குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா?
குறளைக் கீழ்மைப்படுத்துவது நாகசாமி என்ற தனி மனிதனா? கலி.பூங்குன்றன் மனுதருமத்தின் சாரம் திருக்குறள் (Tirukkural an Abridgement of Sastras) என்று பார்ப்பன நாகசாமியால் எழுதப்பட்ட ஆங்கில நூலுக்கான மறுப்புக் கூட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவருக்கே உரித்தான முறையில் ‘நச்சு நச்சு’ என்று கொடுத்தார் சாட்டையடி! வரவேற்புரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் குறிப்பிட்ட ஒரு தகவலைத் தெடர்ந்து நாகசாமியை எம்ஞ்சியார் மன்னித்தாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம் என்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர்…
செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! – இலக்குவனார் திருவள்ளுவன்
செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல் போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்….
பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொங்கல் விடுமுறைக்குப் பொங்கியோர் போகி விடுமுறைக்கும் பொங்கட்டும்! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள் 1031) மத்திய அரசு பொங்கல் விடுமுறையை நீக்கியது என்று கட்சித்தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் தமிழக முதல்வரும் பொங்கி எழுந்தனர். பொதுவாக எதற்காவது ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் நடத்தினால், எதையாவது குறிப்பிட்டு அதற்குப் போராடாதவர்கள் இதற்குமட்டும் போராடுவது ஏன் என்பர். அவ்வாறில்லாமல், பொங்கல் விடுமுறைக்காகப் பொங்கியோர் போகி விடுமுறை வேண்டியும் பொங்க வேண்டுகிறோம். முன்பு, போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என…
சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம் – இலக்குவனார் திருவள்ளுவன்
சசிகலாவின் நல்ல தொடக்கம் வெற்றியின் தொடக்கம்! சசிகலா நடராசன் அதிமுக பொதுச்செயலராகப் பதவி ஏற்றதும் முதல்உரையாற்றியுள்ளார். பிறர் எழுதித் தந்ததாக இருந்தாலும் கருத்து அளித்ததும் வடிவமைத்ததும் இவராகத்தான் இருக்கும். அந்த வகையில் சிறப்பான உரை வாசித்துள்ளார். தொண்டர்களின் மனநிலைக்கேற்பவும் பொதுவான நலன் கருதியும் அமைந்த உரை நல்ல உரைகளுள் ஒன்றாக இடம் பெறுகிறது எனலாம் அரசின் சார்பாக உரையாற்றுபவர்கள் பெரும்பாலும் எழுதி வைத்துள்ள உரையைத்தான் வாசிக்கின்றனர். எனவே, முதல் உரை வாசிப்பாக அமைந்ததில் குற்றம் எதுவுமில்லை. எனினும் மெல்ல மெல்ல வாசிப்பைக் கை…
ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆள்வினைச்செல்வி சசிகலா மீதான ஆரியத்தாக்குதல் ஊழலற்ற, நேர்மையான தமிழ்நல மக்களாட்சிதான் நமக்குத் தேவை. ஆனால், அதற்கான காலம் இன்னும் கனியவில்லை. எனவே, இருப்பனவற்றுள் ஏற்கத்தக்கதைத்தான் நாம தெரிவு செய்ய வேண்டியுள்ளது. “யார் நல்ல பையன்” என்று கேட்டால், “அதோ கூரை மீது கொள்ளி வைத்துக்கொண்டுள்ளானே அவன்தான் நல்ல பையன்” என்று சொல்லும் நிலையில்தான், நாமும் நம்நாட்டுக் கட்சிகளும் உள்ளன. எனவே, நாம் நம் அளவுகோலை மாற்றி வைத்துக்கொண்டுதான் முடிவெடுக்க வேண்டியுள்ளோம். அதுபோல், தமிழ் நாட்டில் பல கட்சிகள் இருப்பினும் இரு கட்சி…
தக்கவர் சசிகலாவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
தக்கவர் சசிகலாவே! ? அஇஅதிமுகவின் பொதுச் செயலாளராக யார் வரவேண்டும் என்பது அக்கட்சி சார்ந்தது. இதுகுறித்துப் பிறர் கருத்து தெரிவிக்கலாமா? ஆமாம். ஒரு கட்சியின் உட்கட்சி வேலைகுறித்துப் பிறர் கவலைப்படத் தேவையில்லைதான். ஆனால், அஇஅதிமுக ஆளுங்கட்சி. ஆளுங்கட்சியின் முடிவு அரசையும் கட்டுப்படுத்தும். எனவே, அக்கட்சி உறுப்பினர்கள் அல்லாதவர்களும் கருத்து தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கும் பொழுது பலரும் வேண்டுமென்றே திரித்துப் பொய்யைப் பரப்புவதால் நாமும் நம் கருத்துகளைத்தெரிவிக்கலாம். ? ஆனால், அக்கட்சியில் ஒரு பகுதியினரும் அக்கட்சி சாராதவர்களில் பெரும்பகுதியினரும் சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடாது என்றுதானே…
புரட்சி நடிகர் இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி – சி.இலக்குவனார்
இருபதாம் நூற்றாண்டின் இனிய பாரி “கலைஞருள் வள்ளல், காசினி போற்றும் வள்ளலுள் கலைஞர்; வருந்தும் எவர்க்கும் ஒல்லும் வகையில் உடனே உதவும் புரட்சி நடிகர், பொல்லாங்கெதனையும் நடிப்பினுங்கொள்ளா நடிகவேள், நானிலம் இனிதே வாழ என்றும் எண்ணி அன்பும் அருளும் அணியாய்ப் பெற்றவர் இவரால் உயர்ந்தார் எண்ணிலர் என்றும் அண்ணா வழியில் அணியுறச் செல்லல் முந்துறும் தளபதி, மூவா இளைஞர் இராமச்சந்திரன் எனும் பெயரால் எனக்கும் அண்ணன் எவர்க்கும் தோழன் ஒப்பிலாப் பண்பினர், உலகம் போற்ற நடிக்கும் வித்தகர், நடிப்போர் சூழமும் ஐம்பெருங் குற்றமும் அணுகா…
முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள்
முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள் தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஞ்சியார் நினைவு நாளையொட்டி அவரது தீவிர நம்பிக்கையாளர்கள் மொட்டையடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஞ்சியார் சிலை உள்ளது. இச்சிலைக்குப் பெரியகுளம் ஒன்றியப் பெருந்தலைவரும், ஒன்றியச் செயலாளருமான செல்லமுத்து மாலை அணிவித்தார். அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மொட்டையடித்துக்கொண்டனர். மாலை அணிவித்தலின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பெரியவீரன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் சுரேசு, தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர்….