வன்மை எனக்குஅருள்வாய்! – இளவல்

வன்மை எனக்குஅருள்வாய் ! அன்புள்ள இறைவனே என்வேண்டுதல் கேட்டருள்வாய் வன்மை எனக்குஅருள்வாய் – நீ எண்ணும் முடிவை ஏற்பதற்கு பொறுத்தருள்வாய் என்னை நீ – நான் வருத்தும் பாவம்ஏதும் செய்திருப்பின் எனை அழைத்திடல் ஏற்றதென நினைத்திடில் உடனே நீ வலியும் உறுதியும் தந்திடுக- என்மேல் கழிபேரன்பு கொண்டோர்க்கே என்றனுக்கு உதவிடுவாய் தன்னிரக்கப்பயணம் மேற்கொள்ளாமைக்கே ஏனென்று கேட்பையோ உன்விழைவே சாலச்சிறந்ததுஎன ஏற்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் உதவிடுவாய்  ஓ இறைவா அருள்கூர்ந்து எனக்கு உதவிடுவாய் உன்னைப் பற்றுதற்கே – அப்பற்றும் அச்சத்தினாலன்று என்றென்றும் நம்பிக்கை உரம் கொள்வதற்கே  …

எம்மை மகிழ்விப்பாய்! – இளவல்

எம்மை மகிழ்விப்பாய்!   என் எழுதுகோல் களத்தில் உன்பெயர்தான் முளைக்கிறது என் இதழ்ச் செடியில் உன்பெயர்தான் பூக்கிறது என் மன ஊஞ்சலில் உன்பெயர்தான் ஆடுகிறது என் கண்ஆடிகளில் உன்பெயர்தான் தெரிகிறது என் செவி மணிகளில் உன்பெயர்தான் ஒலிக்கிறது என் புத்தகத் தோட்டத்தில் உன்பெயர்தான் மணக்கிறது என் இல்லக் கோயிலில் உன்பெயர்தான் குடியுள்ளது என் எண்ண வானத்தில் உன்பெயர்தான் பறக்கிறது என் வாணாளில் நீ வந்து எம்மை மகிழ்விப்பாய்!   – இளவல்  

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்!

மங்காத் தமிழ் வளர்க்கும் மறைமலை இலக்குவனார்! திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதைவணக்கஞ் செய்தல் வேண்டும் என்னும் பாரதியார் நல்லுரைக்கிணங்க அயல்நாட்டாராலும் போற்றத்தகும் புலமையும் பிறர் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து உலகம் வணங்கச் செய்யும் தமிழ் வளமையும் மிக்க அருந்தமிழ்ச் சான்றோர் பேராசிரியர் இலக்குவனார் மறைமலை அவர்கள்.   தமிழ்நாட்டில் சென்னை மாநிலக்கல்லூரியில் 30 ஆண்டுகளும் புறநகர்க்கல்லூரிகளில் 5 ஆண்டுகளும் கல்விப்பணி ஆற்றியதுடன் ஓராண்டுக்காலம் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அங்குப் பணியாற்றுகையில் அப்பல்கலைக்கழகம் சார்பில் பிற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும்…

வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்

வாழ்க்கை என்பது போராட்டம்   –  எனில் போரில் கலந்து வென்றிடுவோம் வாழ்க்கை என்பது விளையாட்டு –  ஆயின் ஆடி வாகை சூடிடுவோம் வாழ்க்கை என்பது பயணம்        –   ஆனால் இனிதே இலக்கை அடைந்திடுவோம் வாழ்க்கை என்பது கேளிக்கை  –     என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம் வாழ்க்கை என்பது கணக்கு       –  எனவே போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம் வாழ்க்கை என்பது வரலாறு          – அதனால் செம்மைச் செயலைப் பதித்திடுவோம் வாழநாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம் எத்தனைத் தடைகள் வந்தாலும் அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம் மெல்ல…

கை வீசம்மா கை வீசு! – இளவல்

கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! புத்தகம் வாங்கலாம் கை வீசு! நன்றாய்ப் படிக்கலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பொம்மை வாங்கலாம் கை வீசு! ஆடி மகிழலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! பழங்கள் வாங்கலாம் கை வீசு! பகிர்ந்து உண்ணலாம் கை வீசு! கை வீசம்மா கை வீசு! கடைக்குப் போகலாம் கை வீசு! ஆடை வாங்கலாம் கை வீசு!…

தமிழைப் போற்ற வாருங்கள்!

– இளவல்   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்!   அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம்…