பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் – மு.வை.அரவிந்தன்
பழைய உரைகள் வரலாற்றுக் கருவூலம் கடல்கோளுக்கும் நெருப்புக்கும் நீருக்கும் கறையானுக்கும் கல்லாத மக்களின் பொல்லாத அறியாமைக்கும் இரையாகி, கணக்கற்ற தமிழ்நூல்கள் மறைந்து விட்டன. அந்நூல்களின் சில பகுதிகளையும் பெயர்களையும் உரையாசிரியர்களே நமக்கு வழங்கிப் பேருதவி புரிந்துள்ளனர்… உரையாசிரியர்கள் தம் காலத்து மக்கள் நிலை,வாழ்க்கை முறை, நாகரிகம், பழக்கவழக்கம், பண்பாடு, அரசியல் போக்கு ஆகியவற்றை ஆங்காங்கே சுட்டிச் செல்கின்றனர். தமிழ்நாட்டு வரலாறு எழுதுவோர், பழைய உரைகள் வாயிலாகக் காலத்தின் குரலைக் கேட்கலாம்; வரலாற்று நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். வரலாற்று ஆசிரியர்கள் பழைய உரைகளைச் சிறந்த வரலாற்று…
உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் –
உரைநூல்களின் பல்வகைப் பயன்கள் உரையாசிரியர்கள், தாம் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமைச் செல்வத்தை எல்லாம் தம் உரைகளில் கொட்டி நிரப்புவதால் நாம் அறிவுக்களஞ்சியத்தினுள் எளிதில் புகுந்து இன்புமுற முடிகிறது. சில பாடல்களுக்கு உரையாசிரியர்கள் மிக விரிவான உரையும் நயமிக்க விளக்கமும் எழுதியிருப்பதால் அவை இலக்கியப் பயிற்சிக்கு வழிகாட்டியாய் அமைகின்றன. விளங்காமல் இருந்த – ஐயத்திற்கு இடமாக இருந்த எத்தனையோ செய்திகள் வெளிப்படுகின்றன. காலந்தோறும் வளர்ந்து வந்துள்ள தமிழ் உரைநடையின் இயல்பு, தனித்தன்மை ஆகியவற்றை உரை கொண்டே நாம் அறிய முடிகின்றது. தமிழ் மொழியின் அமைப்பு,…
தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார் – மு.வை.அரவிந்தன்
தமிழிசை மறுமலர்ச்சிக்கு வழியமைத்தவர் அடியார்க்கு நல்லார் அடியார்க்கு நல்லார் தமிழ்க்கலையின் மாண்பைப் போற்றி விளக்கியுரைத்த குரல், காலங்கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. இருபதாம் நூற்றாண்டில் தமிழிசை மறுமலர்ச்சிக்கு அடியார்க்கு நல்லார் உரையே பெரிதும் உதவியது. தமிழ்க் கலைகளைப் பல நூற்றாண்டுகளாகக் காத்து வழங்கிய பெருமை இவர் உரைக்கு உண்டு. -ஆராய்ச்சியாளர் மு.வை.அரவிந்தன்: உரையாசிரியர்கள்
நூலாசிரியர்களுக்கு இணையான புலமையாளர்கள் உரையாசிரியர்கள் – கி.வா.சகநாதன்
தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் மிகப் பழங்காலத் தொட்டுத் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவற்றை இயற்றிய ஆசிரியர்களை நூலாசிரியர்கள் என்பார்கள். நூல்களை விளக்கும் ஆசிரியர்கள் இருவகைப்படுவார்கள். மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லி நூல்களை விளக்கும் ஆசிரியர்களைப் பயிற்று (போதக) ஆசிரியர் என்பர். நூல்களின் உரைகளை இயற்றிப் பலருக்கும் பயன்படும்படி வழங்கியவர்கள் உரையாசிரியர்கள். நூல்களை மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் ஆசிரியர்களுக்கு உரைகள் துணையாக நிற்கின்றன. நூலாசிரியர்களுக்கு எத்துணை மதிப்பு உண்டோ அத்துணை மதிப்பு உரையாசிரியர்களுக்கும் உண்டு. -கி.வா.சகநாதன், உரையாசிரியர்கள் நூலின் சிறப்புரை
பல்துறையறிஞர் நச்சினார்க்கினியர் – மு.வை.அரவிந்தன்
நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். “நச்சினார்க்கினியர் நூலறிவோடு நுண்ணறிவும் உடையவர். பல்வேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு எழுதுவதோடு அவர் நிற்கவில்லை. நூலில் இடம் பெறும் சமயக் கருத்து, இசை, நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகில் உள்ள பல இனத்து மக்களின் பழக்க வழக்கம், பண்பாடு இவற்றை அறிந்தவர். தமிழில் உள்ள இலக்கணம் இலக்கியம் நிகண்டு காவியப் புராணம் ஆகியவற்றை நன்கு அறிந்தவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் போதிய…
நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர் – மு.வை.அரவிந்தன்
நடுநிலை உரை அறிஞர் இளம்பூரணர் இளம்பூரணர் உரை ஆழமான தெளிந்த நீரோடை போன்றது; பற்றற்ற துறவி தூய்மையான வாழ்வு நடத்தி மூத்து முதிர்ந்து காவி உரையுடன் – அருள்பழுத்த நெஞ்சத்துடன் முகம் மலர்ந்து நம்மிடம் இன்சொல் பேசுவது போன்ற இன்ப உணர்வை இவர் உரை உண்டாக்குகின்றது. ஆரவாரமும் பகட்டும் இவர் உரையில் எங்கும் காண்பது அரிது. மிக மிகச் சுருக்கமாகத் தெளிந்த கருத்தைக் கூறி விளங்க வைக்கின்றார். தாம் கருதியதே சிறந்தது என்று எண்ணும் வகையில் இவர் எவ்விடத்திலும் எழுதவில்லை. பிறர் கருத்தை…
மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே – கி.வா.சகநாதன்
மூலப்பொருளை அறிய உதவுவன உரைகளே! இலக்கண நூல்களுக்கு உரைகள் இல்லாவிடின் அவற்றின் பொருளை அறிவது எளிதன்று. தொல்காப்பியத்தில், இலக்கணத்துக்கு உரை இவ்வாறு அமையவேண்டும் என்ற வரையறை இருக்கிறது. இலக்கணமும் இலக்கியமும் சமய நூல்களும் சூத்திர வடிவில் அமைந்திருப்பதால் அவற்றின் பொருளை அறிந்து கொள்ள உரைகள் இன்றியமையாதவை. இலக்கிய நூல்களின் பொருளையும் மரபறிந்து இலக்கண அமைதி தெரிந்து விளக்க வேண்டும். உரையாசிரியர்கள் அவ்வாறு செய்கிறார்கள். நூல்களின் பொருள்களை விளக்குவது மாத்திரம் உரையாசிரியர்களின் இயல்பு என்று எண்ணக் கூடாது. நூல்களின் கருத்தை விளக்கும்போது நூலைக் கற்பார்…
தொல்காப்பியம் விழுமிய நூல் – மு.வை.அரவிந்தன்
தொல்காப்பியம் விழுமிய நூல் தொல்காப்பியம் என்னும் பழம்பெரும் இலக்கணநூல் தமிழ்மொழியின் தொன்மைக்கும் சிறப்பிற்கும் சான்றாய் விளங்குகின்றது. வளமாக வாழ்ந்த தமிழினத்தின் உயர்ந்த கொள்கைகளையும் எண்ணங்களையும் உலகிற்கு உணர்த்தும் விழுமிய நூலாய் இது ஒளிர்கின்றது. இதனை இயற்றிய தொல்காப்பியரின் குரல், காலத்தையும் இடத்தையும் கடந்து வந்து தெளிவாக ஒலிக்கின்றது. தொல்காப்பியம் தனக்குப் பின் தோன்றிய பல இலக்கண இலக்கியங்களுக்கு எல்லாம் தலைமை தாங்கி வழிகாட்டி நடத்திச் செல்லுகின்றது. தொல்காப்பியத்தின் கருத்தை உணரவும் உணர்த்தவும் புலவர் பெருமக்கள் காலந்தோறும் முயன்று வந்தனர். அம்முயற்சியின் விளைவாய் உரைகள்…