சேம வங்கியின் (Reserve Bank) பெயரில் வரும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள்!
சேம வங்கியின் (Reserve Bank) பெயரில் வரும் மின்னஞ்சல்களை நம்பாதீர்கள்! – சேம வங்கி ஆளுநர் எச்சரிக்கை! “உங்களுக்குப் பத்துக் கோடி உரூபாய் பரிசு விழுந்திருக்கிறது”, “இத்தனை நூறாயிரம் (இலட்சம்) உரூபாய் குலுக்கலில் (lottery) உங்களுக்குக் கிடைத்திருக்கிறது” எனவெல்லாம் அன்றாடம் போலி மின்னஞ்சல்கள் வருவது வாடிக்கையானதுதான். ஆனால், அண்மையில் இது போல இந்தியச் சேம வங்கியின் (Reserve Bank of India) பெயரைப் பயன்படுத்திச் சிலருக்கு மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இது தொடர்பாகப் பேசிய சேம வங்கி ஆளுநர் இரகுராம் இராசன், “சேம வங்கி…
சிங்கள வதைமுகாம் கொடுமைகள் – மரு.து.வரதராசா:செவ்வி இர.சிரீகந்தராசா
சிங்கள வதைமுகாம் கமுக்கங்கள் – அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் து.வரதராசா! 1/6 நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழத் தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் எதிர்வுகளுக்கு(சவால்களுக்கு) மத்தியில் உயர்பெரும் மருத்துவச் சேவை புரிந்தவர் மருத்துவர் து.வரதராசா. தமிழீழத் தாயக மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவரானதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். போர் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பகுதியில் மக்களின் உயிர் காக்க…
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை – சீ.வி.கே.சிவஞானம்
புலம்பெயர்ந்தோர் நாடு திரும்புவது நல்லதில்லை! – சீ.வி.கே.சிவஞானம் “வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் நாடு திரும்புவதற்கான பாதுகாப்பான சூழல் உருவாக்கப்படவில்லை” என்று வட மாகாண அவையின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் நாடு திரும்பி முதலீட்டு, வணிகச் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. ஆனால், இதற்கான பொருத்தமான சூழல் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. இஃது அரசின் நேர்மை மீது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, புலம்பெயர்ந்த மக்கள் யாரும் நாடு திரும்பவோ, இலங்கையில் வணிக முயற்சிகளில் ஈடுபடவோ விரும்ப மாட்டார்கள்…
தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்! – உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டுக் கோயில்களில் ஆடைக் கட்டுப்பாடு நீக்கம்! தமிழ்நாட்டில் கோயில்களுக்குச் செல்வோருக்கு ஆடைக் கட்டுப்பாடு போட்டுத் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் 4.4.2016 அன்று நீக்கி உத்தரவிட்டது. திருச்சி அக்கியம்பட்டி எனும் ஊரிலுள்ள கோயிலில், நாட்டுப்புற ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த ஒப்புதல் கோரிச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விண்ணப்பம் தரப்பட்டது. அந்த விண்ணப்பத்தை 2015 நவம்பரில் உசாவிய தனி நீதிபதி, தமிழ்நாடு முழுவதும் 2016 சனவரி 1-ஆம் நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான…
தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்!
: தமிழ் அறியாதவர்களே காதலைப் பழிப்பார்கள்! அன்றே சொன்னது பரிபாடல்! தள்ளாப் பொருளியல்பில் தண்டமிழாய் வந்திலார் கொள்ளாரிக் குன்று பயன் (பரிபாடல்: 9) “தள்ள வாராக் காதல் பொருளின் இலக்கணம் கூறும் தமிழை ஆராயாதவரே, மலையிடத்து நிகழும் களவொழுக்கத்தை ஓர் ஒழுக்கமென ஏற்றுக்கொள்ளார்” என்று குன்றம் பூதனார் காரணம் கூறிக் கழறுவர். பிற மொழிகள் எழுத்திலக்கணமும் சொல்லிலக்கணமும் உடையனவேயன்றி, மக்களின் வாழ்வை ஆராய்ந்த பொருளிலக்கணம் கண்டவையல்ல. தமிழ் மொழியோ எனின், முவ்விலக்கணமும் நிறைந்தது. தமிழின் பொருளிலக்கணத்தைக் கல்லாத…
நாடாளும் முத்தம்மா – நா.வானமாமலை
நாடாளும் முத்தம்மா முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டில் உழவர் பெருமக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றூர்களில் இவளுக்குப் பெரிய கோவிலும் தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு, முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணிநாகப் புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து பெண்கள் மூவர் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டு போய்க் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள…
திராவிடம் என்பது ஆரியல்லார் என்பதன் குறியீடு! – குளத்தூர் மணி
திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்! ‘நாம் தமிழர் கட்சி’ முன் வைக்கும் கருத்துகள் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள மறுமொழிகள். பகலவன்: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதைப்பற்றிய நிறை குறையைப் பகிர வேண்டுகிறேன்! குளத்தூர் மணி: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம். பகலவன்: ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர்கள் தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்துவது…
பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்
பல்நிற வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான வழிமுறைகள்! பல்நிற வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணம் உரூ.25-ஐ இணையத்தளத்திலும் செலுத்தலாம். இதன்படி விண்ணப்பிப்போருக்கு வீடு தேடி வாக்காளர் அட்டை வரும். நாட்டிலேயே முதல் முறையாக, இந்திய அரசு வங்கியுடன்(State Bank of India) தமிழகத் தேர்தல் ஆணையம் இதற்காகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னைத் தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி இது குறித்து ச், செய்தியாளர்களிடம் 29.03.2016 அன்று கூறியதாவது:- பல்நிற வாக்காளர் அட்டையைப் பெறச் செலுத்த வேண்டிய உரூ.25/-…
என்று முடியும் ஈழ ஏதிலியர் துயரம்? – இலக்குவனார் திருவள்ளுவன்
செய்தியும் சிந்தனையும் [செய்தி: நண்பர் இ.பு.ஞானப்பிரகாசன், மின்னம்பலம் (https://minnambalam.com/k/1459296056 ) தளத்தில் இருந்து பின் வரும் செய்தியை அனுப்பியிருந்தார்: திருச்சிராப்பள்ளி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் ஈழத் தமிழ் ஏதிலியர்கள் பதினான்கு பேர் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொய் வழக்குப் பதிவு செய்து தங்களைச் சிறையில் அடைத்துள்ளதாகவும், தங்களை விடுவிக்கும் வரை காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். மார்ச்சு 28, 29 ஆகிய இரண்டு நாட்களாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்கள், மூன்றாவது…
கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! – இரா.கிருட்டிணமூர்த்தி
கி.மு நான்காம் நூற்றாண்டுச் சங்கக் கால நாணயத்தில் அரிய தகவல்கள்! – நாணயவியல் ஆய்வாளர் இரா.கிருட்டிணமூர்த்தி “கி.மு நான்காம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சங்கக் காலப் பாண்டியரின் நாணயத்தில் அரிய தகவல்கள் கிடைத்துள்ளன” எனத் தென்னிந்திய நாணயவியல் ஆய்வு அமைப்பின் தலைவரான தினமலர் ஆசிரியர் இரா.கிருட்டிணமூர்த்தி கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: சங்கக் காலப் பாண்டியர் நாணயங்களை அண்மையில் ஆய்வு செய்தபொழுது பல அரிய தகவல்கள் கிடைத்தன. நாணயத்தின் முன்புறப் பகுதியின் கீழ்ப் பகுதியில் யானை ஒன்று வலப் பக்கம் நோக்கி…
நீதிமாரே! நம்பினோமே! – நீதியரசர் கே.சந்துரு – நூல் மதிப்புரை
நீதிமாரே! நம்பினோமே! – நீதியரசர் கே.சந்துரு – நூல் மதிப்புரை நூல்: நீதிமாரே! நம்பினோமே!! ஆசிரியர்: கே. சந்துரு வெளியீடு: கவிதா பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்: 6123, 8, மாசிலாமணி தெரு, பாண்டி அங்காடி(பசார்), சென்னை – 600017. பக்கம்: 208 விலை: உரூ.150/- இந்திய நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கைகள் மெல்ல மெல்லச் சரிந்து வரும் நிலையில், நீதியரசர் கே.சந்துரு எழுதியுள்ள இந்த நூல் நம் குமுகக் (சமூக) கவலைகளைப் பகிர்ந்து கொள்கிறது. அத்துடன், நீதித்துறையின் கடமைகளையும் பொறுப்புகளையும் வலியுறுத்தவும் தயங்கவில்லை….
குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று!
குழித்தண்டலை, குழித்தலை ஆயிற்று! சோலையைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல் தண்டலை என்பதாகும். அது தண்டரை எனவும், தண்டலம் எனவும் வழங்கும். திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த குழித்தலை என்னும் ஊர் குழித்தண்டலை என்று முன்னாளில் வழங்கிற்று. காவிரிக் கரையில், பள்ளத்தாக்கான ஓர் இடத்தில், செழுஞ் சோலைகளின் இடையே எழுந்த ஊரைக் குழித்தண்டலை என்று அழைத்தனர் பண்டைத் தமிழர். இன்னும் தொண்டை நாட்டில் பூந்தண்டலம், பழந்தண்டலம், பெருந்தண்டலம் முதலிய ஊர்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் சோலை சூழ்ந்த ஊர்களாக முற்காலத்தில் இருந்திருத்தல் வேண்டும். –…
