப் புனுகுபூசும் இராம்!/ ‘இலங்கையில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகப் பன்னாட்டுப் பங்களிப்புடன் கூடிய நடுநிலையான உசாவல் நடத்தப்பட வேண்டும்’ – என்று ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசின் இசைவுடனேயே, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்றுவரை, அப்படி ஓர் உசாவல் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை. சிங்களப் படையினரின் கொலைவெறியும் காமவெறியும் தொடர்ந்து அம்பலமாகிவந்த நிலையில், பன்னாட்டு அளவில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட நெருக்கடியை நீர்த்துப்போக வைப்பதற்காகவே, அந்தத் தீர்மானத்தைத்…