கல்விச் சிந்தனைகள் – 2/3 : தவத்திரு குன்றக்குடி அடிகளார்
எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5
(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4 தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 5 “இலம் என்றசை இருப்பாரைக் காணின் நிலம் என்னும் நல்லாள் நகும்” என்றார் திருவள்ளுவர் இன்றைக்கு நிலமகள் நம்மைப் பார்த்து நாணிச் சிரிக்கின்றாள். நம்நாட்டில் எண்ணெய் இறக்குமதி, கோதுமை இறக்குமதி செய்கிறார்கள். இப்படி விளைகின்ற விளையுள் இருந்தும், உழைக்கின்ற கரங்கள் இருந்தும், ஏன் இந்த நிலை? எண்ணுங்கள்! நல்ல வளமான நாட்டை உருவாக்க நடந்திடுங்கள்! அந்த திசைநோக்கி தடக்க வேண்டும். நல்ல கால்நடைகளைப் பேணிவளர்ப்போம்….
எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 4
(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 3. தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – 4 கோசல நாட்டில் இராமனுக்கு முடிசூட்டப் போகிற செய்தியறிந்தபோதும் மக்கள் மகிழ்ந்தார்கள். இராமன் காட்டுக்குப் போகிறபோதும் அழுதார்கள். அது நாட்டு அரசோடு மக்கள் சேர்ந்து இயங்கிய, இயக்கத்தினுடைய விளைவு. இன்றைக்கு நம்முடைய நாட்டு அரசியலில், ஆட்சியில் அந்த இயக்கத்தோடு மக்கள் சேர்ந்து இயங்குகிறார்களா? இல்லையில்லை. நாடு கடன் வாங்கினால் நம்முடைய நாட்டு மக்கள் கவலைப்படுகிறார்களா? அழுகிறார்களா? நாட்டுக் கடனைத் தீர்ப்பதற்காக ஒருவேளை சாப்பாட்டைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்களா? சாப்பாட்டைத்…
எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 3.
(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2. தொடர்ச்சி) எங்கே போகிறோம்? – 3. புறநானூற்றுக் காலத்திற்கு வந்தால், பன்னாட்டுத் தேசிய இளைஞனைப் போல விளங்குகின்றான் கணியன் பூங்குன்றன். ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன்றிய கருத்து. ஆனால் கணியன் பூங்குன்றன் அன்புதழுவிய நிலையில் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடுகின்றான். “எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்” என்ற கணியன்…
எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 2.
(எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. தொடர்ச்சி) எங்கே போகிறோம்? 2. 1. விடுதலைநாள் விழாச் சிந்தனைகள் எங்கே போகிறோம்? விடுதலை நாளன்று நம்முடைய மதுரை வானொலி நிலையம் இந்த வினாவை நம்மை நோக்கிக் கேட்கிறது. இல்லை இல்லை! இந்த நாட்டு மக்களை நோக்கிக் கேட்கிறது. ஏன்? எங்கே போகவேண்டும் என்று சொல்லாமல், வழி காட்டாமல், எங்கே போகிறோம் என்று கேட்பதற்குக் காரணமென்ன? குற்றங்கள் தெரிந்தால் குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். குறைகள் தெரிந்தால் நிறைகளை வளர்த்துக் கொள்ள முடியும்….
எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. அணிந்துரையும் பதிப்புரையும்
எங்கே போகிறோம்? 1.அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை – முனைவர். த. பெரியாண்டவன் நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக் குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர். ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுற்று நான்காம் ஆண்டு பல்வேறுநாட்களில் விடுதலைநாள் விழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள்,…