நாடகமன்றோ நடக்கிறது! ஐ.நா-வில் அமெரிக்கத் தீர்மானங்கள்

ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம்   பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன.   முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக்…

ஐ.நா.வில் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கத் தீர்மான நிறைவேற்றத்தால் படுகொலை செய்யப்பட்டது நீதி! – வைகோ   “இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைப் படுகொலை செய்த சிங்களப் பேரினச்சார்பு அரசை அனைத்துலக நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய ஐ.நா-வின் மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கான நீதி சாகடிக்கப்பட்டு, அநீதிக்கு மகுடம் சூட்டப்பட்டு விட்டது. ஐ.நா-வின் வரலாற்றிலேயே ௨௦௧௫ (2015) அக்டோபர் ௧ (1) ஆம் நாள் களங்கத்தைச் சுமக்கும் கருப்பு நாளாகிவிட்டது.   ௨௦௦௯ (2009) ஆம் ஆண்டில் கொலைகாரச் சிங்கள…