செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்
செல்லாப்பணத்தாள் மாற்றம் – மாணிக்கவாசகம் பள்ளியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி, தேவகோட்டையில் இருந்தாலும் தலைநகரில் உள்ள வசதியான பள்ளி போன்று மாணவர்களை இற்றைநாள்(up to date) விவரம் அறிந்தவர்களாக ஆக்குவதிலும் கல்வியுடன் பிற துறை நடவடிக்கையில் ஈடுபடச் செய்வதிலும் முன்னணியில் உள்ளது. எனவே, இன்றைய தலையாயச் சிக்கலான செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 உரூபா, 1000 உரூபாய் பணத்தாள்களை மாற்றுவது எப்படி என்று விளக்கி உள்ளனர். இக்கூட்டத்தில் பள்ளி மாணவர் விசய் அனைவரையும் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை…
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள்
மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள் தேவகோட்டை: தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேசியக் கல்வி நாள் விழா நடைபெற்றது. அனைவரும் ஏதாவது பயிர்த்தொழிலில் ஈடுபட தலைமையர் பேபி இராணி அறிவுறுத்தினார். விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் வரவேற்றார். ஓய்வு பெற்ற நகராட்சி நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தனியார் வேளாண் கல்லூரித் தலைமையர்(டீன்) பேபிஇராணி தலைமை தாங்கினார். அவர்…
அகவை பத்துதான். ஆனால், அறிந்தனவோ 400 மொழிகள்! – கலக்கும் அக்கிரம்!
அகவை பத்துதான். ஆனால், அறிந்தனவோ 400 மொழிகள்! – கலக்கும் அக்கிரம்! அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன் முறையாகத் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 அகவையுள்ள அக்கிரம் என்கிற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் திகைக்கச் செய்தார். அறிவுக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி? …
மாணிக்கவாசகம் பள்ளி : அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கேற்றவர்களுக்குப் பாராட்டு
தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கப் போட்டிகளில் பங்கு பெற்றுச் சான்றிதழ்கள் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்விற்கு வந்தவர்களை மாணவர் நந்தகுமார் வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆசிரியர்நாள் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றுச் சான்றிதழ், பதக்கம் தனலெட்சுமி, இரஞ்சித்து, உமா மகேசுவரி , சீவா, பரமேசுவரி, பார்கவி இலலிதா, இராசேசுவரி, நித்திய கல்யாணி, காயத்திரி ஆகிய மாணவர்களுக்கும், இரோசிமா…
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி : திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு
மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி : திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டி : மாணவர்களுக்குப் பாராட்டு தேவகோட்டை: சௌபாக்கிய துருக்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமுருகாற்றுப்படை ஒப்பித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களை வாசுகி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். பரிசு பெற்ற மாணவர்களான திவ்விய பாரதி, அசய், பிரசித்து, கனிட்கா, முத்தையன், திவ்வியசிரீ, சத்தியா, அம்முசிரீ.மகாலெட்சுமி, அசய் பிரகாசு, பாக்கியலெட்சுமி, நந்தகுமார், இராசேசு, உமா மகேசுவரி,…
மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு
மாணிக்கவாசகம் பள்ளியில், ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கும் பங்கேற்றோருக்கும் பாராட்டு தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் வாணாள் காப்பீட்டுக் கழகம் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்தவர்களைப் பள்ளி மாணவர் இராசேசு வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். வாணாள் காப்பீட்டுக்கழகம்(எல்.ஐ.சி.) சார்பாக நடைபெற்ற ஓவிய போட்டிகளில் பங்கு பெற்று முதலிடம் பிடித்த 3 ஆம் வகுப்பு மாணவர் பாலமுருகன், மற்றும் 4 ஆம் வகுப்பு மாணவர் கிசோர்குமார்…
ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகள் : மாணவர்களுக்குப் பாராட்டு
மாணிக்கவாசகம் பள்ளியில் ஓவியம், ஒப்புவித்தல் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு முதலிடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் இராசேசு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தேவகோட்டை கிளையின் சார்பாக…
மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வா.இ.க. / எல்.ஐ.சி. விருது வழங்கும் விழா
தேவகோட்டை- தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் வாணாள் இடரீட்டுக் கழகம்(எல் .ஐ.சி.) சார்பில் பள்ளியில் சிறந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வா.இ.க./எல்.ஐ.சி.கிளை மேலாளர் மோகன சுந்தரம் மாணவர்களுக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி இடரீட்டுக் கழகம் .வைரவிழா கொண்டாடுவதைக் குறித்து சிறப்புரையாற்றினார். கிளையின் வளர்ச்சி அதிகாரி தமிழரசு முன்னிலை வகித்தார். இந்திய வாணாள் இடரீட்டு நிறுவனம் தொடர்பாக இராசி என்ற மாணவியும், அதன்…
மாணிக்கவாசகம் பள்ளியில் பாரதியார் விழா
மாணிக்கவாசகம் பள்ளியில் பாரதியார் விழா தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பாரதியார் விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தோரை மாணவர் சீவா வரவேற்றார். பள்ளித்தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்கள் சனசிரீ, ஐயப்பன் “பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை” என்கிற பாடலையும், மாணவர்கள் கார்த்திகேயன், இராசேசுவரி, “பாரதியாரின் புதுமைப் பெண்” என்கிற தலைப்பில் அமைந்த கவிதையையும் பாடினார்கள். மேலும் பாரதியார் படத்துக்கு வண்ணம் தீட்டுதல், பாரதியார் படம் வரைதல் ஓவிய போட்டியில் ஆகாசு, பாலமுருகன், அம்முசிரீ,…
தேவகோட்டையில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேவகோட்டையில் பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் கண் தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவி சக்தி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண் தானம் ஏ.சி. அறக்கட்டளை பொறுப்பாளர் அருணாச்சலம் கண்தானம் குறித்துப் பேசுகையில், “இந்தியக் கண் வங்கிகளின் கூட்டமைப்பின் அறிக்கைக்கிணங்க நமது நாட்டில் நூறாயிரக்கணக்கானவர்கள் கருவிழி குறைபாட்டால் பார்வையற்றவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் அகவையினர். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கில்தான் கண்தானம் பெறப்படுகிறது. நீரிழிவு, இரத்தக்கொதிப்பு போன்ற…
தேவகோட்டை : சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு
வட்டார அளவிலான சதுரங்கப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பாராட்டு தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை குடியரசு நாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. தமிழக அரசு 2016-2017ஆம் ஆண்டிற்கான குடியரசுநாள், பாரதியார்நாள் குறுவட்டு அளவிலான சதுரங்கப் போட்டிகளைத் தமிழகம் முழுவதும் நடத்தியது. தேவகோட்டை குறுவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் 11 அகவைக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் இப்பள்ளியின் 5 ஆம் வகுப்பு அசய் பிரகாசு…
தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்!
தாய்மொழி வழிக் கல்வியில் படிப்பதே புரிதலைத் தரும்! ஆங்காங்கு நாட்டில் தாய்மொழி வழிக்கல்வியே அடிப்படைக் கல்வி! ஆங்காங்கு தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல். தேவகோட்டை, பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆங்காங்கு நாட்டின் பதிவு பெற்ற பொறியாளரும், தமிழ்க் குமுகத்தின் (சமூகத்தின்) புள்ளியுமான மு.இராமநாதன் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் சஞ்சீவு வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆங்காங்கு நாட்டில் பதிவு பெற்ற…